15
March, 2026

A News 365Times Venture

15
Sunday
March, 2026

A News 365Times Venture

`உயிர், உரிமை பிரச்னைகளை தமிழ்நாடு எதிர்கொண்டிருக்கிறது; நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும்!' – ஸ்டாலின்

Date:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 3ஆம் தேதி தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில் பேசியிருக்கும் ஸ்டாலின், “பொதுவாக நான் பிறந்தநாளைப் பெரிய அளவில் ஆடம்பரமாக – ஆர்ப்பாட்ட விழாவாகக் கொண்டாடுவது இல்லை. ஆனால், கழக உடன்பிறப்புகள் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கழக அரசின் சாதனைகள் மற்றும் கழகக் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்று செயல்படுவார்கள். இந்த முறை என்னுடைய பிறந்தநாள் வேண்டுகோளாக என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இன்றைக்குத் தமிழ்நாடு தன்னுடைய உயிர்ப் பிரச்னையான மொழிப்போரையும் – தன்னுடைய உரிமைப் பிரச்னையான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது.

ஸ்டாலின்

இதனுடைய உண்மையான நோக்கத்தை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கக் கேட்டுக் கொள்கிறேன். தொகுதி மறுசீரமைப்பு என்பது, நமது மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி, நம்முடைய சமூக நலத்திட்டங்களைப் பெரிதும் பாதிக்கும். இதை நீங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தைத் தொடங்கினோம். இப்போது கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவுக் குரல் வந்துள்ளது.

இதைப் பார்த்த ஒன்றிய அரசு, இந்தியைத் திணிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே அதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், நமக்கான நிதியையும் இன்னும் தரவில்லை. அதேபோல், தமிழ்நாட்டிற்கான தொகுதிகளைக் குறைக்க மாட்டோம் என்று மட்டும் தான் சொல்கிறார்களே தவிர, மற்ற மாநிலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை.

நாம் கேட்பது, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரிக்காதீர்கள் என்றுதான். நாட்டினுடைய வளர்ச்சிக்காக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களைத் தண்டிக்காதீர்கள். அப்படி நடந்தால், அதைத் தமிழ்நாடும் தி.மு.க.,வும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாம் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். தமிழ்நாட்டுக்காக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என்று பேசியிருக்கிறார்.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Ustaad Bhagat Singh: ‘సినిమా లేట్ అవ్వడానికి కారణం నేనే’: డైరెక్టర్ హరీశ్ శంకర్..

పవన్ కళ్యాణ్ హీరోగా, మాస్ దర్శకుడు హరీష్ శంకర్ దర్శకత్వంలో ఎంతో...

ಎಲ್ ಪಿಜಿ ಸಿಲಿಂಡರ್ ಪೂರೈಕೆ ವ್ಯತ್ಯಯ: ಪ್ರಧಾನಿ ಮೋದಿಗೆ ಪತ್ರ ಬರೆದ ಹೋಟೆಲ್ ಮಾಲಕಿ

ಬೆಂಗಳೂರು, ಮಾರ್ಚ್, 14,2026 (www.justkannada.in): ಮಧ್ಯಪ್ರಾಚ್ಯದಲ್ಲಿ ಯುದ್ದ ಹಿನ್ನೆಲೆಯಲ್ಲಿ ಕರ್ನಾಟಕ...

നൂറിലധികം സീറ്റുമായി യു.ഡി.എഫ് തിരിച്ചുവരും; കേരളത്തിലെ ദുര്‍ഭരണം അവസാനിക്കാന്‍ ഇനി 26 ദിവസം മാത്രം: വി.ഡി. സതീശന്‍

പറവൂര്‍: കേരളത്തിലെ ദുര്‍ഭരണം അവസാനിക്കാന്‍ ഇനി 26 ദിവസം മാത്രമേയുള്ളുവെന്ന് പ്രതിപക്ഷ...

Assembly Elections: தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!- முழு விவரம்

தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகளும் கூட்டணிகளை...