22
November, 2026

A News 365Times Venture

22
Sunday
November, 2026

A News 365Times Venture

”தவெக ஆட்சி நீடிக்காது என தன் ஆசையை ஸ்டாலின் வெளிப்படுத்தி வருகிறார்”- பெ.சண்முகம்!

Date:

தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 23 ஏக்கர் நிலம் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏரி மீட்புக் குழு சார்பில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியை சிபிஎம் கட்சியின் பெ.சண்முகம் கட்சி நிர்வாகிகளுடன் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருப்பரங்குன்றத்தில் அளவைக் கல்லில் ஒருமுறை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெ.சண்முகம்

அது அளவைக் கல்லா, தீபத்தூணா என இன்னும் முடிவே தெரியாத நிலையில், அந்த அளவைக் கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. அளவைக் கல்லில் தீபம் ஏற்றுவது இதுவரை வழக்கம் அல்ல. இது போன்ற தீர்ப்பை நீதிபதிகள் வழங்கியிருப்பதன் மூலம் தேவையற்ற சர்ச்சையைத் தங்கள் தீர்ப்பின் மூலம் உருவாக்கியிருக்கிறார்கள். எனவே, தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.

வழக்கமாகத் தீபம் ஏற்றக்கூடிய இடத்திலேயே இந்த ஆண்டும் வரும் 24-ஆம் தேதி தீபத் திருவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் புதிய இடத்தில் தீபத்தை ஏற்றுவதன் மூலம் புதிய வழக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தவெக அரசு தனது ஆறு மாத ஆட்சிக்காலத்தைப் பூர்த்தி செய்துள்ளது. இதில் வரவேற்கத்தக்க விஷயங்களையும், எதிர்க்கத்தக்க விஷயங்களையும் கலந்தே செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளனர்.

பெ.சண்முகம்

குறிப்பாக, விவசாயிகளின் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு ஏறத்தாழ ரூ.9,000 கோடி விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்துள்ளனர். அதனை வரவேற்கிறோம். விவசாயிகள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளார்கள். ஆனால், இன்றைக்கு டெல்டாவில் பாசனத்திற்குப் போதுமான அளவு தண்ணீர் வராததால் நடவு செய்த பயிர்கள் அனைத்தும் காய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு அறுவடைக்கு வருமா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தி, காவிரி மேலாண்மை வாரியத்தை வற்புறுத்தி இருக்கக்கூடிய பயிர்களைக் காப்பாற்றும் வகையில் கர்நாடகத்திலிருந்து போதுமான தண்ணீரைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மாதந்தோறும் தமிழகத்திற்கு வரவேண்டிய 15 டி.எம்.சி. தண்ணீரை வற்புறுத்திப் பெற்றாலே காவிரி டெல்டாவில் ஓரளவு பாசனத்தை நம்மால் காப்பாற்ற முடியும். எனவே, அதற்குரிய சட்டபூர்வ நடவடிக்கைகளையும், அரசியல் ரீதியான நிர்பந்தங்களையும் செய்து காவிரி டெல்டா விவசாயிகள் பயனடையும் வகையில் தண்ணீரைப் பெற உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களைத் திரட்டி ஒன்றிய அரசுக்கு நிர்பந்தம் அளித்துத் தண்ணீரைப் பெறுவதற்குப் பதிலாக, தமிழ்நாடு அரசு புதிது புதிதாக மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறது. அவற்றைத் தற்போது நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

எனவே, ஏற்கனவே காவிரி நதிநீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதே அனைவருடைய கோரிக்கை. அதற்குரிய நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் எடுத்தால் மீண்டும் மீண்டும் மனு தாக்கல் செய்யும் நிலை வராது. எனவே, உச்ச நீதிமன்றம் தான் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த கர்நாடக மாநில அரசை ஏற்க வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தவெக ஆட்சி ஒரு மாதம் கூட நீடிக்காது என்றார். பிறகு மூன்று மாதம் நீடிக்காது என்றார். ஆறு மாதம் கூட நீடிக்காது என்றார். தற்போது ஆறு மாதம் கழித்தும் தவெக ஆட்சி நீடிக்கிறது. தி.மு.க தோல்வியடைந்த நிலையில் தங்களுடைய ஆசையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்கள் ஆட்சியைத் தக்க வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொல்வது போல் ஆறு மாதத்திலோ, இன்னும் சில மாதத்திலோ தவெக ஆட்சி கலைவதற்கான வாய்ப்பு இல்லை. அவர்கள் தேர்தல் நேரத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, தங்கள் ஆட்சி நீடிப்பதற்கான சூழ்நிலையை அவர்கள்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வரவிருக்கும் இடைத்தேர்தல் தொடர்பாக யாருக்கு ஆதரவு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Yuzvendra Chahal: రాజకీయాల్లోకి అడుగుపెట్టిన భారత క్రికెటర్ యుజ్వేంద్ర చాహల్.. కీలక బాధ్యతలు అప్పగింత..

భారత క్రికెటర్ యుజ్వేంద్ర చాహల్ రాజకీయాల్లోకి అడుగుపెట్టారు. ఆయన ఈరోజు భారతీయ...

തിരുപ്രംകുണ്ഡ്രം ദീപസ്തംഭം: സുപ്രീംകോടതി ഉത്തരവിനെതിരെ പുന പരിശോധനാ ഹരജിയുമായി തമിഴ്‌നാട് സര്‍ക്കാര്‍

മധുരൈ: മധുരൈയിലെ തിരുപ്രംകുണ്ഡ്രം കുന്നിന് മുകളിലുള്ള ദര്‍ഗയ്ക്ക് സമീപത്തെ ദീപത്തൂണില്‍ കാര്‍ത്തികദീപം...

இடமலக்குடி: கேரளாவின் முதல் பழங்குடியினர் பஞ்சாயத்து; நிதி இல்லாமல் முடங்கிய அவலம்!

கேரள மாநிலத்தின் முதல் பழங்குடியினர் பஞ்சாயத்தான இடுக்கி மாவட்டம் இடமலக்குடி பஞ்சாயத்து,...

Koti Deepotsavam 2026 : కోటి దీపోత్సవంలో అద్భుత ఘట్టం.. వైభవంగా తులసీ దామోదర కల్యాణం.!

కార్తీక మాసం సందర్భంగా హైదరాబాద్‌లోని ఎన్టీఆర్ స్టేడియం వేదికగా ఎన్టీవీ, భక్తి...