21
August, 2026

A News 365Times Venture

21
Friday
August, 2026

A News 365Times Venture

Delimitation: "தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’ என ராகுல் கூறியது இவரைத்தானா?"- விஜய்யை சாடிய திமுக

Date:

சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை நடவடிகைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் விஜய் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற ‘தென் மாநில முதல்வர்கள்’ மாநாட்டில் தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று உறுதியாக பேசாமல் ‘தொகுதி மறுவரையறையால் எந்த ஒரு மாநிலமும் பாதிக்கப்படக்கூடாது’ என்று வலியுறுத்தி பேசியிருக்கிறார்.

முதல்வரின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் இதுதொடர்பாக முதல்வர் விஜய்யை திமுக ஐடி விங் விமர்சித்து பதிவிட்டிருக்கிறது.

Vijay – Amit Shah

திமுக ஐடி விங் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ஒரே வாரத்தில் தொகுதி மறுவரையரை விவகாரத்தில் பல்டி அடித்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்!

தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’ என ராகுல்காந்தி கூறியது இவரைத்தானா?

கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தவெகவின் இந்த இரட்டை வேட நாடகத்தை கேள்வி கேட்பார்களா? இல்லை இதற்கும் முட்டுக்கொடுப்பார்களா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழகம் வந்த ராகுல் காந்தி, “பாஜக-வின் தொகுதி மறுவரையறை மசோதாவை யார் ஆதரித்தாலும் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்கிறவர்கள்தான். தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்குத் துரோகம் செய்கிறவர்கள்தான்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தமிழ்நாட்டு மக்கள் மீதும் தமிழ்நாட்டின் எதிர்காலம் மீதும் தாக்குதல் நடத்த யார் அனுமதித்தாலும் அவர்கள் நவீன காலத்தின் எட்டப்பர்கள். 21-ம் நூற்றாண்டின் எட்டப்பர்கள்தான்” என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಆ.26 ರಂದು ಕೆಆರ್ ಎಸ್ ಗೆ ಮುತ್ತಿಗೆ: ವಾಟಾಳ್ ನಾಗರಾಜ್ ಘೋಷಣೆ

ಮಂಡ್ಯ,ಆಗಸ್ಟ್,20,2026 (www.justkannada.in):  ತಮಿಳುನಾಡಿಗೆ ರಾಜ್ಯ ಸರ್ಕಾರ ಕಾವೇರಿ ನೀರು ಹರಿಸುತ್ತಿರುವುದನ್ನು...

ഇറാനെതിരായ സാമ്പത്തിക ഉപരോധം; ട്രംപിന്റെ പ്രഖ്യാപനത്തിനെതിരെ ചൈന; പ്രഖ്യാപനം ചൈനയെ ബാധിക്കുമെന്ന് വിലയിരുത്തൽ

ബെയ്ജിങ്: ഇറാനെ ലക്ഷ്യമിട്ട് യു.എസ് പ്രസിഡന്‍റ് പ്രഖ്യാപിച്ച സാമ്പത്തിക നടപടികളെ എതിർത്ത്...

50 గంటల బ్యాటరీ, 42ms లో లేటెన్సీతో రూ.1,899కే iQOO Buds లాంచ్.. గేమర్లకు బెస్ట్ TWS.!

iQOO Buds: భారత మార్కెట్లో తన ఆడియో ఉత్పత్తుల విభాగాన్ని ఐక్యూ...

ರೇಣುಕಾಸ್ವಾಮಿ ಕೊಲೆ ಕೇಸ್: ಸತ್ಯಸಂಗತಿ ನೂರಕ್ಕೆ ನೂರರಷ್ಟು ಬಹಿರಂಗಪಡಿಸುತ್ತೇನೆ ಎಂದು ಒಪ್ಪಿಕೊಂಡ ಆರೋಪಿ

ಬೆಂಗಳೂರು,ಆಗಸ್ಟ್.20,2026 (www.justkannada.in): ರೇಣುಕಾಸ್ವಾಮಿ ಕೊಲೆ ಪ್ರಕರಣಕ್ಕೆ ಸಂಬಂಧಿಸಿದಂತೆ ಸತ್ಯವಾದ ಸಂಗತಿಯನ್ನ...