1
October, 2026

A News 365Times Venture

1
Thursday
October, 2026

A News 365Times Venture

"தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்தான்" – தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி விமர்சனம்

Date:

மாமல்லபுரத்தில் இன்று (ஆகஸ்ட்.1) நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “பாஜக-வின் தொகுதி மறுவரையறை மசோதாவை யார் ஆதரித்தாலும் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்கிறவர்கள்தான். தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்குத் துரோகம் செய்கிறவர்கள்தான்.

ராகுல் காந்தி

தமிழக மக்களின் வாக்குகளைப் பறிக்கும் அதிகாரத்தை சதித் திட்டத்துடனேயே தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வருகிறது பாஜக.

தமிழ்நாட்டு மக்கள் மீதும் தமிழ்நாட்டின் எதிர்காலம் மீதும் தாக்குதல் நடத்த யார் அனுமதித்தாலும் அவர்கள் நவீன காலத்தின் எட்டப்பர்கள். 21-ம் நூற்றாண்டின் எட்டப்பர்கள்தான்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

எந்த ஒரு தமிழரும் தொகுதி மறுவரையறை ஆதரிக்கக் கூடாது. ஒவ்வொரு தமிழரும் தொகுதி மறுவரையை எதிர்க்க வேண்டும். ஒவ்வொரு தமிழ்நாட்டு கட்சியும் தேசியக் கட்சியும் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

തൃണമൂല്‍ കോണ്‍ഗ്രസിന്റെ മരവിപ്പിച്ച നാല് അക്കൗണ്ടുകള്‍ പ്രവര്‍ത്തിപ്പിക്കാന്‍ അനുമതി നിഷേധിച്ച് സുപ്രീം കോടതി

  ന്യൂദല്‍ഹി: ഭൂമി വിതരണ അന്വേഷണവുമായി ബന്ധപ്പെട്ട് മരവിപ്പിച്ച അക്കൗണ്ടുകള്‍ പ്രവര്‍ത്തിപ്പിക്കാന്‍...

புதுச்சேரி: அமைச்சருக்கு கொலை மிரட்டல்! – தவெக ஆதரவு எம்எல்ஏ மீது 7 பிரிவுகளில் வழக்கு; முழு பின்னணி

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் `லிஃப்ட்' தருவதாகக் கூறி பெண் ஒருவர் பாலியல்...

Flydubai: మహిళలతో కరచాలనానికి కో-పైలట్ ఎందుకు నిరాకరించాడు? కారణమిదేనా?

దుబాయ్ నుంచి టెల్ అవీవ్ వెళ్తున్న ఫ్లైదుబాయ్ విమానానికి ఘోర ప్రమాదం...

ಡಿಸ್ಟ್ರಿಕ್ ಜಡ್ಜ್‌ ಕಾರಿಗೆ ಆಟೋ ಡಿಕ್ಕಿ: ಓರ್ವ ಸಾವು, ಇಬ್ಬರಿಗೆ ಗಾಯ

ಮಂಗಳೂರು,ಅಕ್ಟೋಬರ್‌,1,2026 (www.justkannada.in): ದಕ್ಷಿಣ ಕನ್ನಡ ಜಿಲ್ಲಾ 1ನೇ ಹೆಚ್ಚುವರಿ ಜಿಲ್ಲಾ...