10
July, 2026

A News 365Times Venture

10
Friday
July, 2026

A News 365Times Venture

திண்டுக்கல்: குடிநீர் தட்டுப்பாடு; காலி குடங்களுடன் சாலை மறியலில் இறங்கிய பெண்கள்!

Date:

திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 41 மற்றும் 42-வது வார்டுகளில் வாட்டர் டேங்க் ரோடு மற்றும் மேட்டுப்பட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீரும் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே வழங்கப்படுவதால், அன்றாடத் தேவைகளுக்குக்கூட தண்ணீர் இன்றி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடமும், சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினர்களிடமும் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், குடிநீர் உடனடியாக வழங்கக் கோரியும் 30-க்கும் மேற்பட்ட பெண்கள், இன்று (09.07.2026) திண்டுக்கல் – மதுரை சாலையில் காலி குடங்களுடன் திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலி குடங்கள்

இந்த போராட்டத்தால் திண்டுக்கல் – மதுரை சாலையில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இது குறித்துத் தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இப்பகுதிக்கு உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும், சீரான குடிநீர் விநியோகத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.  இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

മമതയ്ക്ക് തിരിച്ചടി; മുതിര്‍ന്ന മൂന്ന് തൃണമൂല്‍ എം.പിമാര്‍ ബി.ജെ.പിയില്‍

  കൊല്‍ക്കത്ത: പശ്ചിമ ബംഗാള്‍ നിയമസഭാ തെരഞ്ഞെടുപ്പിലെ തൃണമൂല്‍ കോണ്‍ഗ്രസിന്റെ പരാജയത്തിന്...

Musi Riverfront Project: రూ.7,345 కోట్ల పరిపాలనా అనుమతి.. 21 కి.మీ. మేర అభివృద్ధి పనులకు గ్రీన్ సిగ్నల్.!

Musi Riverfront Project: హైదరాబాద్ నగర ప్రతిష్ఠాత్మక మూసీ రివర్‌ఫ్రంట్ డెవలప్‌మెంట్...

മെഡിക്കല്‍ കോളേജില്‍ ഒരു സംഘടനയും ഭക്ഷണം വിതരണം ചെയ്യേണ്ടതില്ല, അത് സര്‍ക്കാരിന്റെ ഉത്തരവാദിത്തം: ജി. സുധാകരന്‍

  ആലപ്പുഴ: മെഡിക്കല്‍ കോളേജ് കോമ്പൗണ്ടുകളില്‍ രാഷ്ട്രീയ പാര്‍ട്ടികളോ മറ്റ് സംഘടനകളോ...

`கல்விக்கூடங்கள் அரசியல் மேடையோ புகழ் பரப்பும் இடமோ அல்ல; இனி யாருக்கும்..!' – அமைச்சர் ராஜ்மோகன்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்...