29
October, 2026

A News 365Times Venture

29
Thursday
October, 2026

A News 365Times Venture

`முதல்வர் அப்படி உத்தரவிட்டிருக்க மாட்டார்..!' – பேராசிரியர் கலையரசன் கைது குறித்து திருமாவளவன்

Date:

விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “பேராசிரியர் கலையரசன் விடியற்காலை 5 மணிக்குக் கைதுசெய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அது ஏற்புடையதல்ல. தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை குறித்து நடுநிலையோடு நின்று நெடிய கட்டுரையைத் தந்த ஒரு முக்கிய ஆளுமையை காவல்துறை இவ்வாறு நடத்தியிருப்பது ஜனநாயக சக்திகளைக் காயப்படுத்தும் செயல். விசிக சார்பாக இந்த நடவடிக்கைக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவதூறாக எழுதியதாகக் கூறித்தான் கலையரசனை காவல்துறை கைதுசெய்தது.

கலையரசன்

ஆனால், கலையரசனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி யாரோ உருவாக்கிய போலி ஐ.டி மூலமே அந்தப் பதிவு வெளியிடப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த உண்மை வெளிவந்த பிறகு காவல்துறை அவரை விடுவித்துள்ளது. அதிகாலை 5 மணிக்குச் சென்று கைதுசெய்யுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டிருக்க வாய்ப்பில்லை. கைது நடவடிக்கையின்போது கூட்டம் கூடிவிடக் கூடாது என்பதற்காகக் காவல்துறையே தங்களது செயல்பாட்டு முறையின்படி இந்த நேரத்தைத் தேர்வு செய்திருக்கலாம். இருப்பினும் இத்தகைய அதிகாலைக் கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் முன்ஜாமீன் தள்ளுபடியான காரணத்தினால் மட்டுமே விசாரணைக்காக அவரைக் கைதுசெய்ததாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த விவகாரம் தற்போது காவல்துறையின் விசாரணையில் இருக்கும் சூழலில், விசாரணை முழுமையாக முடிவடைவதற்கு முன்பாக கருத்துத் தெரிவிப்பதற்கு எதுவுமில்லை விசாரணை முடியட்டும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ആശുപത്രിയില്‍ അതിക്രമിച്ച് കയറി എസ്.എഫ്.ഐ ജില്ലാ നേതാക്കളെ അക്രമിച്ചു; എം.എസ്.എഫ് നേതാക്കളെ അറസ്റ്റ് ചെയ്യണമെന്ന് നേതൃത്വം

മലപ്പുറം: എസ്.എഫ്.ഐ നേതാക്കളെ എം.എസ്.എഫ് പ്രവര്‍ത്തകര്‍ ആക്രമിക്കുന്ന ദൃശ്യങ്ങള്‍ പുറത്ത്. കാലിക്കറ്റ്...

Story Board: ఇప్పుడు ధనుష్.. నిన్న విజయ్.. సినిమా వాళ్లు లేకుండా తమిళ రాజకీయం నడవదా..?

Story Board: దేశంలో ఉత్తరాదికీ, దక్షిణాదికీ రాజకీయంలో కచ్చితమైన తేడా ఉంది....

ഇസ്രഈല്‍ തെരഞ്ഞെടുപ്പ്; റെക്കോഡ് പോളിങ്ങിനിടെ നാല് അറബ് ലിസ്റ്റ് പ്രവര്‍ത്തകരെ അറസ്റ്റ് ചെയ്തു!

ജറുസലേം: ഇസ്രഈല്‍ പാര്‍ലമെന്റ് തെരഞ്ഞെടുപ്പില്‍ അറബ് പാര്‍ട്ടികളുടെ മുന്നേറ്റത്തിന് പിന്നാലെ റാം...

`நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்; திசை திருப்பவே இந்தச் சோதனை!' – கே.என்.நேரு

முன்னாள் தி.மு.க அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சியில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்...