1
October, 2026

A News 365Times Venture

1
Thursday
October, 2026

A News 365Times Venture

2021 – 2026: பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்கள்! எவ்வளவு செலவு தெரியுமா?

Date:

2021 முதல் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரசு கருவூலத்திலிருந்து குறைந்தது ரூ.557.51 கோடி செலவிடப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்களான சஞ்சய் சிங் மற்றும் டாக்டர் வி. சிவதாசன் ஆகியோர் `2021 முதல் பிரதமரின் வெளிநாட்டுப் பயண விவரங்கள், ஒவ்வொரு பயணத்திற்குமான செலவுகள், இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் முதலீட்டு உறுதிகள்’ குறித்த விவரங்களை கோரியிருந்தனர்.

பிரதமர் மோடி

அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் அளித்திருக்கும் பதிலில் “ பிரதமரின் உயர் மட்டப் பயணங்கள், வெளிநாடுகளுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்தவும், இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தவும் பயன்படுகின்றன. தொழில் நுட்பம், கண்டுபிடிப்பு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, ஆற்றல் மற்றும் விநியோகச் சங்கிலி போன்ற துறைகளில் கூட்டாண்மையை ஆழப்படுத்த இப்பயணங்கள் உதவுகின்றன.

அதன் அடிப்படையில் 2021 முதல் 2026 வரை ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளுக்குப் பிரதமர் அதிகாரப்பூர்வ பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

2026 ஜூன் 13-18 தேதிகளில் பிரதமர் மேற்கொண்ட பிரான்ஸ் பயணத்தின் செலவு விவரங்கள் இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படாததால், இந்த மொத்தத் தொகையில் அது சேர்க்கப்படவில்லை. மேலும், 2026-ம் ஆண்டிற்கான பல செலவுப் புள்ளிவிவரங்கள் தற்காலிகமானவை. அனைத்துக் கணக்குகளும் முடிவடைந்த பிறகே அவை இறுதி செய்யப்படும். பயணக் இலக்கு, காலம் மற்றும் தன்மையைப் பொறுத்துச் செலவுகள் மாறுபட்டுள்ளன.

அதிகச் செலவான முக்கியப் பயணங்கள்:

  • பிப்ரவரி 2025 (பிரான்ஸ்): ரூ.25.59 கோடி

  • பிப்ரவரி 2025 (அமெரிக்கா): ரூ.16.54 கோடி

  • ஜூலை 2025 (பிரேசில்): ரூ.17.72 கோடி

  • ஏப்ரல் 2025 (சவுதி அரேபியா): ரூ.15.54 கோடி

  • செப்டம்பர் 2024 (அமெரிக்கா): ரூ.15.33 கோடி

  • ஜூன் 2024 (இத்தாலி): ரூ.14.36 கோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஆண்டுவாரியாகப் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் (2021 – 2026)

2026:

மலேசியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி, பிரான்ஸ், ஸ்லோவாக் குடியரசு, சீஷெல்ஸ், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து. (பிரான்ஸ் பயணத்தின் கணக்குகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை).

2025:

பிரான்ஸ், அமெரிக்கா, மொரிஷியஸ், தாய்லாந்து, இலங்கை, சவுதி அரேபியா, சைப்ரஸ், கனடா, குரோஷியா, கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா, இங்கிலாந்து, மாலைத்தீவு, சீனா, ஜப்பான், பூட்டான், தென்னாப்பிரிக்கா, ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா.(அதிகபட்ச செலவு: பிரான்ஸ் -ரூ.25.59 கோடி, பிரேசில் – ரூ.17.72 கோடி, அமெரிக்கா – ரூ.16.54 கோடி, சவுதி அரேபியா – ரூ.15.54 கோடி).
2024:

ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பூட்டான், இத்தாலி, ரஷ்யா, ஆஸ்திரியா, போலந்து, உக்ரைன், புருனே, சிங்கப்பூர், அமெரிக்கா, லாவோஸ், நைஜீரியா, பிரேசில், கயானா மற்றும் குவைத்.

(அதிகபட்ச செலவு: அமெரிக்கா – ரூ.15.33 கோடி, இத்தாலி – ரூ.14.36 கோடி, ரஷ்யா – ரூ.10.75 கோடி).

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி
இந்தோனேசியாவில் பிரதமர் மோடி

2023:

ஜப்பான், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, அமெரிக்கா, எகிப்து, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, கிரீஸ் மற்றும் இந்தோனேசியா.

(அதிகபட்ச செலவு: அமெரிக்கா – ரூ.22.90 கோடி, ஜப்பான் – ரூ.17.19 கோடி, பிரான்ஸ் – ரூ.13.75 கோடி).

2022:

ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், நேபாளம், ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா.(அதிகபட்ச செலவு: ஜூன் ஜெர்மனி பயணம் – ரூ.14.47 கோடி, மே ஜெர்மனி பயணம் – ரூ.9.44 கோடி, மே ஜப்பான் பயணம் – ரூ.8.69 கோடி).
2021:

வங்கதேசம், அமெரிக்கா, இத்தாலி மற்றும் இங்கிலாந்து.(அதிகபட்ச செலவு: அமெரிக்கா – ரூ.19.63 கோடி, இங்கிலாந்து – ரூ.8.57 கோடி, இத்தாலி – ரூ.6.90 கோடி, வங்கதேசம் – ரூ.1.01 கோடி).

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

പൊലീസ് രാജിനെയും സ്പോൺസർഷിപ്പ് രാജിനെയും ചെറുക്കാൻ ജനകീയ പ്രതിരോധം ഉയരും: എം.വി. ഗോവിന്ദൻ

തിരുവനന്തപുരം: തലസ്ഥാനത്ത് യൂണിവേഴ്സിറ്റി കോളേജിന് മുന്നിൽ വിദ്യാർത്ഥികൾക്ക് നേരെ അരങ്ങേറിയത് പൊലീസിനെ...

'முதல்வர் விஜய்யின் வீட்டுக்கு எதிரே நடைபாதையில் தவெகவினரின் அபாய பேனர்!' – கவனிக்குமா தலைமை?

முதல்வர் விஜய்யின் பட்டினப்பாக்கம் வீட்டுக்கு எதிரே மக்கள் நடப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நடைமேடையில்...

Ind Vs WI: భారీ లక్ష్య ఛేదనలో చరిత్ర సృష్టించిన గిల్ సేన.. విండీస్‌పై టీమిండియా ఘన విజయం.. సిరీస్ కైవసం..

గౌహతిలోని బర్సపరా క్రికెట్ స్టేడియంలో వెస్టిండీస్‌‌తో జరిగిన రెండో వన్డే మ్యాచ్‌లో...

ಆಲಮಟ್ಟಿ ಅಣೆಕಟ್ಟೆ ಎತ್ತರ ಹೆಚ್ಚಳ: ಬಬಲೇಶ್ವರದ ನಾಲ್ಕು ಗ್ರಾಮಗಳಿಗೆ ತುರ್ತು ಪರಿಹಾರಕ್ಕೆ ಸಚಿವ ಎಂ.ಬಿ ಪಾಟೀಲ್ ಆಗ್ರಹ

ಬೆಂಗಳೂರು,ಅಕ್ಟೋಬರ್‌,1,2026 (www.justkannada.in) ಆಲಮಟ್ಟಿ ಅಣೆಕಟ್ಟು ಎತ್ತರ ಹೆಚ್ಚಳದಿಂದ ತಾವು ಪ್ರತಿನಿಧಿಸುತ್ತಿರುವ...