26
September, 2026

A News 365Times Venture

26
Saturday
September, 2026

A News 365Times Venture

மீனாட்சியம்மன் கோயில் கோயில் நில விவகாரம்; ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கைது

Date:

மதுரை மாநகர் கோரிப்பாளையம் ஹக்கிம் அஜ்மல்கான் சாலையில் அசோதா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் அழகர் கோயிலுக்கு சேவை செய்வதற்காக கடந்த 1930 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகள்  கடந்த 2016 ஆம் ஆண்டு மதுரை வடக்கு முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன் ஆகியோர் சொத்துரிமையை நீக்கி, இராமாயி ஆயியார் உள்ளிட்டோரின் பெயரில் சட்டவிரோதமாக பட்டா மாற்றம் செய்ததாக புகார் எழுந்தது. இதில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அரசன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், முன்னாள் வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கையும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு, இடைக்காலத் தடையாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையி்ல் நீதிமன்றத் தடையை மறைத்து 16.04.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார்பதிவாளர் அலுவலகத்தில், சார்பதிவாளர் அனந்தராமன் மூலம் பொது அதிகார ஆவணம் பதிவு செய்யப்பட்டதாகவும், அதனடிப்படையில் 19.07.2021 அன்று திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சார்பதிவாளர் பிரசாந்த் சந்தான கருப்பன் மூலம் நில அடமானப் பத்திரமும் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அன்பழகன்

இது தொடர்பாக மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின் பேரில் இராமாயி ஆயியார், செந்தமிழ்ச் செல்வி, பிரேமா, ராஜ்குமார், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, முன்னாள் வி.ஏ.ஒ அரசன், முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், இளையராஜா, அனிஷ், அனந்தராமன், கவிதா, பிரகாஷ், காளிக்குமார் மற்றும் பிரசாந்த் சந்தான கருப்பன் ஆகிய 19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து முதற்கட்ட விசாரணை தொடங்கிய மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்த நபர்களின் உண்மைத் தன்மை குறித்து உரிய ஆவணங்களை கேட்டு புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பினர்.

கைது செய்யப்பட்டுள்ள இளையராஜா

இதனையடுத்து கறம்பக்குடியை சேர்ந்த ராஜ்குமார், உசிலம்பட்டியை சேர்ந்த இளையராஜா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் 2016 ஆம் ஆண்டு மதுரை வடக்கு வட்டாட்சியராகவும், தற்போதைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருமான அன்பழகனை  தேனி மாவட்டத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு சேவை செய்வதற்கான 60 கோடி மதிப்பிலான அறக்கட்டளை சொத்து பத்திரப்பதிவு விவகாரத்தில் அடுத்தடுத்து அதிகாரிகளையும் காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಅ. 15ರಂದು ಶ್ರೀರಂಗಪಟ್ಟಣ ದಸರಾ ಉದ್ಘಾಟನೆ: ಅ.11ರಿಂದ ಕಾವೇರಿ ಆರತಿ

ಮಂಡ್ಯ,ಸೆಪ್ಟಂಬರ್,26,2026 (www.justkannada.in): ಐತಿಹಾಸಿಕ ಹಿನ್ನೆಲೆಯುಳ್ಳ ಶ್ರೀರಂಗಪಟ್ಟಣ ದಸರಾ ಮಹೋತ್ಸವವನ್ನು ಅಕ್ಟೋಬರ್...

தாராபுரம்: திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் | Photo Album

தாராபுரம்: "30 நிமிடங்களில் 32 முறை திமுக என்று பேசியிருக்கிறார் முதல்வர்"...

Ethanol Car: పెట్రోల్‌తో పని లేదు.. 100 శాతం ఇథనాల్‌తో నడిచే కారు.. అక్టోబర్‌లోనే లాంచ్..

భోపాల్‌లో నిర్వహించిన ఒక రాష్ట్ర స్థాయి కార్యక్రమంలో కేంద్ర రోడ్డు రవాణా,...