13
February, 2025

A News 365Times Venture

13
Thursday
February, 2025

A News 365Times Venture

Trump: 'நான் அதிபரான முதல் நாளில்…' – ட்ரம்ப் அடுக்கிய 11 விஷயங்கள் என்னென்ன? – அதை செய்வாரா?

Date:

அமெரிக்க அதிபராக இன்று பொறுப்பேற்க உள்ளார் ட்ரம்ப்.

ட்ரம்ப் நான் பதவியேற்ற முதல் நாளில் ‘இதை செய்வேன்’…’அதை செய்வேன்’ என்று அவ்வப்போது கூறிவந்தார். அப்படி அவர் பதவியேற்ற முதல் நாளில் செய்யப்போவதாகக் கூறிய 11 விஷயங்கள்…

கடந்த ஜூலை மாதம், “அமெரிக்கா அல்லாதவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்தால், அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைப்பது தடை செய்யப்படும். இதற்கான நடவடிக்கை நான் அதிபராக பதவியேற்ற முதல் நாளில் செய்யப்படும்” என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், “அதிபராக என்னுடைய முதல் நாளில், திருநங்கை – திருநம்பிகளை ஆதாரிக்கும், அதுக்குறித்து குழந்தைகளுக்கு சொல்லித்தரும் பள்ளிகளுக்கு செல்லும் அரசின் நிதியை தடை செய்வேன்” என்று பேசியிருந்தார்.

ட்ரம்ப்

கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் பிரசாரத்தின் போது, ‘குற்றவாளிகள் அமெரிக்காவிற்கு ஊடுருவதை தடுக்க அமெரிக்க எல்லைகள் நான் அதிபர் ஆன முதல் நாளில் மூடப்படும்” என்று பேசியிருந்தார்.

ட்ரம்ப், கடந்த செப்டம்பர் மாதம், “நான் அதிபராக பதவியேற்ற முதல் நாளில், அரசியல் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து, அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பான ஆவணங்களில் முதல் நாளில் கையெழுத்துவிடுவேன்” என்று கூறியிருந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம், ‘உள்நாட்டு எனர்ஜி சப்ளையை அதிகரிக்க நான் அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்துவேன்” என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், ட்ரம்ப் தான் அதிபரானால் முதல் நாளில் பெரிய அளவிலான வெளிநாட்டினரை அவர்களது நாடுகளுக்கே திருப்பி அனுப்புவது சம்பந்தமான திட்டம் கொண்டுவரப்படும். அது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரியதாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

2023-ம் ஆண்டு, “நான் அதிபராக பதவியேற்றால் முதல் நாளில், அரசுக்கு எதிராக செயல்படும் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாசிஸ்ட் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் வெளியேற்றப்படுவார்கள்” என்று ட்ரம்ப் பேசினார்.

“நான் அதிபராக பதவியேற்ற முதல் நாளில் செய்யப்போகும் பல வேலைகளில், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு 25 சதவிகித இறக்குமதி வரி விதிப்பதும், சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவிகித வரி விதிப்பதும் ஒன்றாகும்” என்று அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுத்தப் பிறகு பேசியிருந்தார்.

கடந்த நவம்பர் மாதம், ‘கமலா ஹாரிஸ் கொண்டுவந்த கட்டாய எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டு உத்தரவை நான் அதிபரான முதல் நாளில் நீக்குவேன்’ என்று ட்ரம்ப் பேசியிருந்தார்.

டிரம்ப், ‘அமெரிக்காவில் டிக் டாக் தடையை தள்ளிப்போடுவேன். அதற்கான உத்தரவுகளை முதல் நாளே பிறப்பிப்பேன்’ என்று கூறியிருந்தார். ட்ரம்பின் கூற்றுக்கு பிறகு, அமெரிக்காவில் டிக் டாக் தடை நீங்கி தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதற்கு டிக்டாக் நிறுவனம் ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளது.

“நான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பே, ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர செயல்படுவேன்” என்று டிவி பேட்டி ஒன்றில் டிரம்ப் கூறியிருந்தார். ட்ரம்பின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாளிலேயே ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கொண்டு வருவதற்காக அந்த நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்’ என்று பேசியிருந்தார்.

இன்று ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற முதல் நாளில் 200 ஆவணங்களில் கையெழுத்திடப்போவதாக கூறப்படுகிறது. அந்த 200-களில் இந்த 11-ம் இடம்பெறலாம்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

IPL: RCB  ನೂತನ ಕ್ಯಾಪ್ಟನ್ ಆಗಿ ರಜತ್ ಪಟಿದಾರ್ ನೇಮಕ

ಬೆಂಗಳೂರು,ಫೆಬ್ರವರಿ,13,2025 (www.justkannada.in): ಮುಂದಿನ ತಿಂಗಳಿನಿಂದ ಐಪಿಎಲ್ ಜ್ವರ ಶುರುವಾಗಲಿದ್ದು, ರಾಯಲ್...

കലൂര്‍ സ്റ്റേഡിയം അപകടം; 46 ദിവസങ്ങള്‍ക്ക് ശേഷം എം.എല്‍.എ ഉമാതോമസ് ആശുപത്രി വിട്ടു

കൊച്ചി: തൃക്കാക്കര എം.എല്‍.എ ഉമാതോമസ് ആശുപത്രി വിട്ടു. 46 ദിവസങ്ങള്‍ക്ക് ശേഷമാണ്...

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மகா. அமைச்சர்; முதல் மனைவியை மறைத்த விவகாரத்தில் நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர் தனஞ்சே...

Ambati Rambabu: వంశీని ఎందుకు అరెస్ట్ చేశారో అర్థం కావడం లేదు..

Ambati Rambabu: గన్నవరం మాజీ ఎమ్మెల్యే వల్లభనేని వంశీని పోలీసులు ఎందుకు...