19
June, 2026

A News 365Times Venture

19
Friday
June, 2026

A News 365Times Venture

நிறுத்தப்பட்ட சட்டமன்ற ஒளிபரப்பு: "முழு நேரலை..முழு நேரலை…அத்தனையும் உருட்டா சார்! – அதிமுக கேள்வி

Date:

தமிழக சட்டமன்றத்தின் 2-வது கூட்டத்தொடர் இன்று (ஜூன்.19) நடைபெற்றது. மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. சட்டப்பேரவை நேரலை நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றம்

இந்நிலையில் இதுகுறித்து அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் விமர்சித்து பதிவிட்டிருக்கிறது. “முழு நேரலை.. முழு நேரலை… அத்தனையும் உருட்டா சார்! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம். எந்த வாக்குறுதியும் நிறைவேத்துற மாதிரி ஐடியாவே இல்ல போல, அப்படித்தானே சார்!” என்று பதிவிட்டிருக்கிறது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த சட்டப்பேரவை நேரலை மீண்டும் தொடரும் என்று உறுதியளித்திருந்தார்.

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

முதல்வர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டார் என்று அமைச்சர்கள் பெருமிதம் தெரிவித்த அடுத்த நாளே, விவாதம் தொடங்கியவுடன் நேரலை நிறுத்தப்பட்டுள்ள சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சட்டப்பேரவை நேரலை நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

നീറ്റ് ക്രമക്കേട്; ആത്മഹത്യ ചെയ്ത കുട്ടികളുടെ കുടുംബങ്ങള്‍ക്ക് ഒരു കോടി രൂപ നഷ്ടപരിഹാരം നല്‍കണം: മോദിക്ക് തുറന്ന കത്തുമായി സി.ജെ.പി

ന്യൂദല്‍ഹി: പ്രധാനമന്ത്രി നരേന്ദ്ര മോദിക്ക് തുറന്ന കത്തുമായി കോക്രോച്ച് ജനതാ പാര്‍ട്ടി...

ಮೊಬೈಲ್ ಕಸಿದು ಪರಾರಿಯಾಗಲು ಯತ್ನಿಸಿದ್ದ ಕಳ್ಳ ಸ್ಥಳದಲ್ಲೇ ಸಾವು

ಬೆಂಗಳೂರು, ಜೂನ್​​,19,2026 (www.justkannada.in):  ಮೊಬೈಲ್ ಕದ್ದು ಬೈಕ್ ನಲ್ಲಿ ಪರಾರಿಯಾಗುತ್ತಿದ್ದ...

ലക്ഷ്യം പുതുയുഗ കേരളം; വി.ഡി. സതീശന്‍ സര്‍ക്കാരിന്റെ ആദ്യ ബജറ്റ്

തിരുവനന്തപുരം: യു.ഡി.എഫ് സര്‍ക്കാരിന്റെ ആദ്യ ബജറ്റ് നിയമസഭയില്‍ അവതരിപ്പിച്ച് ധനവകുപ്പിന്റെ കൂടി...