24
November, 2026

A News 365Times Venture

24
Tuesday
November, 2026

A News 365Times Venture

"ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கத் தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM?"- உதயநிதி காட்டம்

Date:

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து, 7 நாள்களுக்குள் நடவடிக்கை அறிக்கை அளிக்கத் தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டிருந்தது.

மெசேஜ் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என, தமிழ்நாடு காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று கூறப்பட்டிருந்த நிலையில் தனக்கு அநாகரிகமாக தவெக எம்எல்ஏ மெசேஜ் அனுப்பியதாக மாவட்ட ஆட்சியர் டி.எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM?

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி.

இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா?

அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ.-வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும்.

அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும்.

இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்”என்று காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

നെതന്യാഹു സര്‍ക്കാര്‍ സ്വയം കുഴിച്ച കുഴിയില്‍ വീണു;ഗസ കേസില്‍ ഇസ്രഈലിന് തിരിച്ചടി ഉറപ്പെന്ന് ഇസ്രഈലി നിയമവിദഗ്ധന്‍

  ടെല്‍അവീവ്: റോഹിങ്ക്യന്‍ മുസ്‌ലിങ്ങള്‍ക്കതിരെ മ്യാന്‍മര്‍ വംശഹത്യ നടത്തിയെന്ന അന്താരാഷ്ട്ര നീതിന്യായ...

Koti Deepotsavam 2026 : కార్తీక సోమవారం.. కోటి దీపోత్సవంలో ఏకామ్రేశ్వరస్వామి కల్యాణ శోభ

హైదరాబాద్‌లోని ఎన్టీఆర్ స్టేడియంలో కార్తీక మాసం సందర్భంగా భక్తి టీవీ నిర్వహిస్తున్న...

ஆபாச மெசேஜ்: “ஆட்சியருக்கு நீதி; அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" – மாணிக்கம் தாகூர்

சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்...