20
September, 2026

A News 365Times Venture

20
Sunday
September, 2026

A News 365Times Venture

“தமிழ்நாட்டில் இப்போது பல பவர் சென்டர்கள் உருவாகிவிட்டன" – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

Date:

புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “புதுச்சேரியை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட கட்சி தற்போது தமிழ்நாட்டிலும் எங்கள் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி தனித்துப் போட்டியிடுவதற்கான தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தமிழ்நாட்டு மக்கள் புதிய மாற்றத்தை விரும்பியே புதிய சக்தியை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் எந்த மாற்றமும் நிகழவே இல்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது.

முதல்வர் விஜய்

குறிப்பாக போதைப்பொருட்கள் புழக்கம், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் மற்றும் சிவகங்கையில் நடந்த இரட்டைக்கொலை போன்ற சம்பவங்கள் மக்களிடையே பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஊழலற்ற ஆட்சி என்று கூறிக்கொண்டே துறைசார்ந்த பல திட்டங்களில் முறைகேடுகள் நடக்கிறது. மதுபானக் கொள்கை மற்றும் புதிய நிறுவனங்களுக்கு ஆணை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை.

விளையாட்டுத் துறையில் அடிப்படை வசதிகளே இன்னும் முழுமையடையாத நிலையில், கோடிக்கணக்கில் செலவிட்டு ரேஸ் டிராக் (Race Track) அமைப்பது தேவையற்ற ஒன்று. இங்குள்ள நிறுவனங்களை வெளிநாடு சென்று சந்தித்து ஒப்பந்தம் செய்து, கணக்கு காட்டப்படுகிறதே தவிர, புதிய முதலீடுகள் பெரிய அளவில் வரவில்லை. தமிழ்நாட்டில் இப்போது பல பவர் சென்டர்கள் உருவாகிவிட்டன. சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளைப் பேசாமல் தனிநபர் விமர்சனங்களிலேயே நேரத்தை விரயம் செய்கிறார்கள். எனவே, மக்கள் நம்பிக்கையைப் பெற்று நேர்மையான அரசியலை முன்னெடுப்பதே எங்கள் நோக்கம்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

റോഡില്ലെങ്കില്‍ വോട്ടില്ലെന്ന് നാട്ടുകാര്‍; ആവശ്യങ്ങള്‍ അപേക്ഷയായി മുന്നോട്ട് വെക്കണമെന്ന് കേന്ദ്രമന്ത്രി: പ്രതിഷേധം

  ഗുണ: റോഡ് നിര്‍മാണം വൈകുന്നതില്‍ പ്രതിഷേധിച്ച് കേന്ദ്രമന്ത്രി ജ്യോതിരാദിത്യ സിന്ധ്യയുടെ...

Garba Row: గర్బాలో ముస్లింల ఎంట్రీపై వివాదం.. నుదిటిపై తిలకం తప్పనిసరి!

Garba Row: ముంబైలో బోరివలిలో జరుగుతున్న భారీ గర్బా కార్యక్రమంలో ముస్లింల...

ಕಸ್ತೂರಿ ರಂಗನ್ ವರದಿ: ಜನಾಭಿಪ್ರಾಯ ಆಧರಿಸಿ ನಿರ್ಧಾರ : ಸಿಎಂ ಡಿ.ಕೆ.ಶಿವಕುಮಾರ್

ಸಕಲೇಶಪುರ, ಸೆ 20: ಕಸ್ತೂರಿ ರಂಗನ್ ವರದಿ ಜಾರಿ ವಿಚಾರದಲ್ಲಿ...

ഐ.ഡി.എസ്.എഫ്.കെയിലെ സിനിമാ വിലക്ക്: കേന്ദ്രത്തിനെതിരെ കേരളം; തീരുമാനം പുനപരിശോധിക്കണമെന്ന് മന്ത്രി പി.സി. വിഷ്ണുനാഥ്

തിരുവനന്തപുരം: അന്താരാഷ്ട്ര ഡോക്യുമെന്ററി-ഹ്രസ്വചലച്ചിത്ര മേളയായ ഐ.ഡി.എസ്.എഫ്.കെയിൽ 31 സിനിമകൾക്ക് ഒരു കാരണവും...