1
July, 2026

A News 365Times Venture

1
Wednesday
July, 2026

A News 365Times Venture

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே மோதல்: 'Open War' ஆக மாறுமா? என்ன பிரச்னை? |Full Summary

Date:

இந்தியாவின் எல்லை நாடுகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான். இப்போது இந்த இரண்டு நாடுகளும் முட்டி, மோதிக்கொண்டிருக்கின்றன.

இந்த மோதல் 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தானால் முதன்முதலில் தொடங்கப்பட்டது. அந்தத் தாக்குதலின் தொடர்ச்சியே இப்போதைய தாக்குதல்களும்.

என்ன தான் காரணம்?

2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தது தாலிபான். அப்போதில் இருந்து பாகிஸ்தானுக்குள் ‘தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்’ (TTP) அமைப்பின் பயங்கரவாதத் தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன… இந்த அமைப்பிற்கு ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் ஆதாரவும், அடைக்கலமும் தருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.

ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் தாக்குதல்

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறது ஆப்கானிஸ்தான்.

அடிப்படையில் டி.டி.பி மற்றும் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் – இரண்டும் வேறு வேறு அமைப்புகளே. ஆனால், கொள்கை, கலாச்சாரம் மற்றும் இன ரீதியாக அவை ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை.

ஆகையால் தான், பாகிஸ்தான் தாலிபான்கள் மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. மறைமுக அளவில், பாகிஸ்தான் குற்றச்சாட்டிலும் உண்மை இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தாக்குதல்களும், போர் நிறுத்தங்களும்…

கடந்த அக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பரஸ்பர தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சர்வதேச நாடுகளின் சமரச முயற்சி மூலம் அதே மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. போர் நின்றாலும், இரு நாடுகளின் எல்லைகளிலும் மோதல்கள் அவ்வப்போது வெடித்துகொண்டே தான் இருந்தன.

இந்தப் புகைச்சல் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி மீண்டும் மோதல்களாக மாறின. ஆப்கான் படைகள் பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தின.

இதற்குப் பதிலடியாக காபூல், காந்தகார் மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள ஆப்கான் ராணுவ முகாம்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஒருங்கிணைந்த வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தியது.

ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் தாக்குதல்

கடந்த மார்ச் மாதம், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் காபூலில் உள்ள ஒரு போதைப்பொருள் மறுவாழ்வு மையம் பாதிக்கப்பட்டு, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 260-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது. இது அப்போது பெரிய குற்றச்சாட்டாக பார்க்கப்பட்டது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டிற்கு, “நாங்கள் ராணுவ முகாம்களை மட்டுமே தாக்கினோம். மக்களை குறிவைக்கவில்லை. ஆப்கானிஸ்தான் பலி எண்ணிக்கையை மிகைப்படுத்தி காட்டுகிறது” என்று மறுப்பு தெரிவித்தது பாகிஸ்தான்.

அதன் பின், மார்ச் மாதமே, ரம்ஜான் பண்டிகையையொட்டி, கத்தார், சவூதி அரேபியா, துருக்கி நாடுகளின் முயற்சியால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இப்போதைய காட்சிகள்…

இந்தத் தற்காலிக போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையே பெரிய மோதல்கள் எதுவும் ஏற்படவில்லை.

ஆனால், கடந்த ஜூன் 28, 29 தேதிகளில் பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத குழுக்களின் மீது வான்வழி தாக்குதலை நடத்தியது. அதில் சில பொதுமக்களும் பாலியாகினர்.

இதனால், ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை திருப்பி தாக்க தொடங்கியிருக்கின்றன.

ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் தாக்குதல்

பாகிஸ்தானுக்குள் எப்படி டி.டி.பி ஊடுருவுகிறது?

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே இருக்கும் 2,600 கி.மீ நீளமுள்ள இந்த எல்லைக் கோடு – துரந்த் எல்லைக் கோடு. இந்தப் பகுதி கரடுமுரடான மலைப்பகுதிகளைக் கொண்டது. இங்கே பாகிஸ்தான் கண்காணிப்பது மிகக் கடினம். இதை தான் டி.டி.பி பயன்படுத்தி கொள்கின்றன.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையோரப் பகுதியான கைபர் பக்துன்வா நீண்டகாலமாக தீவிரவாத அமைப்புகளின் முக்கியத் தளமாக இருந்து வருகிறது. இங்கே வாழும் பஷ்தூன் மக்கள் வாழும் எல்லையோரப் பகுதிகளைக் கைப்பற்றி, அங்குள்ள பாகிஸ்தான் அரசை வீழ்த்துவதே டி.டி.பி-ன் நோக்கம் என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

பாகிஸ்தான் ஆப்கான் தாலிபான்களின் உறவுகளை விரும்புகிறது தான். ஆனால், டி.டி.பி இந்த உறவிற்கு குறுக்கே நிற்கிறது.

பாகிஸ்தானின் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மோதல் வெறும் தெற்காசியாவோடு முடிந்துவிடாது. அணு ஆயுத பலம் கொண்ட, 24 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தான் போன்ற ஒரு நாடு நீண்டகாலப் போரில் சிக்குமேயானால், அது ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் சீர்குலைத்து, தீவிரவாதக் குழுக்களுக்குச் சாதகமாக அமைந்து, ஒரு மாபெரும் நெருக்கடியை உருவாக்கிவிடும்.

இதனால்தான் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே இந்தச் சூழலை ஒரு ‘முழுமையான திறந்தவெளிப் போர்’ (Open War) என்று பாகிஸ்தான் விவரித்து வருகிறது.

இம்ரான் கான்
இம்ரான் கான்

திடீரென ஏன்?

2021-ம் ஆண்டே, ஆப்கானிஸ்தான் ஆட்சி தாலிபான்களின் கைகளுக்கு மாறிவிட்டது. பிறகு ஏன், கடந்த ஆண்டில் இருந்து பிரச்னை என்கிற கேள்வி இங்கே எழுகிறது அல்லவா?

தாலிபான்கள் முதலில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராகவும், ஜெனரல் பஜ்வா ராணுவத் தளபதியாகவும் இருந்தனர்.

அப்போது ஆப்கான் தாலிபான்களின் மத்தியஸ்தத்தில் பாகிஸ்தான் அரசுக்கும் டி.டி.பி அமைப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து, தற்காலிகப் போர்நிறுத்தமும் ஏற்பட்டது.

ஆனால், அதற்குப் பின் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய ராணுவத் தலைமை பொறுப்பேற்றதும் அணுகுமுறை முற்றிலும் மாறியது.

புதிய பாகிஸ்தான் அரசு டி.டி.பி-யுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வீண் என்று கருதுகிறது.

அதற்கு பதிலாக, பாகிஸ்தான் உலக நாடுகளுடன் தொடர்புகளையும் வலுப்படுத்தியும், விரிவுப்படுத்தியும் வருகிறது. இதற்கு அமெரிக்கா உடனான உறவு, சவுதி அரேபியா உடனான உடன்படிக்கைகள் சாட்சி.

இந்த உறவுகள் மூலம் டி.டி.பி தொல்லை போன்ற பிரச்னைகளைக் கையாண்டு கொள்ளலாம் என்று கணக்குப் போடுகிறது பாகிஸ்தான்.

ட்ரம்ப் - ஷெபாஸ் ஷெரீப்
ட்ரம்ப் – ஷெபாஸ் ஷெரீப்

பொருளாதாரத்திற்கும் ஆபத்து

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மோதல்கள் அந்த இரு நாடுகளுடன் முடிந்துவிடவில்லை. கடந்த அக்டோபர் மாதம் முதல் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பாதைகள் மூடப்பட்டுவிட்டது.

இதனால், ஆப்கானிஸ்தான் இப்போது வர்த்தகத்திற்காக ஈரானை முழுமையாக நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த மோதலைப் பயன்படுத்தி, உலகளாவிய தீவிரவாத நோக்கம் கொண்ட ‘ஐஎஸ்கேபி’ (ISKP) போன்ற இதர பயங்கரவாத அமைப்புகள் இப்பிராந்தியத்தில் கால்பதிக்க முயலும். இது உலகிற்கே ஆபத்தானது.

தீர்வு தான் என்ன?

இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான தாக்குதலின் தீர்விற்கு அரசியல் நிபுணர்கள் முன்வைக்கும் பார்வை…

கடந்த ஆண்டு முதல் கத்தார், துருக்கி, சவூதி அரேபியா மற்றும் சமீபத்தில் சீனா போன்ற நாடுகள் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த முயன்று வருகின்றன.

இந்த மோதலுக்குப் பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு என்பதை இரு நாடுகளும் தற்போது உணர்ந்துள்ளன.

ஆனால், இரு நாடுகளின் தலைவர்களும் ஊடகங்களில் பேசும் கடுமையான, உணர்ச்சிவசப்படக்கூடிய வார்த்தைகள் பேச்சுவார்த்தையை முடக்குகின்றன.

ஆகையால், அவற்றை குறைத்துக்கொண்டு, ஆக்கபூர்வமாக பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்பதே இந்த மோதலுக்கு சரியான தீர்வு.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

അന്‍സിബയുടെ പരാതിയില്‍ കഴമ്പുണ്ട്; ‘ജിഹാദി’ വിളി തമാശയെന്ന പൊലീസ് റിപ്പോര്‍ട്ട് തള്ളി കോടതി

കൊച്ചി: നടിയും എ.എം.എം.എ മുന്‍ ജോയിന്റ് സെക്രട്ടറിയുമായ അന്‍സിബ ഹസന്റെ പരാതിയില്‍...

ಮೈಸೂರು ಚಾಮುಂಡಿ ಬೆಟ್ಟಕ್ಕೆ ಭೇಟಿ ನೀಡಿ ಪೂಜೆ ಸಲ್ಲಿಸಿದ ಸಚಿವ ಯತೀಂದ್ರ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಮೈಸೂರು,ಜುಲೈ,1,2026 (www.justkannada.in): ಮೈಸೂರಿನ ಚಾಮುಂಡಿ ಬೆಟ್ಟಕ್ಕೆ ಜಿಲ್ಲಾ ಉಸ್ತುವಾರಿ ಸಚಿವ...

ഉമര്‍ ഖാലിദിന്റെ തടവ് ജനാധിപത്യത്തിനേറ്റ കളങ്കം; ആരോപണങ്ങള്‍ ശരിയെങ്കില്‍ കോടതിയില്‍ തെളിയിക്കാത്തത് എന്തുകൊണ്ടെന്ന് ശശി തരൂര്‍

ന്യൂദല്‍ഹി: ഉമര്‍ ഖാലിദിന്റെ തടവ് നമ്മുടെ ജനാധിപത്യത്തിന് മേലുള്ള കളങ്കമാണെന്ന് കോണ്‍ഗ്രസ്...