8
November, 2026

A News 365Times Venture

8
Sunday
November, 2026

A News 365Times Venture

'சண்டியர்': பிடிவாத கமல்… பின்வாங்காத கிருஷ்ணசாமி; சாதி அரசியலாக்காதீர்கள்! – கமல் தரப்பு

Date:

22 வருடங்களுக்குப் பிறகு ‘சண்டியர்’ படத் தலைப்பு மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறது!
நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, தான் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அண்மையில் வெளியிட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே புதிய பட அறிவிப்பு விவகாரம் தமிழக அரசியல் களத்தில் கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
‘சண்டியர்’ என்ற பெயரிலான அந்தப் படத்தின் தலைப்புதான் இத்தனை களேபரங்களுக்கும் அடிப்படை. “இது குறிப்பிட்ட ஓர் சாதி பின்புலத்தில் சொல்லப்படுகிற பெயர். இந்தப் பெயரில் படம் வெளியானால், அமைதியான தமிழகத்தில், மீண்டும் சாதி பிரச்னைகளும் கலவரங்களும் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எனவே, கமல்ஹாசன் தனது புதிய படத்துக்கு இந்தப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது.

கிருஷ்ணசாமி

மீறினால், படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் எங்கேயும் நடைபெறாது. அதையும் மீறி தமிழ்நாட்டுக்கு வெளியே படமாக்கிக்கொண்டு வந்து தமிழ்நாட்டில் திரையிட நினைத்தால் அதுவும் நடக்காது. புதிய தமிழகம் கட்சி இந்தப் படத்தை எதிர்க்கிறது” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பகிரங்கமாக எச்சரிக்கை செய்திருக்கிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி.
23 வருடங்களுக்கு முன்பே இதே பெயரில், பட அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டு, புதிய தமிழகம் கட்சியின் எதிர்ப்பையடுத்து ‘விருமாண்டி’ என படத்தின் தலைப்பை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் நேரந்தது. இப்போது மறுபடியும் ‘சண்டியர்’ என்ற தலைப்போடு களத்தில் குதித்துள்ளார் கமல்ஹாசன்.
இதற்கிடையே, “சண்டியர் என்ற தலைப்பு தேவர் சமுதாயத்திற்கு ஒரு கெத்தான, கம்பீரமான பெயர். யாருடைய அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் இந்த முறை இதே பெயருடன் படத்தை வெளியிட வேண்டும் கமல்ஹாசன்” என்றுகூறி ‘சண்டியர்’ படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் அகில இந்திய முக்குலத்தோர் பாசறையின் மாநிலத் தலைவரான ஏ.எம். சௌத்திரி தேவர். இதைத்தொடர்ந்து, ‘களமிறங்கும் சண்டியர் கமலுக்கு துணை நிற்போம்!’ என்ற வாசகத்தோடு, அச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இணையத்தில் களமாடத் தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில், ‘பொறுப்புள்ள ஓர் அரசியல் கட்சித் தலைவரான கமல்ஹாசன், மீண்டும் இப்படியொரு பெயர் சர்ச்சைக்குள் சிக்கிக்கொள்ளலாமா?’ என்று பொதுமக்களும் கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர். இதையடுத்து, பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு, திரைப்பட இயக்குநரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான முரளி அப்பாஸிடம் பேசினோம்…
“ ‘சண்டியர்’ என்பது நம்முடைய கலாசாரத்தில் புழக்கத்தில் இருக்கும் ஒரு சொல். அதன் பொருள் ரவுடி என்பதல்ல. இதே பெயரில் ஏற்கெனவே திரைப்படங்கள் வந்தபோது எதிர்ப்பு தெரிவிக்காத டாக்டர் கிருஷ்ணசாமி, கமல்ஹாசன் படத்துக்குத் தலைப்பு வைக்கும்போது மட்டும் எதிர்ப்பது ஏன்?

கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுக்கும்போது சமூகத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்துக் கேள்வி எழுப்புவதில் தவறில்லை. ஆனால், தலைப்பை மட்டுமே வைத்து படத்தின் நோக்கத்தை முடிவு செய்ய முடியாது. படம் வெளியான பிறகுதான் அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிப் பேச வேண்டும்.
கமல்ஹாசன் தனது படங்களில் சாதிய ஒடுக்குமுறையையும் வன்முறையையும் விமர்சித்திருக்கிறார். அப்படியிருக்கும்போது, ஒரு தலைப்பை வைத்து அவரை விமர்சிப்பது சரியல்ல. மேலும், இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் சாதி அரசியலைக் கொண்டுவந்து, இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்னையாக ஒருசிலர் மாற்றுவதும் தவறு. ‘சண்டியர்’ என்பது சாதாரணமாகக் கடந்து செல்ல வேண்டிய ஒரு திரைப்படத் தலைப்புதான். படம் வரட்டும்; பார்த்துவிட்டுப் பேசலாம்” என்கிறார் விளக்கமாக.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பெரியார் நூலக விவகாரம்: 'விசாரணைக்கு தயார்; திமுக ஆட்சியில் முறைகேடு நடைபெறவில்லை'- உதயநிதி

'முரசு' புயலில் சிக்கி உயிர் இழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்...

CM Chandrababu: “తక్షణమే ఆదుకోండి”.. కేంద్ర హోంమంత్రి అమిత్‌ షాకు సీఎం చంద్రబాబు లేఖ

CM Chandrababu: ఆంధ్రప్రదేశ్‌లో సంభవించిన వరుస తుఫాన్ల విధ్వంసంపై ముఖ్యమంత్రి నారా...