4
March, 2026

A News 365Times Venture

4
Wednesday
March, 2026

A News 365Times Venture

விகடன் இணையதள முடக்கம்: “மிகத் தவறான முன்னுதாரணம்'' – மு.குணசேகரன் கண்டனம்

Date:

விகடன் இணையதளம் முடக்கப்பட்டது பற்றி கடந்த சனிக்கிழமை மாலையிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாசகர்கள் விகடனின் தளத்தை பயன்படுத்த முடியாமல் இருப்பதைப் பற்றி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Vikatan Plus இதழில் வெளியான ஒரு கார்ட்டூன்தான் விகடன் தளத்தின் முடக்கத்துக்கு காரணமாக இருந்தால் அதை கண்டிக்கிறோம் என அரசியல் கட்சிகளும் தங்களின் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், விகடன் இணையதளம் முடக்கப்பட்டதை எதிர்த்து சன் நியூஸ்தொலைக்காட்சியின் எடிட்டர் இன் சீஃப் குணசேகரன் அவர்களின் கண்டனப் பதிவு.

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கிற ஒரு கேலிச் சித்திரத்துக்காக விகடன் இணைய தளத்தை முடக்கி இருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை பாஜக அரசு அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்து, கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை நசுக்கி இருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு, இறையாண்மை, பொதுஅமைதி, அண்டை நாட்டுடனான நல்லுறவுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் கருத்துகளை வெளியிட்டால், இணையத்தை முடக்குவதற்கு தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 69 ஏ வழிவகை செய்கிறது.

விகடன் வெளியிட்ட கார்ட்டூன், பொது அமைதியை குலைக்கவோ, இறையாண்மை – பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கவோ இல்லை. அமெரிக்காவுடனான நட்புறவு இதனால் கெடவும் இல்லை. சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுகிறோம் என்ற பெயரில், ஆவணங்களின்றி வசித்து வந்த குடிமக்களை கை, கால்களில் விலங்கு மாட்டி ராணுவ விமானத்தில் அனுப்பும் செயலை, அமெரிக்க ஊடகங்களும் அந்நாட்டு குடிமக்களும் டிரம்பின் ஜனநாயக விரோத, மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

விகடனின் கார்ட்டூனால் நல்லுறவு கெடுவதற்கு வாய்ப்பே இல்லை. சக இந்திய குடிமக்களை ஈவு இரக்கமின்றி, கை கால்களில் விலங்கிட்டு 40 மணி நேரம் நரகக் குழியில் தள்ளியதை கண்டதால் ஒரு பத்திரிகையாளனுக்கு ஏற்பட்ட அறச்சீற்றம்தான் அந்த கார்ட்டூன். அந்தச் சீற்றம் தேசபக்தி கொண்ட லட்சோப லட்சம் இந்தியர்களின் உணர்வையே அந்த கார்ட்டூன் வெளிப்படுத்தியது.அமெரிக்காவின் தடாலடி நடவடிக்கையை எதிர்த்துக் கேள்வி கேட்க இயலாத நிலையில், அரசியல் ரீதியாக பாஜக அரசின் தோல்வியை மறைக்கவே, ஒரு கேலிச்சித்திரத்துக்காக விகடன் இணையதளத்தை முடக்கி இருக்கிறார்கள்.

vikatanlogo

எந்த விளக்கமும் கோராமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை இயற்கை நீதிக்கு எதிரானது.பிரதமர் மோடியை விமர்சிக்கும் கேலிச் சித்திரம், இந்திய நாட்டையோ இறையாண்மையையோ கேலிக்கு உள்ளாக்கும் சித்திரம் அல்ல. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மிகத் தவறான முன்னுதாரணம். நீதிமன்றத்தில் இந்த நடவடிக்கை நிச்சயம் கேலிக்கு உள்ளாகும். கருத்துச் சுதந்திரம் நிலைநாட்டப்படும்.

– மு.குணசேகரன்

எடிட்டர் இன் சீப்

சன் நியூஸ்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮೈಸೂರು ವಿಭಾಗ ಬಿಜೆಪಿ ಸಹ ಪ್ರಭಾರಿಯಾಗಿ ಡಾ.ಈ.ಸಿ.ನಿಂಗರಾಜ್ ಗೌಡ ನೇಮಕ.

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,4,2026 (www.justkannada.in): ಭಾರತೀಯ ಜನತಾ ಪಾರ್ಟಿಯ ಮೈಸೂರು ವಿಭಾಗದ ಸಹ...

ശ്രീലങ്കന്‍ തീരത്ത് ഇറാനിയന്‍ യുദ്ധക്കപ്പല്‍ മുക്കിയത് യു.എസ് അന്തര്‍വാഹിനി: സ്ഥിരീകരിച്ച് യു.എസ്

വാഷിങ്ടണ്‍: ശ്രീലങ്കന്‍ തീരത്തിന് സമീപത്ത് വെച്ച് ഇറാന്റെ യുദ്ധക്കപ്പല്‍ മുക്കിയത് യു.എസ്...

` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்

"ரொம்ப நாள் ஆசைய்யா... ஆனா யார்கிட்ட கேட்டாலும் யாராவது சொந்தக்காரங்க...