9
August, 2026

A News 365Times Venture

9
Sunday
August, 2026

A News 365Times Venture

“டாலரின் மதிப்பு உயர்வு பற்றி எனக்கு கவலை இல்லை" – ரகுராம் ராஜன் சொல்லும் காரணம்

Date:

2013-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர் ரகுராம் ராஜன்.

‘2024- 2025 நிதியாண்டில், இந்தியா ஜி.டி.பி 6.4 சதவிகிதமாக இருக்கலாம். இது கடந்த நான்கு ஆண்டுகளில் மிகவும் குறைந்த அளவு’ என தேசிய புள்ளிவிவரம் அலுவலகம் தரவுகளை வெளியிட்டுள்ளது. சமீபத்திய தரவுகளின் படி, ‘கடந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டில் மக்களின் தனிப்பட்ட நுகர்வு 6 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றும், அதற்கு முந்தைய காலாண்டில் அதற்கு முன்பான ஏழு காலாண்டில் இல்லாத அளவுக்கு 7.4 சதவிகிதமாக நுகர்வு உச்சத்தில் இருந்தது’ என்று குறிப்பிட்டிருந்தது.

நடுத்தட்டு மக்கள் பாதிப்பு…

இந்த நிலையில், முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய பொருளாதாரம் குறித்து பேசியுள்ளார். அதில்…

“இந்தியாவில் மக்களின் நுகர்வு தேவை பலமாக வளரவில்லை. நுகர்வில் நடுத்தட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு, வேலையின்மையே முக்கிய காரணம். இந்த நுகர்வு பாதிப்பிலிருந்து உயர்தட்டு மக்கள் மட்டும் விதிவிலக்காக உள்ளனர்.

ஜி.டி.பி வளர்ச்சி 6 சதவிகிதம் என்பது இந்தியாவிற்கு போதாது. இன்னும் வளர்ச்சி வேண்டும். இது அரசால் மட்டும் செய்ய முடியாது. தனியார்களும் ஜி.டி.பி வளர்ச்சியில் பங்களிக்க வேண்டும்.

Rupee fall
ரூபாய் – டாலர்

இந்திய ரூபாய்க்கு எதிராக மட்டுமல்லாமல் பல நாடுகளின் நாணயங்களுக்கு எதிராகவும் டாலர் மதிப்பு வளர்ந்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பிற்கு டாலர் ரூ.83-ல் இருந்து ரூ.86 ஆகத்தான் வளர்ந்துள்ளது. ஆனால், யூரோவை எடுத்துக்கொண்டால், கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு டாலருக்கு 91 சென்டாக இருந்தது. இப்போது அது 98 சென்டாக இருந்தது. அதனால், இது இந்திய ரூபாய் பிரச்னை இல்லை.

டாலர் தற்போது பலப்பட்டு வருகிறது. இதற்கு ‘புதிய அரசால் வணிக பற்றாக்குறை மாறும்’ என்ற நம்பிக்கையே காரணம். அமெரிக்காவில் புதிய அரசு அமைந்து திட்டங்கள் வெளியிடப்பட்டதும் இவை அனைத்தும் சரியாகி விடும். அதனால், இதுக்குறித்து நான் அதிகம் கவலைப்படவில்லை” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

AP Assembly: ఈ నెల 17వ తేదీ నుంచి ఆంధ్రప్రదేశ్ అసెంబ్లీ వర్షాకాల సమావేశాలు

AP Assembly: ఆంధ్రప్రదేశ్ అసెంబ్లీ వర్షాకాల సమావేశాలు ఈ నెల 17వ...

ಸೆಂಟಮ್ ಎಲೆಕ್ಟ್ರಾನಿಕ್ಸ್ ನಿಂದ ನಾಲ್ಕು ವರ್ಷಗಳಲ್ಲಿ 500 ಕೋಟಿ ರೂ. ಹೂಡಿಕೆ-ಸಚಿವ ಎಂ. ಬಿ ಪಾಟೀಲ್

ಬೆಂಗಳೂರು,ಆಗಸ್ಟ್,7,2026 (www.justkannada.in):  ರಕ್ಷಣಾ ಉದ್ಯಮದಲ್ಲಿ ಹೆಸರು ಮಾಡಿರುವ ಸೆಂಟಮ್ ಎಲೆಕ್ಟ್ರಾನಿಕ್ಸ್...

അര്‍ജുന്‍ ആയങ്കിയെ പിടിക്കാന്‍ വിവരം നല്‍കിയ ഓട്ടോ ഡ്രൈവര്‍ക്ക് സ്വകാര്വ വ്യക്തി ഒരു ലക്ഷം രൂപ നല്‍കും: രമേശ് ചെന്നിത്തല

തിരുവനന്തപുരം: ക്രിമിനല്‍ കേസ് പ്രതി അര്‍ജുന്‍ ആയങ്കിയെ പിടിക്കാന്‍ സഹായിച്ച ഓട്ടോ...

"ரஷ்யாவுடன் கைகோர்க்கும் வடகொரியா; தென் கொரியாவிற்கும் ஆபத்து" – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

ஈரான் போரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம், ரஷ்யா -...