25
June, 2026

A News 365Times Venture

25
Thursday
June, 2026

A News 365Times Venture

'முதலீட்டாளர்களிடம் திமுக அரசு பணம் கேட்டதா?' – கவனம் பெறும் ஆந்திர அமைச்சரின் ட்வீட்!

Date:

தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திராவிற்குச் சென்றுவிட்டன என்கிற பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா நேற்று முன்தினம் (ஜூன் 22), ”திமுக ஆட்சியில் செமிகண்டக்டர் நிறுவன முதலீடுகள் குஜராத்திற்குச் சென்றன. டொயோட்டா வாகனத் துறை நிறுவனம் கர்நாடகாவிற்குச் சென்றது” என்று சில நிறுவனங்களைப் பட்டியலிட்டார்.

கீர்த்தனா – டி.ஆர்.பி.ராஜா

இதற்குப் பதிலளிக்கும் விதமான நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

இந்த நிலையில், ஆந்திரா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷின் எக்ஸ் தளப் பதிவு ஒன்று கவனம் பெற்றுள்ளது.

அதில் நாரா லோகேஷ், “அரசியல் என்பது எவ்வளவு இரக்கமற்றதாக இருக்கக்கூடும் என்பதைப் பற்றி நான் பேசினேன்.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தைய திமுக அரசுடன் நாங்கள் மிகக் கடுமையாகப் போட்டியிட்டோம். சிலவற்றை வென்றோம், சிலவற்றை இழந்தோம்.

ஆனால், முதலீட்டாளர்கள் யாரும் தங்களிடம் அரசு பணம் கேட்டதாகக் குற்றம் சாட்டி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.

பாராட்ட வேண்டிய விஷயங்களைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். திமுக அரசு முதலீட்டு செயல்முறைகளை மிகவும் சுத்தமாகவும், தொழில்முறையாகவும் நடத்தியது.

அது நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எ.வ.வேலு: `இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக' – DVAC ரெய்டு குறித்து ஸ்டாலின்

கடந்த தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. அவர் அமைச்சராக...

ಹೊಸ ವಿದ್ಯುತ್ ಸಂಪರ್ಕಕ್ಕೆ OC ಪಡೆಯುವುದರಿಂದ ವಿನಾಯಿತಿ: ಸದುಪಯೋಗಕ್ಕೆ ಸೆಸ್ಕ್‌ ಮನವಿ

ಮೈಸೂರು, ಜೂನ್,24, 2026 (www.justkannada.in):  ಹೊಸದಾಗಿ ನಿರ್ಮಿಸಿರುವ ಮನೆಗಳಿಗೆ ಶಾಶ್ವತ...