13
March, 2026

A News 365Times Venture

13
Friday
March, 2026

A News 365Times Venture

Ukraine: "போர் நிறுத்த முயற்சிகளின் மீது எச்சில் துப்பிய ரஷ்யா" – ஜெலன்ஸ்கி ஆவேசம்

Date:

உக்ரைன் மீது கடந்த ஜூன் 15ம் தேதி ரஷ்யா நடத்திய தக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார் உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி.

நாட்டின் மின்சாராக் கட்டமைப்புகள் மீதான புதின் ராணுவத்தின் தாக்குதலை, “அமைதியை ஏற்படுத்த சர்வதேச சமூகங்கள் செய்யும் அனைத்து முயற்சிகள் மீதும் உமிழப்பட்டது” என விமர்சித்துள்ளார்.

மத்திய உக்ரைன் நகரமான கிரெமென்சுக் மீது 200க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்ய ராணுவம். இதில் மின்சார மற்றும் விவசாயக் கட்டுமானங்கள் பெருஞ்சேதமடைந்தன.

Zelensky

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்திய சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

“உக்ரைன் குடிமக்களின் கட்டுமானங்களை அழிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதல் இது.

இந்தப் போரை நிறுத்த சர்வதேச சமூகம் முயற்சிக்கும் அனைத்திற்கும் எதிராக ரஷ்யா உமிழ்ந்திருக்கிறது” எனக் கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி.

“புதினின் ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது நாங்கள் ரஷ்யாவின் மின்சார நிலையங்களைத் தாக்க வேண்டாம் என அமெரிக்கா எங்களைக் கேட்டுக்கொண்டப் பிறகு.

Putin
Putin

புதின் தன்னை மத்திய கிழக்கின் மத்தியஸ்தகராகக் காட்டிக்கொள்ள நினைக்கிறார்… ஆனால் அவரது இழிவானத்தன்மை இங்கே அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது” என்றும் புதினை விமர்சித்துள்ளார் ஜெலன்ஸ்கி.

10 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி,, இதுவரை அமைதியை ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத புதின், மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தகராக செயல்படும் சிந்தனையை மறுத்துள்ளார் ஜெலன்ஸ்கி.

“போர் தானே சமாதானம் செய்வதைப் போன்றது” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர், ரஷ்யா எரிசக்தி அமைப்புகள் மீது இன்னும் தீவிரமாக தாக்குதல் நட்த்தலாம் என்றும், உலகின் கண்கள் இஸ்ரேல் ஈரான் விவகாரத்தில் இருப்பதனால் உலகால் கவனிக்கப்படாமல் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಅಡಿಕೆ ಕಳ್ಳತನ ಮಾಡಿದ್ದ ಮೂವರು ಕಳ್ಳರು ಅಂದರ್

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,12,2026 (www.justkannada.in): ಸುಮಾರು 15 ಕ್ವಿಂಟಾಲ್ ನಷ್ಟು ಅಡಿಕೆಯನ್ನು ಕಳ್ಳತನ...

ഞെട്ടിപ്പിക്കുന്ന സംഭവം, ഉടന്‍ സമഗ്രമായ അന്വേഷണം നടത്തണം; ഫാറൂഖ് അബ്ദുല്ലക്ക് നേരെയുണ്ടായ വധശ്രമത്തില്‍ എം.എ. ബേബി

ന്യൂദല്‍ഹി: ജമ്മു കശ്മീര്‍ മുന്‍ മുഖ്യമന്ത്രി ഫാറൂഖ് അബ്ദുല്ലക്ക് നേരെയുണ്ടായ വധശ്രമം...

'6 தொகுதிகள் கொடுத்தே ஆகணும்' – கறார் காட்டும் கம்யூனிஸ்டுகள்; கைவிரித்த திமுக!

கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தி.மு.க-வின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடிக்கிறது....