11
October, 2026

A News 365Times Venture

11
Sunday
October, 2026

A News 365Times Venture

டெல்லி: "எங்க கூட்டிட்டு போறாங்கன்னு தெரியல" – போலீஸ் ஜீப்பில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட CPM MP

Date:

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜான் பிரிட்டாஸ் , கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலபாரதி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்ட சிபிஎம் மூத்த தலைவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்திருகின்றனர்.

டெல்லி போராட்டம்

கைது செய்யப்பட்ட தலைவர்கள் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டப்போது எம்.பி ஜான் பிரிட்டாஸ் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறது.

அந்த வீடியோவில் பேசியிருக்கும் எம்.பி ஜான் பிரிட்டாஸ், “சத்ரசால் மைதானத்தில் எங்களைச் சுமார் 30-45 நிமிடங்கள் அடைத்து வைத்திருந்த பிறகு, டெல்லி காவல்துறை எங்களை ஜீப்பில் ஏற்றி எங்கோ அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.

எங்கு செல்கிறோம் என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை. நான், முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட மூத்த சிபிஎம் தலைவர்களை ஜீப்பில் அழைத்துச் செல்கின்றனர். டெல்லியை மாறி மாறி சுற்றிக்கொண்டிருக்கிறோம். முன்னாள் முதலமைச்சருக்கே (பினராயி விஜயன்) இந்த நிலைமை என்றால், இந்த நாட்டில் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்?

சிபிஎம் தலைவர்களை ஜீப்பில் அழைத்து செல்லும் காவல்துறை
சிபிஎம் தலைவர்களை ஜீப்பில் அழைத்து செல்லும் காவல்துறை

எங்களிடம் எதுவும் சொல்லாமல் காவல்துறையினர் அழைத்துச் செல்கின்றனர். டெல்லி முழுவதும் இப்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அடிப்படை குடியுரிமை கூட இங்கு இல்லை. மோடியும், அமித்ஷாவும் ஞானேஷ் குமாரைப் பாதுகாக்கிறார்கள்” என்று வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഫോര്‍ട്ട് ഹുഡ് കൊലയാളിയുടെ വധശിക്ഷ ലൈവ് സ്ട്രീം ചെയ്യുമെന്ന് യു.എസ്: വധശിക്ഷ സ്വീകാര്യമല്ലെന്ന് മാര്‍പാപ്പ

വാഷിങ്ടണ്‍ ഡി.സി: വധശിക്ഷ അനുവദനീയമല്ലെന്നും അത് വ്യക്തിയുടെ അന്തസിന് നേരെയുള്ള ആക്രമണമാണെന്നും...

Mohammed Shami: భువీని సెలెక్ట్ చేసి.. నన్ను దూరం పెట్టారు: మహ్మద్ షమీ ఎమోషనల్ కామెంట్స్

భారత క్రికెట్ జట్టులో సీనియర్ పేసర్ల పునరాగమనంపై చర్చ జోరుగా సాగుతోంది....

എസ്.ഐ.ആര്‍ വിരുദ്ധ പ്രതിഷേധം: കൂട്ടത്തടങ്കലുകളെക്കുറിച്ച് ആശങ്ക പങ്കുവെച്ച് യു.എന്‍ ഹ്യൂമന്‍ റൈറ്റ്‌സ്

  ജനീവ: ഇന്ത്യയില്‍ മുഖ്യതെരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷണര്‍ ഗ്യാനേഷ് കുമാറിനും എസ്.ഐ.ആറിനുമെതിരെ നടക്കുന്ന...

தேர்தல் ஆணையம் Vs காங்கிரஸ்: 'ஜனநாயகக் காவலா? அரசியல் லாபத்திற்கா?' – ஓர் அலசல்

SIR விவகாரப் போராட்டம்வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) விவகாரத்தில் தலைமைத்...