26
May, 2026

A News 365Times Venture

26
Tuesday
May, 2026

A News 365Times Venture

"பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் SCAM; ஏமாற்றங்களுக்கு தயாரா இருக்கணுமா CM saar?" – உதயநிதி கேள்வி

Date:

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நேற்று (மே.25) அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் பயிர்கடன் தள்ளுபடி குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

முதல்வர் விஜய்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.

தேர்தல் பிரசாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.

ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.

ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

30 ദിവസം പരോള്‍; ഗുര്‍മീത് വീണ്ടും പുറത്ത്: 6 വര്‍ഷത്തിനിടെ 16-ാം തവണ

രോഹ്തക്: ബലാത്സംഗക്കേസില്‍ ശിക്ഷിക്കപ്പെട്ട് രോഹ്തക്കിലെ സുനാരിയ ജയിലില്‍ കഴിയുന്ന സ്വയം പ്രഖ്യാപിത...

AMAs 2026: అమెరికన్ మ్యూజిక్ అవార్డ్స్‌లో దుమ్మురేపిన BTS.. మూడు అవార్డులతో సెన్సేషన్..!

AMAs 2026 BTS: ప్రపంచవ్యాప్తంగా కోట్లాది అభిమానులను ఉన్న కే-పాప్ సూపర్...

ಸಿಎಂ ,ಡಿಸಿಎಂ ಜೊತೆ ಹೈಕಮಾಂಡ್ ನಾಯಕರ ಮೀಟಿಂಗ್ ಆರಂಭ

ನವದೆಹಲಿ,ಮೇ,26,2026 (www.justkannada.in):  ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಮತ್ತು ಡಿಸಿಎಂ ಡಿಕೆ ಶಿವಕುಮಾರ್...

അന്‍സിബയുടെ മനസില്‍ ആരോ വിഷം കുത്തിവെച്ചിട്ടുണ്ട്; അമ്മ എക്‌സിക്യൂട്ടീവ് കമ്മിറ്റി മുഴുവന്‍ പിരിച്ച് വിടണം: മല്ലികാ സുകുമാരന്‍

കൊച്ചി: താരസംഘടനായ അമ്മയുമായി ബന്ധപ്പെട്ട വിഷയത്തില്‍ രൂക്ഷ വിമര്‍ശനവുമായി നടി മല്ലികാ...