7
October, 2026

A News 365Times Venture

7
Wednesday
October, 2026

A News 365Times Venture

"பேச்சுவார்த்தை எனும் பிழையான முடிவை விஜய் கைவிட வேண்டும்" – சீமான்

Date:

காவிரி ஆற்றின் குறுக்கே அணைக் கட்ட முயன்று வருகிறது கர்நாடகா. இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வதாக கூறப்பட்டது.

ஆனால், இன்று கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், “இப்போதைக்கு விஜய் கர்நாடகா வரவேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே விஜய் கர்நாடகா செல்வது சம்பந்தமாக எதிர்ப்புகள் எழுந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“காவிரி நதிநீர் உரிமைக்காக கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த முனையும் முதல்வர் விஜய் அவர்களின் செயல் பெருத்த ஏமாற்றமளிக்கிறது.

காவிரி ஆறு

சட்டப்பூர்வமானத் தீர்ப்புகளையோ மதித்ததில்லை!

கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை என இறங்கிச் சென்று, தமிழ்நாட்டின் பக்கமிருக்கும் சட்டப்பூர்வ நியாயங்களைப் பறிகொடுக்கத் துடிக்கும் தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

காவிரி நதிநீர் உரிமை விவகாரத்தில் கர்நாடகா அரசு எந்தக் காலத்திலும் நதிநீர் பங்கீட்டு விதிகளையோ, ஒப்பந்தங்களையோ, சட்டப்பூர்வமானத் தீர்ப்புகளையோ மதித்ததில்லை.

முந்தையக் காலங்களில், காவிரி நதிநீருக்காக எத்தனையோ முறை தமிழ்நாட்டு அரசின் சார்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் எந்தத் தீர்வும் இதுவரை எட்டப்பட்டதில்லை.

கர்நாடக அரசின் முடிவைத் திரும்பப் பெறச் செய்துவிடுவாரா முதல்வர் விஜய்?

உச்ச நீதிமன்ற உத்தரவையும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பையுமென சட்டத்தையே மதிக்காது, சண்டித்தனம் செய்யும் கர்நாடக அரசைப் பேச்சுவார்த்தையின் மூலம் வழிக்குக் கொண்டு வந்துவிட முடியுமென தவெக அரசு நினைத்தால், அதனைப் போல மடமைத்தனம் வேறில்லை.

கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முடிவைத் திரும்பப் பெறச் செய்துவிடுவாரா முதல்வர் விஜய்?

காவிரி நதிநீரிலும், தென்பெண்ணையாற்றிலும் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடக அரசின் படுபாதகச் செயல்பாட்டை நிறுத்தச் செய்வாரா?

இப்பேச்சுவார்த்தையின் மூலம் என்ன சாதித்துவிட முடியும்?

சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை

பேச்சுவார்த்தை எனும் பிழையான முடிவை..!

காவிரி நதிநீர்ப்பங்கீட்டில் தமிழ்நாட்டுக்குள்ள சட்டப்பூர்வ உரிமையை முழுமையாக மறுக்கும் கர்நாடக அரசிடம் பேசுவதற்கு இனியென்ன இருக்கிறது?

உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் சொல்லிக் கேட்காத கர்நாடக அரசு, முதல்வர் விஜய் சொன்னவுடன் கேட்டுவிடுமா?

தவெக அரசு, பேச்சுவார்த்தை எனும் பிழையான முடிவை முழுமையாகக் கைவிட்டு, சட்டப்போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் செய்வதே ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பாக இருக்கும்.

ஆகவே, காவிரி நதிநீர்ப்பங்கீட்டுக்காக கர்நாடகா சென்று, பேச்சுவார்த்தை நடத்தும் தவறான முடிவை முதல்வர் விஜய் அவர்கள் முழுமையாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

விவசாயச் சங்கங்கள், காவிரி நதிநீர் உரிமைக்காகப் போராடும் மண்ணுரிமைப்போராளிகள், எதிர்க்கட்சிகள் என எல்லோரது எதிர்ப்பையும் மீறி கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முயன்றால், போராடிப் பெற்ற உரிமையைக் காவுகொடுத்த வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்”.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ആര്‍.എസ്.എസ് ഗോബാക്ക്, സംഘി ഗോ ബാക്ക്; കാസര്‍ഗോഡ് കേന്ദ്രസര്‍വകലാശാലയില്‍ ഷൂ ഉയര്‍ത്തിപ്പിടിച്ച് പ്രതിഷേധിച്ച് വിദ്യാര്‍ത്ഥികള്‍

കാസര്‍ഗോഡ്: കാസര്‍ഗോഡ് കേന്ദ്ര സര്‍വകലാശാലയില്‍ ആര്‍.എസ്.എസ് നേതാക്കളെ പങ്കെടുപ്പിച്ചുകൊണ്ട് നടത്തുന്ന, വന്ദേമാതരം...

"துரோக அமைப்புடன் சேர்ந்து செயல்பட முடியாது; திமுக தனித்தே போராடும்" – யாரைச் சொல்கிறார் RS பாரதி?

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்தும், பா.ஜ.க அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும்...

Shreyas Iyer: సెంచరీతో శ్రేయాస్ అయ్యర్ వీర విహారం.. వెస్టిండీస్ చిత్తు చిత్తు.. భారత్ ఘన విజయం..

లక్నోలోని ఏకనా క్రికెట్ స్టేడియంలో వెస్టిండీస్‌తో జరిగిన తొలి టీ20 మ్యాచ్‌లో...

ಹಾಲಿನ ದರ 8 ರೂಪಾಯಿಯಷ್ಟು ಏರಿಕೆಗೆ ನಿರ್ಧಾರ-ಸಚಿವ ಪುಟ್ಟರಂಗಶೆಟ್ಟಿ

ಚಾಮರಾಜನಗರ,ಅಕ್ಟೋಬರ್,7,2026 (www.justkannada.in): ರಾಜ್ಯದಲ್ಲಿ ಹಾಲಿನ ದರವನ್ನು 8 ರೂಪಾಯಿಯಷ್ಟು ಏರಿಕೆ...