4
October, 2026

A News 365Times Venture

4
Sunday
October, 2026

A News 365Times Venture

"ஆபாசம், வன்மம், வக்கிரம்…" – ஸ்டாலினைக் கடுமையாகச் சாடும் விஜய்

Date:

தாராபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்யும் வகையில் பேசியிருந்தார்.

அந்தப் பேச்சுக்கு எதிர்ப்புக் கிளம்பி வரும் நிலையில் முதல்வர் விஜய்யும் இப்போது அந்தப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Sathyabama – Vijay

முதல்வர் விஜய் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ”தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவக்கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதை தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்கு தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.

தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்கு தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

OTR: కౌన్ బనేగా ఎమ్మెల్సీ? ఆ లక్కీ లీడర్ ఎవరు?

OTR: కౌన్‌ బనేగా ఎమ్మెల్సీ…? ఆ లక్కీ లీడర్‌ ఎవరు…? స్వయంగా...

ഗ്യാനേഷിന്റെ രാജി: രണ്ടാം ദിനവും തലസ്ഥാനം പ്രതിഷേധച്ചൂടില്‍; 150 പേരെ ദല്‍ഹി പൊലീസ് കസ്റ്റഡിയിലെടുത്തു

ന്യൂദല്‍ഹി: മുഖ്യ തിരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷണര്‍ ഗ്യാനേഷ് കുമാറിന്റെ രാജി ആവശ്യപ്പെട്ട് ഗാന്ധി...