17
April, 2026

A News 365Times Venture

17
Friday
April, 2026

A News 365Times Venture

"தேசப்பற்றை பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்.!" – பாஜக எம்.பி-க்கு பதிலடி கொடுத்த ஆ.ராசா

Date:

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவிற்கு திமுக எம்.பி ஆ.ராசா கொடுத்த பதிலடி இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அரசுத் தரப்பு முன்வந்தது.

பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா

இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைபிடித்த மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சத்தை அவர்கள் முன்வைத்தனர்.

எதிர்க்கட்சிகளின் அமளியால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அந்தவகையில் கர்நாடக பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா லோக் சபாவில், திமுக பிரிவினைவாதம் பேசிவருவதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் தேஜஸ்வி சூர்யாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஆ.ராசா, “1971-இல் பாகிஸ்தான் போர் தொடுத்தபோது நாட்டைக் காக்க ரூ.6 கோடி நிதி கொடுத்தோம். இது மற்ற மாநிலங்களை விட அதிகம்.

1999ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கார்கில் போருக்காக கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு ரூ.100 கோடி கொடுத்தது.

 ஆ. ராசா
ஆ. ராசா

நாட்டுப்பற்றை அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுக்க தேவையில்லை. நாங்களும் தேசத்திற்காகவே நிற்கிறோம். ஒரே விஷயம் என்னவென்றால் நாங்கள் தனித்த அடையாளத்துடன் இருக்க விரும்புகிறோம்.

நீங்கள் இந்தி, சம்ஸ்கிருதத்தைத் திணிக்கும்போது அதை எதிர்க்கிறோம்… மாநில சுயாட்சிக்கு மரியாதை கொடுக்காதபோது அதை எதிர்க்கிறோம்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഹരിയാന കുരുക്ഷേത്ര എൻ.ഐ.ടിയിൽ വീണ്ടും ആത്മഹത്യ; ഒരു മാസത്തിനിടെ മൂന്നാമത്തേത്

ചണ്ഡീഗഡ്: ഹരിയാന എൻ.ഐ.ടിയിൽ വീണ്ടും ആത്മഹത്യ. ഒരു മാസത്തിനിടെ മൂന്നാമത്തെ ആത്മഹത്യയാണിത്....

Vaibhav Sooryavanshi: వైభవ్ సూర్యవంశీ కారణంగా.. బీసీసీఐకి కొత్త తలనొప్పి స్టార్ట్.. ఎందుకంటే..

బీహార్‌కు చెందిన వైభవ్ సూర్యవంశీ కేవలం 13 ఏళ్ల వయసులోనే భారత...

ರಕ್ಷಣೆ ಕೋರಿ ಮೈಸೂರು ಎಸ್ ಪಿ ಕಚೇರಿ ಮೆಟ್ಟಿಲೇರಿದ ಪ್ರೇಮಿಗಳು

ಮೈಸೂರು,ಏಪ್ರಿಲ್,16,2026 (www.justkannada.in):  “ನಮಗೆ ರಕ್ಷಣೆ ಕೊಡಿ” ಎಂದು ಮನವಿ ಮಾಡಿಕೊಂಡು...