6
October, 2026

A News 365Times Venture

6
Tuesday
October, 2026

A News 365Times Venture

' எந்தப் போராட்டத்தையும் தூண்டிவிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை.!' – என்ன சொல்கிறார் மனோ தங்கராஜ்?

Date:

நேற்று சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே செவிலியர்கள் நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டது பேசுபொருளாகியிருந்தது. இந்தப் போராட்டத்தில் திமுகவின் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டதும் பேசுபொருளானது.

போராட்டத்தில் மனோ தங்கராஜ்

இந்த விவகாரம் தொடர்பாக மனோ தங்கராஜையே தொடர்புகொண்டு பேசினோம், ‘ஒரு போராட்டத்தில் யார் கலந்துகொள்ள வேண்டும் யார் கலந்துகொள்ளக்கூடாது என்பதை அரசும் காவல்துறையும் தீர்மானிக்கக் கூடாது. தொழிற்சங்கங்களின் ஆலோசகர்களாக ஆதரவாளர்களாக இருப்பவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வது வழக்கமே.

இந்த வழக்கம் கூட அரசுக்கும் காவல்துறைக்கும் தெரியவில்லை. என்னுடைய அரசியல் சட்ட பாதுகாப்பு இயக்கத்தின் ஆதரவை போராடும் செவிலிய சங்கத்தினர் கோரினர். அதனால் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்துகொண்டேன். முன்னாள் மந்திரியாக இருந்தால் எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்ளக் கூடாதா? ஒரு ஜனநாயக சக்தியாக முன்பும் எத்தனையோ போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறேன். அதேமாதிரிதான் இந்தப் போராட்டத்திலும் கலந்துகொண்டேன். எந்தப் போராட்டத்தையும் தூண்டிவிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

செவிலிய சகோதரிகள் சமவேலைக்கு சம ஊதியம் உட்பட அடிப்படைக் கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகள்தான் இங்கே கவனம் பெற வேண்டும்’ என்றவரிடம்,

‘கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் செவிலியர்களின் கோரிக்கை ஏன் நிறைவேற்றிக் கொடுக்கவில்லை?’ என்றேன்,

‘கடந்த காலத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். இப்போதுள்ள கதையை பேசுங்கள். நான் பால்வளத்துறை அமைச்சராக இருந்தேன். அந்தத்துறை சார்ந்த போராட்டத்தில் கலந்துகொண்டால் கூட குறைசொல்லலாம். இப்போது ஏன் இப்படி விமர்சிக்கிறார்கள் என புரியவில்லை. போராடும் உரிமையும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் உரிமையும் எல்லாருக்கும் இருக்கிறது. இந்த அரசுதான் திறனற்று செயல்பட்டிருக்கிறது. காலையில் இடைத்தேர்தலை வைத்துக்கொண்டு தலைநகரில் நடு இரவில் நான்காயிரத்துக்கும் அதிகமான பெண்களை கைது செய்ய துணிந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இவர்களின் நிர்வாகத் திறனற்றத் தன்மை அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

GST Council: అక్టోబర్ 7న జరగాల్సిన జీఎస్టీ సమావేశం వాయిదా.. మళ్లీ ఎప్పుడంటే..!

జీఎస్టీ కౌన్సిల్ 57వ సమావేశం మరోసారి వాయిదా పడింది. అక్టోబర్ 7న...

ಏಷ್ಯನ್ ಗೇಮ್ಸ್ ಕ್ರೀಡಾಪಟುಗಳಿಗೆ ಸನ್ಮಾನ: 8 ಪದಕ ವಿಜೇತರಿಗೆ ನಗದು ಬಹುಮಾನ ಘೋಷಣೆ

ಬೆಂಗಳೂರು, ಅಕ್ಟೋಬರ್,06,2026 (www.justkannada.in) ಏಷ್ಯನ್ ಗೇಮ್ಸ್ 2026ರಲ್ಲಿ ದೇಶ ಹಾಗೂ...

കേരളത്തില്‍ യു.ഡി.എഫ് സര്‍ക്കാര്‍ നടപ്പാക്കുന്നത് ആര്‍.എസ്.എസ്-ബി.ജെ.പി അജണ്ട: പിണറായി വിജയന്‍

കോഴിക്കോട്: കേരളത്തിലെ കോണ്‍ഗ്രസ് നേതൃത്വത്തിലുള്ള യു.ഡി.എഫ് സര്‍ക്കാര്‍ ആര്‍.എസ്.എസ്-ബി.ജെ.പി അജണ്ട നടപ്പാക്കുകയാണെന്ന്...