7
March, 2026

A News 365Times Venture

7
Saturday
March, 2026

A News 365Times Venture

ஜம்மு & காஷ்மீர்: அரசு அலுவலங்களில் வாட்ஸ்ஆப், பென் டிரைவ் பயன்படுத்த தடை – ஏன்?

Date:

ஜம்மு & காஷ்மீர் அரசு, அனைத்து நிர்வாகத் துறைகள் மற்றும் மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர் அலுவலகங்களில் உள்ள அதிகாரப்பூர்வ கணினிகளில் பென் டிரைவ்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நடவடிக்கை தரவுகளை பாதுகாக்கவும், பாதுகாப்பு மீறல்களைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் போன்ற பொது தளங்களை அல்லது iLovePDF போன்ற ஆன்லைன் சேவைகளை அதிகாரப்பூர்வ, ரகசிய ஆவணங்களை பகிர அல்லது சேமிக்க பயன்படுத்தக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

சித்தரிப்பு படம்

இந்த உத்தரவு, யூனியன் பிரதேசத்தின் சைபர் பாதுகாப்பை மேம்படுத்தவும், முக்கியமான அரசு தகவல்களைப் பாதுகாக்கவும், தரவு மீறல்கள், மால்வேர் தாக்குதல்கள் ஆகியவற்றை தடுக்க எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு கேள்விக்கு பதிலளித்த ஜம்மு & காஷ்மீர் அரசு, 91 இணையதளங்கள் ‘பாதுகாப்பானது’ (safe to host) என்ற சான்றிதழ் இல்லாததால் இன்னும் செயல்படாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்தது.

மே மாதத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, இந்திய இணையதளங்கள் மீது, குறிப்பாக ஜம்மு & காஷ்மீரில் உள்ள பெரும்பாலான அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಅದು ಬಜೆಟ್ ನಲ್ಲಿ ಘೋಷಿಸುವ ಹಣವಲ್ಲ: ಗುತ್ತಿಗೆದಾರರು ಕಾಯಬೇಕಷ್ಟೆ- ಸಚಿವ ಸತೀಶ್ ಜಾರಕಿಹೊಳಿ

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,7,2026 (www.justkannada.in): ಬಾಕಿ ಬಿಲ್ ಪಾವತಿ ಮಾಡುವಂತೆ ಆಗ್ರಹಿಸಿ ಗುತ್ತಿಗೆದಾರರು...

ഇറാന്‍ വിഷയത്തില്‍ നയതന്ത്ര നിലപാട് കടുപ്പിച്ച് ഇന്തോനേഷ്യ; ബോര്‍ഡ് ഓഫ് പീസില്‍ നിന്ന് പിന്മാറി

ജാക്കാര്‍ത്ത: ഇറാനിലെ വ്യോമാക്രമണത്തിന് പിന്നാലെ യു.എസ് പ്രസിഡന്റ് ആരംഭിച്ച ഗസ ബോര്‍ഡ്...

Christopher Tilak: "உழைக்கும் தொண்டனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்" – கிறிஸ்டோபர் திலக்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கிறிஸ்டோபர்...