17
October, 2026

A News 365Times Venture

17
Saturday
October, 2026

A News 365Times Venture

“போதைப்பொருளுக்கு எதிராகப் பேசுவோரின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி” – பஞ்சாப் அரசைச் சாடும் அமித் ஷா

Date:

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பகவந்த் மான் ஆவார்.

பஞ்சாப்பில் போதைப்பொருள் அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் அந்த மாநில அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

“தற்போது பஞ்சாப் மாநிலம் போதைப்பொருள் புழக்கம், கேங்க்ஸ்டர் வன்முறைகள் மற்றும் குற்றங்களின் அச்சுறுத்தல்களால் கடுமையாகத் தவித்துக்கொண்டிருக்கிறது.

பஞ்சாப் மக்களின் பாதுகாப்பிற்கு இறுதியாக யார் பொறுப்பேற்பார்கள்? என்பதுதான் பகவந்த் மான் அரசின் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வியாகும்.

போதை பொருள்

தற்கொலை… கொலை…

திர்பாவில் நெருக்கடி தாங்க முடியாமல் ஒரு தந்தை விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டதும், மான்சாவில் போதைப்பொருளுக்கு எதிராகக் குரல் கொடுத்த பர்விந்தர் சிங் ஜோட்டா பகல் நேரத்திலேயே படுகொலை செய்யப்பட்டதும் பஞ்சாபின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்த தீவிரக் கேள்விகளை எழுப்பியுள்ளன.

பர்விந்தரின் தந்தை, ‘ஆம் ஆத்மி’ அரசு மற்றும் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் பஞ்சாப் அரசிடம் விளக்கம் கேட்கவுள்ளது.

பாதுகாப்பே கேள்விக்குறி

பஞ்சாப்பில் போதைப்பொருள் வர்த்தகம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.

மேலும் போதைப்பொருளுக்கு எதிராகப் பேசுபவர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.

பகவந்த் மான் அவர்களே, பஞ்சாப் மக்களுக்கு வெற்று வாக்குறுதிகள் தேவையில்லை. பதில்கள்தாம் தேவை. அறிவிப்புகள் வேண்டாம், பலன்களே வேண்டும்.

போதைப்பொருள் நெட்வொர்க்குகள் மீது தீர்க்கமான நடவடிக்கைகள் பாய வேண்டும். குற்றவாளிகளுக்குக் கிடைக்கும் அரசியல் பின்னணி குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எங்களுடைய ஆட்சி…

பஞ்சாப் மக்களிடம் ஒன்றை இன்று மீண்டும் நினைவூட்டுகிறேன். பஞ்சாப்பில் எங்களது ஆட்சி அமையும்போது, போதைப்பொருள் அற்ற, கேங்க்ஸ்டர்கள் அற்ற மற்றும் பாதுகாப்பான பஞ்சாப்பை உருவாக்க முழுமையாக உழைப்போம்.

எங்களின் இலக்கு மிகத் தெளிவானது. போதைப்பொருள் வர்த்தகத்தின் மீதான அதிரடித் தாக்குதல், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது,

குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் எந்தவொரு குடிமகனும் அச்சத்தின் நிழலில் வாழ நிர்ப்பந்திக்கப்படாத சட்டத்தின் ஆட்சி!” என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார் அமித் ஷா.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഒരാളെ തുറുങ്കിലടച്ചാല്‍ ആയിരക്കണക്കിന് അഭിജീതുമാരും നേഹമാരും സമരത്തിലുണ്ട്; പ്രകാശ് രാജ്

തിരുവനന്തപുരം: ഒരു അഭിഷേകിനെയും ഒരു നേഹയെയും അറസ്റ്റ് ചെയ്താല്‍ ആയിരക്കണക്കിന് അഭിജീതുമാരും...

Bhindi Health Benefits: బెండకాయ జిగురును చూసి దూరం పెడుతున్నారా? ప్రయోజనాలు తెలిస్తే షాకే..!

Bhindi Health Benefits: బెండకాయ ఇష్టమే అయినా.. అందులోని జిగురు అంటే...

നേഹ ബോറ എവിടെ? ദല്‍ഹി പൊലീസ് എങ്ങോട്ട് കൊണ്ടുപോയി എന്ന് വിവരമില്ല

ന്യൂദല്‍ഹി: ദല്‍ഹിയില്‍ നടന്ന ലെഹ്‌രാ ദോ തിരംഗ മാര്‍ച്ചിനിടെ ദെല്‍ഹി പൊലീസ്...

"திட்டங்களை அறிவித்து, அதில் ஊழல்கள் செய்ததால்தான் தோற்றீர்கள்" – ஸ்டாலினைச் சாடும் ஆதவ் அர்ஜுனா

இன்று கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.இந்த...