7
October, 2026

A News 365Times Venture

7
Wednesday
October, 2026

A News 365Times Venture

காவிரி விவகாரம்: பிசுபிசுத்த கன்னட அமைப்பினரின் போராட்டம் – ஆதரவு கொடுக்காத கர்நாடக மக்கள்!

Date:

மேகதாது அணை கட்டவும், காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் கன்னட அமைப்பினர் இன்று அறிவித்த மாநிலம் தழுவிய பந்த்-திற்கு கர்நாடக மக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்காமல் போயிருக்கிறது.

கன்னட அமைப்பினர் போராட்டம்

காவிரி நீரைப் பங்கிடுவதில் கர்நாடகா அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்னை தொடர்ந்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், மேகதாதுவில் காவிரி நதியை தடுத்து புதிய அணை கட்டவும் கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.

தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து உத்தரவிட்டு வருவதை கர்நாடக அரசு அலட்சியப்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக அணைகளில் நிரம்பிய நீரை வேறு வழியில்லாமல் தமிழகத்திற்கு திறந்துவிட்டது, கர்நாடகா அரசு.

காவிரி ஆறு
காவிரி ஆறு

இந்நிலையில் கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய பந்த் நடத்த உள்ளதாகவும் அதற்கு பொதுமக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், பள்ளிக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஆதரவு தர வேண்டுமென்று அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு ஒரு சில அமைப்புகள் மட்டுமே அதரவு தெரிவித்தன.

கர்நாடகாவில் இன்று பள்ளி, கல்லூரிகள், கடைகள், நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம்போல இயங்கின. தமிழக எல்லையில சில இடங்களில் சிறிது நேரம் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. மைசூர், அத்திப்பள்ளி உள்ளிட்ட சில இடங்களில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. நீலகிரி மாவட்டத்திலிருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அதே நேரம், கர்நாடகவிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்திலிருந்தும் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக பெங்களூருக்கு பேருந்துகள் சென்றன.

இந்த நிலையில், போராட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜ் ஆதரவாளர்கள் கர்நாடக காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇലക്ടറല്‍ റോള്‍ അല്ല, ചിക്കന്‍ റോളാണ് പ്രശ്നം; രാഹുലിന്റെ ഭക്ഷണത്തിനെതിരെ വിദ്വേഷ പ്രചാരണവുമായി സൈബര്‍ സംഘികള്‍

ന്യൂദല്‍ഹി: മുഖ്യ തെരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷണര്‍ ഗ്യാനേഷ് കുമാറിന്റെ രാജിയും വോട്ടര്‍ പട്ടികയുടെ...

`பாஜகவின் கைக்கூலிதான் தேர்தல் ஆணையம்..!' – டெல்லி எதிர்க்கட்சிகள் பேரணியில் தமிழ்நாடு எம்.பி-க்கள்

டெல்லியில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற...

WI Vs IND: వెస్టిండీస్‌తో మొదటి టీ20 మ్యాచ్.. టాస్ గెలిచి బౌలింగ్ ఎంచుకున్న భారత్..

భారత్, వెస్టిండీస్ మధ్య లక్నోలోని ఏకనా క్రికెట్ స్టేడియంలో తొలి టీ20...

ಮೈಸೂರು ದಸರಾ ಹಿನ್ನೆಲೆ: ಕಾಯ್ದಿರಿಸದ ವಿಶೇಷ ರೈಲುಗಳ ಸಂಚಾರಕ್ಕೆ ನಿರ್ಧಾರ

ಮೈಸೂರು,ಅಕ್ಟೋಬರ್,6,2026 (www.justkannada.in): ಮೈಸೂರು ದಸರಾ ಹಬ್ಬದ ಪ್ರಯುಕ್ತ ಪ್ರಯಾಣಿಕರ ಹೆಚ್ಚುವರಿ...