18
October, 2026

A News 365Times Venture

18
Sunday
October, 2026

A News 365Times Venture

Mettur Dam: `93 ஆண்டுக்கால மேட்டூர் அணை வரலாற்றில் இது 62- வது‌ முறை!' – அதிகாரிகள் சொல்வதென்ன?

Date:

தமிழ்நாட்டில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கும் அதிகமாக சாகுபடி மேற்கொள்ளப்படும் காவிரி ஆற்றுப்படுகையின் உயிர் நாடியாக விளங்குகிறது, மேட்டூர் அணை. சேலம் மாவட்டம், மேட்டூரில் அமைந்துள்ள இந்த பிரமாண்ட அணையில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கான தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் சம்பா சாகுபடிக்கான தண்ணீரை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று காலை திறந்து வைத்தார். 91 அடியாக நிறைந்துள்ள மேட்டூர் அணையில் இருந்து அடுத்த 45 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

முதலமைச்சர் விஜய்

இது குறித்து தெரிவித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், “கேரளா, கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வத்து அதிகரித்து நிரம்பியது. கபினி, கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் விஜய் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12- ம் தேதிதான் அணை திறக்கப்படுவது வழக்கம் என்றாலும் அதிக மழைப்பொழிவு காரணமாக 11 முறை முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் 93 ஆண்டுக்கால வரலாற்றில், காலதாமதமாக 62- வது முறையாக இன்று பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

നല്ല ബസ്സുകളും നല്ല ശൗചാലയവുമുണ്ടാക്കുക; കെ.എസ്.ആര്‍.ടി.സി മൂന്ന് നാല് വര്‍ഷങ്ങള്‍ക്കുള്ളില്‍ ലാഭകരമാകും: സി.എന്‍ വിജയകൃഷ്ണന്‍

കോഴിക്കോട്:നല്ല ബസ്സുകള്‍ ഇറക്കുകയും യാത്രക്കാര്‍ക്കായി ഏറ്റവും വൃത്തിയുള്ളതും ആധുനികവുമായ ശൗചാലയം ഉണ്ടാക്കുകയും...

பிரான்ஸ் கலவரம்: தீக்கிரையான 140 ஆண்டுக்கால வரலாற்றுக் கட்டடம்; சூறையாடப்பட்ட கடைகள்.. பின்னணி என்ன?

பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், பல நகரங்களில்...

Donald Trump: ఫ్రాన్స్‌లో అల్లర్లు.. వలసదారులే కారణమన్న ట్రంప్, ‘సరిహద్దులు మూసేయండి’ అంటూ పిలుపు!

Donald Trump: ఫ్రాన్స్‌లో కొనసాగుతున్న హింసాత్మక ఆందోళనలు, దహనాలు, లూటీలపై అమెరికా...

വോട്ട് മോഷണത്തിന് മോദിയും അമിത്ഷായും ഗ്യാനേഷും നിയമ നടപടി നേരിടേണ്ടി വരും: രാഹുല്‍ ഗാന്ധി

മഡ്ഗാവ്: വോട്ട് മോഷണം നടത്തിയതിന് പ്രധാനമന്ത്രി നരേന്ദ്ര മോദിയും ആഭ്യന്തര മന്ത്രി...