18
August, 2026

A News 365Times Venture

18
Tuesday
August, 2026

A News 365Times Venture

மாணவர்கள் போராட்டம்: `ஆணி லத்தி… கற்கள் நிரம்பிய லாரி' – டெல்லி நீதிமன்றத்தில் பரபரத்த வாதம்!

Date:

காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டம் தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீர் தேர்வால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியில், பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தினர். அது தொடர்பாக வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

டெல்லி மாணவர்கள் போராட்டம்

அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஹரிஹரன், “அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அமைதியான முறையில் போராடும் உரிமையைப் பயன்படுத்தியே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. ஆனால், அங்கு நடந்த மனிதநேயமற்ற சம்பவங்களை விவரிக்க முடியாது. காவல்துறையினர் பெண்களின் உணர்வுப்பூர்வமான உறுப்புகளில் லத்திகளால் தாக்கியுள்ளனர். பல பெண்கள் காவல்துறையினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். 90-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் படுகாயமடைந்துள்ளனர். காவல்துறையினருக்குக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மற்றொரு வழக்கறிஞரான கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், “போராட்டத்தின் போது விதிகளுக்கு மாறாகக் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் மீதும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்ட வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. காவலர்கள் ஆணி அடிக்கப்பட்ட லத்திகளைப் பயன்படுத்தியுள்ளனர். சிவில் உடையில் வந்த டெல்லி காவல்துறையினர் மாணவர்களைத் தாக்கியுள்ளனர். மேலும், போராட்டக் களத்திற்கு அருகே கற்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று முன்கூட்டியே நிறுத்தப்பட்டிருந்தது. போராட்டக்காரர்கள் மீது பழியைப் போடுவதற்காகவே காவல்துறை இந்தச் சதியைச் செய்துள்ளது. எங்களிடம் 110 வீடியோ ஆதாரங்கள் உள்ளன” என்று அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்தார்.

cjp protest in delhi
cjp protest in delhi

இதற்குப் பதில் அளித்து வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.ராஜு, “சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களை மட்டுமே மனுதாரர்கள் நம்புகிறார்கள். போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதில் பல காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர். அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களைச் சில அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த மனுக்கள் வெறும் ‘விளம்பர வெளிச்சத்தை’ப் பெறுவதற்காக மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் நீதிமன்றத்தை அணுகவில்லை. எனவே, இந்த மனுவை விசாரிக்கக் கூடாது” என்று வாதிட்டார்.

மத்திய அரசின் வாதத்தைக் கடுமையாக மறுத்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா, “பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபரும் தனித்தனியாகச் சென்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இது ஏதோ ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல. பொது நலன் சார்ந்த வழக்கில் கேள்விகள் எழுப்பப்படும்போது, இதை வெறும் ‘விளம்பர மனு’ என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

நீதிபதி டி.கே. உபாத்யாயா
நீதிபதி டி.கே. உபாத்யாயா

தொடர்ந்து நீதிபதி, “மனுதாரர்களின் குற்றச்சாட்டுகள் மற்றும் வீடியோக்களின் உண்மைத்தன்மையை இந்தக் கட்டத்தில் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்த முடியாது. எனவே, இது குறித்து மத்திய அரசும் டெல்லி காவல்துறையும் 4 வாரங்களுக்குள் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அன்றைய தினம் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் அனைத்து வீடியோ பதிவுகளையும் Standard Operating Procedure (SOP) விதிகளின்படி காவல்துறையினர் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 11-ம் தேதி நடக்கும்.” என உத்தரவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മുഖ്യമന്ത്രിയുടെ അന്തസ് കാറ്റില്‍ പറത്തി; വോട്ട് ചെയ്തവര്‍ക്ക് പോലും ദഹിക്കാത്ത കാഴ്ച: നടി തൃഷയ്ക്ക് മുന്‍ നിരയില്‍ സീറ്റ് നല്‍കിയതില്‍ ഡി.എം.കെ

ചെന്നൈ: തമിഴ്‌നാട് സ്വാതന്ത്ര്യ ദിനാഘോഷത്തില്‍ നടി തൃഷ കൃഷ്ണന്‍ പങ്കെടുത്തതില്‍ മുഖ്യമന്ത്രി...

'கைவிட்ட காவல்துறை; கட்டுக்கடங்காத கூட்டம்… உயிர்பிழைத்து வந்ததே..!'- விசிக மாநாட்டில் நடந்ததென்ன?

வி.சி.க-வின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு கட்டுக்கடங்காத கூட்டத்தால் பாதியிலேயே கைவிடப்பட்டதும்,...

ವಿಧಾನಸಭೆ ಡೆಪ್ಯೂಟಿ ಸ್ಪೀಕರ್ ಆಗಿ ಮಂಕಾಳ ವೈದ್ಯ, ಪರಿಷತ್ ಉಪಸಭಾಪತಿಯಾಗಿ ಉಮಾಶ್ರೀ ಆಯ್ಕೆ

ಬೆಂಗಳೂರು,ಆಗಸ್ಟ್,18,2026 (www.justkannada.in):  ಕರ್ನಾಟಕ ವಿಧಾನಸಭೆಯ ಉಪಸಭಾದ್ಯಕ್ಷರಾಗಿ ಭಟ್ಕಳ ಶಾಸಕ ಮಂಕಾಳ...