9
September, 2026

A News 365Times Venture

9
Wednesday
September, 2026

A News 365Times Venture

'கல்யாண வீடு, கோவில் திருவிழாலாம்போகணும்; MLA சம்பளத்தை உயர்த்தி கொடுங்க!' – எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

Date:

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வுகள் இன்று நடந்திருந்தது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ‘எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் உயர்வு வேண்டும்’ என கோரிக்கை வைத்திருந்தார்.

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ”தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி தர வேண்டும். டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரவில் எம்.எல்.ஏக்களுக்கு 5 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியாக கொடுக்கிறார்கள்.

நமக்கு 3 கோடிதான் கொடுக்கப்படுகிறது. சிலர் தொகுதி மேம்பாட்டு நிதியை 10 கோடியாக உயர்த்த வேண்டும் என்கிறார்கள். குறைந்தபட்சம் 7 கோடியாகவாது உயர்த்த வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை. முன்னாள் சட்டமன்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை 35000 ரூபாயிலிருந்து 70000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

ஒரு லட்ச ரூபாய் மருத்துவப்படியை 2 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும். அதேமாதிரி, சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தையும் உயர்த்த வேண்டும். ஒரு சட்டமன்ற உறுப்பினர் கோவில் திருவிழா, கல்யாண வீடு என எல்லாவற்றுக்கும் செல்ல வேண்டும். ஒடிசாவில் மூணே முக்கால் லட்சமும் தெலுங்கானாவில் இரண்டரை லட்சம் ரூபாயும் எம்.எல்.ஏக்களுக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது. நம்முடைய எம்.எல்.ஏக்களுக்கும் சம்பள உயர்வு வேண்டும்.’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

വഖഫ് ബോര്‍ഡ്: ഇടത് സര്‍ക്കാരിന്റെ മൂന്ന് വീഴ്ചകള്‍ പ്രശ്‌നമായി; അവര്‍ തെറ്റിധാരണ പടര്‍ത്തുന്നു: നാസര്‍ ഫൈസി കൂടത്തായി

കോഴിക്കോട്‌: വഖഫ് ബോര്‍ഡ് ഭേദഗതിയെ ചെറുക്കാനുള്ള അവസരങ്ങള്‍ കഴിഞ്ഞ എല്‍.ഡി.എഫ് സര്‍ക്കാര്‍...

‘அதுவே பழகிடும்’ ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலைப் பழகிக்கொண்ட உலக நாடுகள்; இப்போது எப்படி சமாளிக்கின்றன?

அமெரிக்காவும், இஸ்ரேலும் நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பம் மிகுந்த ஏவுகணைகளை வைத்து, ஈரானை...

Supreme Court: సీజేపీ నిరసనకారుడికి నోటీసు.. ఎగ్జిక్యూటివ్ మేజిస్ట్రేట్‌పై సుప్రీంకోర్టు ఆగ్రహం

ఢిల్లీ జంతర్‌మంతర్‌లో జరిగిన విద్యార్థుల నిరసనలకు సంబంధించి గౌతమ్ బుద్ధ యూనివర్సిటీకి...

ರೈತರ ವಿಮೆ ಹಣ ಕಟ್ಟದ, ಸೊಸೈಟಿ ಕಾರ್ಯದರ್ಶಿ ವಜಾಕ್ಕೆ ಸಿಎಂ ಡಿ ಕೆ ಶಿವಕುಮಾರ್ ಸೂಚನೆ

ಬೆಂಗಳೂರು, ಸೆಪ್ಟಂಬರ್, 08,2026 (www.justkannada.in): ಬೆಳಗಾವಿಯ ಜೇವರ್ಗಿ ತಾಲ್ಲೂಕಿನ ಇಟ್ಟನಹಳ್ಳಿ...