30
April, 2026

A News 365Times Venture

30
Thursday
April, 2026

A News 365Times Venture

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: 'திமுக, அதிமுக உரிமை கோருவதில் நியாயம் இல்லை' – திருமாவளவன்

Date:

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ்நாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்திய செயல்.

திருமாவளவன்

இது போன்ற கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் இந்தியாவில் எந்த மூலையிலும் நடக்கக் கூடாது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களோ என்ற ஐயம் இருந்தது.

மாமருந்தாக…

அரசுத் தரப்பில் உறுதியாக நின்று வழக்குறிஞர்கள் வாதாடி இருக்கிறார்கள். அவர்களையும் பாராட்டுகிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், மனிதநேயம் உள்ள அனைவருக்கும் ஏற்பட்ட  ஒரு கொடுங்காயத்துக்கு இடப்பட்ட மாமருந்தாகவே அமைந்திருக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

இந்த வழக்கில் திமுக, அதிமுக, விசிக என்று உரிமை கோருவதில் நியாயம் இல்லை. சான்றுகள் வலுவாக இருந்தது. செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்த தடையங்கள் இந்த தண்டனைக்கு ஆதாரங்களாக இருந்தன. அதனால் தான் அவர்களால் தப்பிக்க முடியவில்லை.

அதிலிருந்து அவர்களால் மீள முடியாத ஆதாரங்களை அவர்களே உருவாக்கி விட்டார்கள். அந்த ஆதாரங்கள் தான் இந்த தண்டனைக்கு மிக முக்கிய வலுவான தடையங்களாக இருந்தன. இதில் யாரும் உரிமை கோருவதில் அர்த்தமில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி  மட்டுமல்ல, யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

பாலியல் வல்லுறவு குற்றங்கள் குறித்து  மாநில அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பரவும் ஆபாச வலைதள விளம்பரங்களை தடை செய்ய வேண்டும்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മുസ്‌ലിങ്ങള്‍ മുഖ്യമന്ത്രിയാകരുതെന്ന് ഭരണഘടനയില്‍ എവിടെയെങ്കിലും പറഞ്ഞിട്ടുണ്ടോ? വെള്ളാപ്പള്ളിയോട് ടി.എസ്. ശ്യാംകുമാര്‍

  കോഴിക്കോട്: യു.ഡി.എഫ് അധികാരത്തിലെത്തിയാല്‍ മുസ്‌ലിം ലീഗില്‍ നിന്നും മുഖ്യമന്ത്രിയുണ്ടായേക്കാമെന്ന എസ്.എന്‍.ഡി.പി...

தமிழ்நாடு `டு' மேற்கு வங்கம்; எக்ஸிட் போல் குறித்து மல்லிகார்ஜுன கார்கே சொன்னது என்ன?

புதுச்சேரி, கேரளா, மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்கள்...

West Bengal Exit Poll 2026: బెంగాల్ లేటెస్ట్ ఎగ్జిట్ పోల్.. బీజేపీదే అధికారం..

West Bengal Exit Poll 2026: నాలుగు రాష్ట్రాలు, ఒక కేంద్రపాలిత...

ಶೀಲ ಶಂಕಿಸಿ ಪತ್ನಿ ಕೊಂದಿದ್ದ ಆಪರಾಧಿ ಪತಿಗೆ ಜೀವಾವಧಿ ಶಿಕ್ಷೆ ಪ್ರಕಟ.

ಮಂಡ್ಯ. ಏಪ್ರಿಲ್, 30,2026 (www.justkannada.in):  ಶೀಲ ಶಂಕಿಸಿ ಪತ್ನಿಯನ್ನು ಕೊಲೆಗೈದಿದ್ದ...