6
November, 2026

A News 365Times Venture

6
Friday
November, 2026

A News 365Times Venture

"நான் யாரிடமும் கமிஷன் கேட்கவில்லை" – திமுகவினர் மீது சிவகங்கை தவெக எம்எல்ஏ குழந்தை ராணி புகார்

Date:

சிவகங்கையில் தவெக பெண் எம்.எல்.ஏ குழந்தை ராணி மீது 20 சதவீத கமிஷன் புகார் எழுப்பப்பட்டுள்ளதும், தன் மீது பொய்ப் பிரசாரம் செய்யும் 4 திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.11 கோடி திட்டப் பணிகள்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் நடப்பாண்டில் விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகக் கட்டிடம் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பணிகள் அனைத்தும் த.வெ.கவினருக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பணிகளை ஒதுக்கீடு செய்ய 20 முதல் 30 சதவீதம் வரை சிவகங்கை எம்.எல்.ஏ. குழந்தை ராணி மிஷன் கேட்பதாகவும் ஒப்பந்ததாரர்கள் சிலர் கடந்த வாரம் குற்றம்சாட்டினர்.

ஆனால் திமுகவினர் பொய்ப் பிரசாரம் செய்வதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தை ராணி புகார்

எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு

இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, சிவகங்கை த.வெ.க பெண் எம்.எல்.ஏ குழந்தைராணி தனது ஆதரவாளர்களுடன் சென்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் புகார் மனு அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“கடந்த வாரம் சில ஒப்பந்ததாரர்கள் என்னைச் சந்தித்து, விபி-ஜி ராம் ஜி திட்டப் பணிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கேட்டனர். ஆனால், ‘அனைத்து ஒப்பந்தப் பணிகளும் ஆன்லைன் மூலம் நேரடியாகவே எடுக்கப்படுகின்றன; இதில் எங்கள் தலையீடு எதுவுமில்லை’ என்று தெரிவித்துவிட்டேன்.

நான் யாரிடமும் கமிஷன் கேட்கவில்லை. எங்கள் கட்சியும் தலைவரும் எந்தவித முறைகேடும் இன்றி வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறோம்.

என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பொய்ப் பிரசாரம் பரப்பி வரும் திமுகவைச் சேர்ந்த 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வீடியோ ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளேன்”

இவ்வாறு அவர் கூறினார்.

தவெக எம்எல்ஏ குழந்தை ராணிமீது கமிஷன் புகாரும் அதற்கு எம்எல்ஏ தரப்பு மறுப்பும் புகாரும் என மாறிமாறி அளித்து வருவது சிவகங்கை அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇറാന്റെ ബാക്കിയുളള ഭാഗങ്ങള്‍ കൂടി തകര്‍ക്കാന്‍ ഞാന്‍ ആഗ്രഹിക്കുന്നില്ല, എന്നാലെനിക്കത് ചെയ്യേണ്ടി വന്നേക്കാം: ട്രംപ്

വാഷിങ്ടണ്‍: ഇറാനെതിരെ പുതിയ മുന്നറിയിപ്പുമായി യു.എസ് പ്രസിഡന്റ് ഡൊണാള്‍ഡ് ട്രംപ്. ഇറാന്റെ...

‘വോട്ട് ചോരി’ ക്യാമ്പെയ്ന്‍ ബി.ജെ.പിയെ അപകീര്‍ത്തിപ്പെടുത്താന്‍: മോദിജിയെ ജനാധിപത്യപരമായി തോല്‍പ്പിക്കാന്‍ കഴിയില്ലെന്ന് ബോധ്യമുള്ളതിനാലാണ് ഈ നീക്കം: ബി.ജെ.പി

ന്യൂദല്‍ഹി: കോണ്‍ഗ്രസ് രാജ്യവ്യാപകമായി പ്രചരിപ്പിക്കുന്ന ‘വോട്ട് ചോരി’ കാമ്പെയ്ന്‍, ബി.ജെ.പിയുടെയും പ്രധാനമന്ത്രി...

சடலமாக மீட்கப்பட்ட 5 மீனவர்கள்: “புயல் நேரத்தில் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்?" – உதயநிதி

சென்னை காசிமேடு துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 29-ம் தேதி செல்வழகன் என்பவருக்குச்...