27
August, 2026

A News 365Times Venture

27
Thursday
August, 2026

A News 365Times Venture

Armstrong: “ஆம்ஸ்ட்ராங் சிந்திய ரத்தம் ஒருபோதும் அழிந்து ஒழியாது” – ஜான் பாண்டியன்

Date:

கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்றது.

ஆம்ஸ்ட்ராங்கின் இந்த முதலாமாண்டு நினைவு நாளில் அவரின் மனைவி பொற்கொடி, `தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கலந்துகொண்டிருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங் குறித்து பேசிய அவர், “எனக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் 40 ஆண்டுகால உறவு இருக்கிறது. என்னுடைய குழந்தைகளை ஆம்ஸ்ட்ராங் கடைக்கு தூக்கிச் செல்வார். அப்பேற்பட்ட உறவுதான் எங்களுடையது. சமுதாய மக்களுக்காக உழைக்கும் செல்வந்தனை இறப்பு நிகழ்ச்சியில் பார்க்கும்போது நாங்கள் வருத்தப்படுகிறோம்.

அவருடைய உடலில் வெட்டப்பட்ட காயங்கள் எல்லாம் ரத்தமாக சிதறினாலும் கூட  நம்மை திரட்டி… நான் சாகவில்லை. இன்னும் உங்களில் ஒருவனாக இருக்கிறேன் என்பதைத்தான் மனதிலே நினைக்கத் தோன்றுகிறது. என்னுடைய கணவன் பணியை நானும் மேற்கொள்வேன் என்று பொற்கொடி களமிறங்கி இருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங்

அது சாதாரண விஷயம் அல்ல. தாழ்த்தப்பட்ட மக்களை எப்படியாவது வளர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்பது அவருடைய எண்ணம். ஆம்ஸ்ட்ராங் சிந்திய ரத்தம் ஒருபோதும் அழிந்து ஒழியாது. ஆம்ஸ்ட்ராங் விட்ட பணியைப் பொற்கொடித் தொடரட்டும்” என்று பேசியிருக்கிறார்.     

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಆ.29ಕ್ಕೆ ಮೈಸೂರು ನೂತನ ಪತ್ರಕರ್ತರ ಭವನದ ಕಾಮಗಾರಿಗೆ ಚಾಲನೆ: ವಾರ್ಷಿಕ ಪ್ರಶಸ್ತಿಗಳು ಪ್ರಕಟ

ಮೈಸೂರು,ಆಗಸ್ಟ್,26,2026 (www.justkannada.in):  ಮೈಸೂರು ಜಿಲ್ಲಾ ಪತ್ರಕರ್ತರ ಸಂಘದ ಪತ್ರಕರ್ತರ ನೂತನ...

നേപ്പാള്‍ പ്രളയം: കേരളത്തില്‍ നിന്നുള്ളവര്‍ക്കായി ഹെല്‍പ്‌ഡെസ്‌ക് തുടങ്ങി

തിരുവനന്തപുരം: നേപ്പാളിലുണ്ടായ മിന്നല്‍ പ്രളയവുമായി ബന്ധപ്പെട്ട് കേരളീയര്‍ക്ക് അടിയന്തിര സഹായവും സേവനങ്ങളും...

"சட்டமன்றத்தில் லாவணி கச்சேரி நடந்துக்கொண்டிருக்கிறது" – தவெக, திமுக-வை தாக்கும் பெ.சண்முகம்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது,...

Karnataka: ఆకస్మిక తనిఖీలో షాకింగ్ సీన్.. ఆస్పత్రి రూమ్‌లో ప్రియురాలితో అడ్డంగా బుక్కైన..!

కర్ణాటకలో ఓ న్యాయమూర్తికి షాకింగ్ ఘటన ఎదురైంది. ఆస్పత్రిలోని ఓ గదిలో...