10
July, 2026

A News 365Times Venture

10
Friday
July, 2026

A News 365Times Venture

ITR Filing சீசன் இது; இன்னும் ஆதார் – பான் எண்ணை இணைக்கவில்லையா? என்ன, எப்படி செய்யலாம்? | How to

Date:

ஆதார் கார்டும், பான் கார்டும் இணைக்க வேண்டும். அப்படியில்லை என்றால், பான் கார்டு செல்லாது என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த வலியுறுத்தல் எப்போது முக்கியமோ, இல்லையோ, இப்போது இதை கட்டாயம் கவனிக்க வேண்டும்.

வருமான வரி ரீஃபண்ட், அதற்கான வரி, TDS போன்றவற்றிற்கு பான் கார்டு மிக மிக முக்கியம். அதனால், இப்போதாவது பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைத்துவிடுவது நல்லது.

ஒருவேளை, இணைக்காமல், பான் கார்டு செல்லாமல் போய்விட்டால், ரீஃபண்டிற்கு நாம் தான் படாதபாடு பட வேண்டியதாக இருக்கும்.

பான் அட்டை

ஆதார் – பான் இணைப்பிற்கான இலவச காலக்கெடு முடிந்துவிட்டாலும், இப்போது கட்டணம் செலுத்தி ஆதார் – பான் இணைக்க முடியும்.

அது எப்படி?

ஆதார் – பான் கார்டை இணைப்பதற்கு முன், அதற்கான கட்டணத்தை முதலில் கட்ட வேண்டும். அதற்கான நடைமுறை…

> e-filing வலைதளத்திற்குள் செல்லவும்.

> ‘Home’ பேஜில் உள்ள ‘Quick Links’-ல் உள்ள ‘Link Aadhaar’-ஐ கிளிக் செய்யவும்.

> அதில் பான் மற்றும் ஆதார் விவரங்களைப் பதிவிட்டு, ‘Validate’-ஐ தேர்ந்தெடுக்கவும்.

> அதன் பிறகு வரும் ‘Continue to Pay Through e-Pay Tax’ ஆப்ஷனை தொடவும்.

> இப்போது பான் எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும். இப்போது OTP வரும். அதை பதிவிட்டப் பிறகு, ‘e-Pay Tax’ பகுதிக்குள் செல்லவும்.

> தற்போதைய நடப்பு வரி ஆண்டு அல்லது நிதியாண்டைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆதார் கார்டு| Aadhar Card
ஆதார் கார்டு | Aadhar Card

> இங்கே Tax Payment > Fee for delay in Linking PAN with Aadhaar கொடுக்கவும்.

> இங்கே தானாகவே கட்டணத் தொகையாக ரூ.1,000 நிரப்பப்பட்டிருக்கும். உங்களுக்கு தோதான பேமெண்ட் முறையை கிளிக் செய்து பேமெண்ட் பண்ணவும்.

இதன் பிறகு தான், ஆதார் – பான் எண்ணை இணைக்க முடியும்.

> இப்போது மீண்டும் e-filing-ன் ஹோம் பேஜிற்குள் வரவும்.

> Quick Links > Link Aadhar-ஐ கிளிக் செய்யவும்.

> பான், ஆதார் எண்ணை பதிவிட்டு, ‘Validate’ கொடுக்கவும்.

> கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டதும், ‘Continue’-ஐ கிளிக் செய்யுங்கள்.

> அங்கே கேட்கும் தகவல்களை உள்ளிட்டு ‘Submit’ கொடுக்கவும்.

> இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை உள்ளிட்டு கொள்ளவும்.

> இதன் பிறகு, ஆதார் – பான் இணைப்பிற்கான கோரிக்கை வெற்றிகரமாக Submit ஆகி விடும்.

ஆதார் - பான் கார்டு இணைப்பு
ஆதார் – பான் கார்டு இணைப்பு

ஆதார் – பான் இணைப்பு சில மணிநேரங்கள் முதல் 7 வேலை நாள்களுக்கு ஆகிவிடும். இணைப்பு முடிந்துவிட்டதா என்பதை தெரிந்துகொள்ள…

> மீண்டும் e-filing வலைதளம்.

> Quick Links > Link Aadhaar/View Status ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

> பான், ஆதார் எண்களை உள்ளிடவும்.

> ‘View Link Aadhaar Status’-ஐ தேர்ந்தெடுத்தால், லிங்க் ஸ்டேட்டஸ் தெரிந்துவிடும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മുഖ്യമന്ത്രിയെ സന്ദര്‍ശിച്ച് ആര്‍.വി ബാബുവും ശശികലയും; ആവശ്യങ്ങള്‍ മുഖ്യമന്ത്രി അനുഭാവപൂര്‍വം കേട്ടെന്ന് ആര്‍.വി ബാബു

തിരുവനന്തപുരം: മുഖ്യമന്ത്രി വി.ഡി. സതീശന് വിവിധ ആവശ്യങ്ങള്‍ ഉന്നയിച്ചുള്ള നിവേദനം നല്‍കിയതായി...

"தென்னிந்தியர்களும் வட இந்திய மொழி ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும்"- ஆளுநர் அர்லேகர் பேச்சு

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்ச்சி...

Jangaon: మద్యం మత్తులో హల్‌చల్.. బస్టాండ్ నుంచి ఆర్టీసీ అద్దె బస్సును ఎత్తుకెళ్లిన వ్యక్తి

Jangaon: జనగామ జిల్లాలో మద్యం మత్తులో ఓ వ్యక్తి చేసిన నిర్వాకం...

Gen Z ಪೀಳಿಗೆಗೆ ಇತಿಹಾಸ ಪರಿಚಯಿಸಲಿ “ಮೈಸೂರು ದಸರಾ” : ಡಿಸಿಎಂ ಜಿ. ಪರಮೇಶ್ವರ್ ಸಲಹೆ.

  ಬೆಂಗಳೂರು, ಜು.10: ನಾಡಿನ ಪರಂಪರೆ, ಸಂಸ್ಕೃತಿ ಮತ್ತು ಇತಿಹಾಸವನ್ನು ಮುಂದಿನ...