26
May, 2026

A News 365Times Venture

26
Tuesday
May, 2026

A News 365Times Venture

எம்‌.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார்! – பின்னணி என்ன?

Date:

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க தரப்பில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயக்குமார். அதேபோல் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சத்யபாமா. இருவரும் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரைச் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். த.வெ.க- வில் இணைந்து மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. எஸ்.பி வேலுமணி அணியில் இவர்கள் இடம்பெற்று வந்தனர். அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த பெருவாரியான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் ஒரே மாதத்தில் தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்திருக்கும் செயல் அரசியல் களத்தில் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.

ஜெயக்குமார்

இதன் பின்னணி குறித்து நம்மிடம் பகிர்ந்த த.வெ.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவர், “மற்ற கட்சி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு கொள்கை நிலைப்பாட்டில் உள்ளனர். த.வெ.க அரசின் முக்கிய கொள்கை முடிவுகளால் ஆட்சிக்கு சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் உட்காருவதே நல்லது. வி.சி.க, கம்யூனிஸ்ட்களை நம்ப முடியாத சூழல் இருக்கிறது. த.வெ.க எம்.எல்.ஏ- க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. எஸ்.பி வேலுமணி அணியில் சென்ற எம்.எல்.ஏ- க்களின் பதவி தகுதி நீக்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அ.தி.மு.க- வில் எதிர்காலம் உண்டு என்று நம்பும் எம்.எல்.ஏ -க்கள் சிலர் எடப்பாடி பழனிசாமி பக்கம் மீண்டும் சென்றிருக்கிறார்கள். முந்திக்கொண்ட இந்த எம்.எல்.ஏ – க்கள் எங்கள் பக்கம் வந்திருக்கிறார்கள். திருச்சி கிழக்கு உட்பட மொத்தம் 4 தொகுதிகள் காலியாகி உள்ளன. இன்னும் சில எம்.எல்.ஏ- க்கள் ராஜினாமா செய்ய இருக்கிறார்கள்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

പ്ലസ് വണ്‍ പ്രവേശനം; ബാച്ചുകളും സീറ്റുകളും വര്‍ധിപ്പിച്ചു

തിരുവനന്തപുരം: സംസ്ഥാനത്ത് പ്ലസ് വണ്‍ സീറ്റുകള്‍ വര്‍ധിപ്പിച്ചു. അധിക സീറ്റുകളും ബാച്ചുകളും...

Bengal: 15 ఏళ్లు ఆలస్యమైన ప్రాజెక్ట్ 15 రోజుల్లో పూర్తి

పశ్చిమ బెంగాల్‌లో బీజేపీ ప్రభుత్వం ఏర్పడగానే చకచకా పనులు జరిగిపోతున్నాయి. తాజాగా...

ಸಿಎಂ ಸಿದ್ದು ಸು”ಭದ್ರ”; ಡಿಕೆಶಿಗೆ “ಗೃಹ”, ಡಿಕೆಸುಗೆ “ರಾಜ್ಯಸಭಾ” ಸ್ಥಾನ..? ಹೈಕಮಾಂಡ್‌ ತಂತ್ರ .!

ಬೆಂಗಳೂರು: ರಾಜ್ಯ ಕಾಂಗ್ರೆಸ್‌ನಲ್ಲಿ ಮತ್ತೆ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಹುದ್ದೆ ಕುರಿತ ಚರ್ಚೆಗಳು...