22
April, 2026

A News 365Times Venture

22
Wednesday
April, 2026

A News 365Times Venture

`ராயபுரத்தால் நான்… ராயபுரத்துக்காக நான்!' – `இஸ்லாமியர்களின் செல்லப்பிள்ளை’ டி.ஜெயக்குமார்

Date:

ராயபுரத்தில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ஜெயக்குமார் ஏழாவது முறையாகத் தேர்தல் களத்தில் இருக்கிறார். “கடந்த ஐந்து முறையைக் காட்டிலும், வரும் தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்று, ஆறாவது முறையாக இமாலய வெற்றிபெறுவார்.

ராயபுரம் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும், அவ்வளவு ஏன்… மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் ஆதரவுகூட அண்ணன் ஜெயக்குமாருக்கே இருக்கிறது” என்கிறார்கள் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள்.

ராயபுரம் தொகுதியில் தீவிர பிரசாரம் செய்துகொண்டிருந்த அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ராயபுரம் மக்கள் உங்களுக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும்?

“ராயபுரம் தொகுதியில் ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருந்த சமயத்தில் தொகுதியின் வளர்ச்சியை உறுதிசெய்தவன் நான். அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த போஜராஜன் மேம்பாலத்தை ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது தி.மு.க. கிழக்கு கல்லறை சாலை, மூலக்கொத்தளம் குடியிருப்பு இவையெல்லாம் நான் கொண்டுவந்தவைதான்.

டி.ஜெயக்குமார்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தொடங்கி வீடற்ற அனைவருக்கும் புதிய வீடுகள் கிடைக்கச் செய்வேன்; மீனவர்கள் நலனை உறுதிசெய்வேன்; தரமான சாலைகள், சுத்தமான குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். தொகுதியில் அதிகரித்திருக்கும் போதைப்பொருள் புழக்கத்தை அடியோடு ஒழிப்பேன்.”

தொகுதியில் அடர்த்தியாக இருக்கும் இஸ்லாமியர்கள் வாய்ப்பு உங்களுக்குப் பின்னடைவு என்கிறார்களே?

“அப்படி ஒரு போலியான பிம்பத்தைக் கட்டமைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், தொகுதியில் இருக்கும் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களுமே வெளிப்படையாகவே எனக்கு ஆதரவு தெரிவிப்பதைச் செல்லும் இடங்களிலெல்லாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ராயபுரத்தின், அதிலும் இஸ்லாமியர்களின் செல்லப்பிள்ளை நான். என்மீது சாதி, மதச் சாயம் பூச நினைக்கும் அனைவரின் முகத்திலும் ராயபுரம் சிறுபான்மையின மக்கள் கரியைப் பூசுவதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள்.”

டி.ஜெயக்குமார்

இந்த முறை உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

“இது எனது சொந்தத் தொகுதி. இங்கே இருக்கும் மக்கள் அனைவரும் என் சொந்த பந்தங்கள். எதிர்பாராதவிதமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியைத் தழுவியிருந்தாலும், என்னைவிட என் ராயபுரம் மக்களே ‘உங்களைப் போய் தோக்கடிச்சுட்டோமே…’ என்று அதிக வருத்தமடைந்தார்கள். தேர்தலுக்காக மட்டுமே நான் தொகுதிக்குச் செல்லவில்லை. தோல்வியே அடைந்திருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளும், `ராயபுரத்தால் நான், ராயபுரத்துக்காகவே நான்…’ என்று தொகுதியில் மக்களுடன் மக்களாகவே இருந்திருக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் பல துயரங்களைப் பார்த்துவிட்டார்கள். இனி ஒருபோதும் ராயபுரத்தில், வேறு யாருக்கும் வாய்ப்புகள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கூடவே, மக்கள் வரவேற்பைப் பார்க்கும்போது எதிர் வேட்பாளர்களுக்கு டெபாசிட் கிடைப்பதே சந்தேகம்தான்” என்கிறார் குதூகலத்துடன்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

എന്തിനാണ് തീകൊണ്ട് കളിക്കുന്ന ഇത്തരം പൂരങ്ങള്‍; വെടിക്കെട്ട് ദുരന്തത്തില്‍ ആര്‍. ശ്രീലേഖ

തിരുവനന്തപുരം: തൃശ്ശൂര്‍മുണ്ടത്തിക്കോട് വെടിക്കെട്ട് അപകടത്തിന്റെ പശ്ചാത്തലത്തില്‍ പൂരങ്ങളിലെ അപകടകരമായ ആഘോഷങ്ങള്‍ക്കെതിരെ വിമര്‍ശനവുമായി...

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? – அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை...

Kharge vs BJP: మోడీ టెర్రరిస్ట్.. ఖర్గే వ్యాఖ్యలపై ఈసీకి బీజేపీ ఫిర్యాదు

ప్రధాని మోడీని ఉద్దేశించి కాంగ్రెస్ అధ్యక్షుడు మల్లిఖార్జున ఖర్గే చేసిన వ్యాఖ్యలు...

ಪ್ರಧಾನಿ ಮೋದಿ ವಿರುದ್ದ ಆಕ್ಷೇಪಾರ್ಹ ಹೇಳಿಕೆ: ಖರ್ಗೆ ಅವರನ್ನ ವಜಾ ಮಾಡಿ-ಆರ್.ಅಶೋಕ್

ಬೆಂಗಳೂರು,ಏಪ್ರಿಲ್,22,2026 (www.justkannada.in): ಪ್ರಧಾನಿ ಮೋದಿ ಅವರ ಬಗ್ಗೆ ಅಕ್ಷೇಪಾರ್ಹ ಹೇಳಿಕೆ...