28
November, 2026

A News 365Times Venture

28
Saturday
November, 2026

A News 365Times Venture

திருப்பரங்குன்றம்: "இப்படி ஒரு அசிங்கம் மாநிலத்திற்கு தேவையா?"- நீதிமன்ற உத்தரவு குறித்து இபிஎஸ்

Date:

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இன்று (நவம்பர் 29) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

திருப்பரங்குன்றம் – உச்ச நீதிமன்றம்

அப்பதிவில், ” திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவினை அரசு செயல்படுத்த வேண்டும் என்று நான் ஏற்கனவே பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த அரசிற்கு அறிவுரையாக கூறியிருந்தேன்.

அதேபோல் இன்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், தமிழக வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக திருப்பரங்குண்றம் மலைப் பகுதியின் பாதுகாப்பை சி.ஆர்.பி.எப்-வசம் ஒப்படைத்துள்ளது. அறங்காவலர் குழுவையே கலைத்து, திருப்பரங்குன்றம் திருக்கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள மாண்புமிகு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளது.

உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ள சில சொற்களை நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்-

“Administrative Chaos, brazen and wilful disobedience, flagrant disregard, calculated affront of both Constitutional Courts”

மேலும், “The prevailing situation needed to be dealt with an iron hand, failing which it could lead to CONSTITUTIONAL CHAOS” என்று கூறியுள்ளது.

இதுபோன்ற வார்த்தைகளை ஒரு அரசு நோக்கி இவ்வளவு காட்டமாக உச்சநீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்திற்கு தேவையா? தமிழக சட்டத்துறைக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ள ஆச்சரியக்குறி தவெக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

சட்டம், அரசியலமைப்பு, உச்சநீதிமன்றம்- இவையெல்லாம் மாண்புக்குரியவை. அவை நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் Windmill, Car பொம்மைகளைப் போல அல்ல என்பதை விஜய் உணரவேண்டும்.

இனியாவது உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண இந்த வாடகைக்கால் தவெக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇന്ത്യയും സനാതന ധര്‍മ്മവും വേര്‍തിരിക്കാനാവാത്തത്: യോഗി ആദിത്യനാഥ്

  ലഖ്നൗ: ഇന്ത്യയും സനാതന ധര്‍മവും പരസ്പര പൂരകങ്ങളാണെന്നും അവയെ ഒരിക്കലും...

Rohit Sharma: “సవాళ్లను స్వీకరించడానికి నేను రెడీ”.. ముంబై కెప్టెన్‌గా రీఎంట్రీపై రోహిత్ ఫస్ట్ రియాక్షన్…

Rohit Sharma: ముంబై ఇండియన్స్‌లో మళ్లీ హిట్‌మ్యాన్ శకం మొదలుకానుంది. దాదాపు...

കുവൈറ്റില്‍ ആക്രമണം നടത്തിയ ഡ്രോണ്‍ ഇറാനില്‍ നിര്‍മിച്ചതെന്ന് ഇറ്റലി

റോം: കുവൈറ്റില്‍ രണ്ട് ഇറ്റാലിക്കാര്‍ കൊല്ലപ്പെടാന്‍ കാരണമായ ആക്രമണത്തിനുപയോഗിച്ച ഡ്രോണ്‍ ഇറാനില്‍...

கள்ளக்குறிச்சி: நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்; இறுகிய பிடி… தவெக எம்எல்ஏ கைதில் நடந்தது என்ன?!

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக...