30
April, 2026

A News 365Times Venture

30
Thursday
April, 2026

A News 365Times Venture

`இனி நானே பாமக தலைவர்’ ; தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அதிரடி

Date:

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். பா.ம.க. தலைவர் பொறுப்பை இனி நானே எடுத்துக்கொள்ளப்போகிறேன் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமகவின் செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என்றும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராமதாஸ் – அன்புமணி

`அந்த காரணத்தை எல்லாம் சொல்ல முடியாது’

தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “தலைவராக பொறுப்பேற்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அந்த காரணத்தை எல்லாம் சொல்ல முடியாது. 2026 தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு எடுப்போம்” என்று கூறியிருக்கிறார்.

பாமக நிறுவனரான ராமதாஸ் ஏற்கனவே தனது பேரன் முகுந்தனை இளைஞரணி செயலாளராக அறிவித்ததற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அந்த விவகாரம் கட்சி மேடையிலேயே பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் தற்போது அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ராமதாஸே அந்த பொறுப்பை கையில் எடுத்திருக்கிறார்.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் – அன்புமணி

“அடுத்த வருடம், அதாவது 2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இளைஞர்களை வழி நடத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக” ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

കാര്യങ്ങള്‍ കൈവിടുന്നു, എണ്ണവില കുതിച്ചുയരുന്നു; ഹോര്‍മുസ് കടലിടുക്ക് തുറക്കാന്‍ അന്താരാഷ്ട്ര സഹായം തേടി അമേരിക്ക

  വാഷിങ്ടണ്‍: ഇറാനുമായുള്ള യുദ്ധം രണ്ട് മാസം പിന്നിടുന്ന സാഹചര്യത്തില്‍ ഹോര്‍മുസ്...

`பிரசவ சிகிச்சை அலட்சியம்; நெஞ்சில் அமர்ந்துகொண்டு காலால் அழுத்தம் கொடுத்தனர்'- இளைஞர் குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தீப்லதா என்ற பெண்...

UGC Net: యూజీసీ నెట్ నోటిఫికేషన్ విడుదల.. ముఖ్యమైన తేదీలు ఇవే..

నేషనల్ టెస్టింగ్ ఏజెన్సీ (NTA) జూన్ 2026 సెషన్‌కు సంబంధించిన యూజీసీ...

ಬೌರಿಂಗ್ ಆಸ್ಪತ್ರೆ ಕಾಂಪೌಂಡ್ ದುರಂತ: ಸ್ಥಳಕ್ಕೆ ಭೇಟಿ ನೀಡಿ ಪರಿಶೀಲಿಸಿದ ಲೋಕಾಯುಕ್ತ ನ್ಯಾ.ಬಿ.ಎಸ್. ಪಾಟೀಲ್

ಬೆಂಗಳೂರು,ಏಪ್ರಿಲ್,30,2026 (www.justkannada.in):  ಭಾರೀ ಮಳೆಯಿಂದಾಗಿ ಬೌರಿಂಗ್ ಆಸ್ಪತ್ರೆಯ ತಡೆಗೋಡೆ ಕುಸಿದು...