9
June, 2026

A News 365Times Venture

9
Tuesday
June, 2026

A News 365Times Venture

`அப்பாவை அரசியலுக்கு வராதனு சொன்னார் எம்.ஜி.ஆர்; விஜய் சார் என்னை அரசியலுக்கு வரவச்சிட்டார்'- தினேஷ்

Date:

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவி ஏற்றுள்ள நிலையில், சமீபத்தில் தவெகவில் சேர்ந்த நடிகர் தினேஷிடம் பேசினோம்.

“’நண்பன்’, ‘காவலன்’ படங்கள்  வெளியான சமயங்களில் விஜய் டிவியில் டைரக்‌ஷன் டீம்ல ஒர்க் பண்ணிட்டிருந்தேன். இந்தப் படங்களின் ஸ்பெஷல் எபிசோடுகள் ஷூட் பண்ணினோம். அப்ப விஜய் சாரை கூட்டத்துல ஒருத்தனா பாத்திருக்கேன்.

அதேபோல விஜய் ரசிகர்களை வச்சு ஒரு ஷோ பண்ணினோம். அந்தச் சமயம் அவருடைய ரசிகர் மன்றங்கள் கூட எனக்கு தொடர்பு கிடைச்சது.

பிறகு தவெகவை அவர் தொடங்கின மறுநாளே அவர் மேல ஒரு நம்பிக்கை வந்தது.

தினேஷ்

ஒரு ஐகானிக் தலைவரா உருவெடுப்பார்னு தோண, அப்பவே கட்சியில சேர்கிற ஆசையும் வந்திச்சு.

தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னாடிதான் முறைப்படி கட்சியில் சேர்ந்தேன். அப்பக்கூட சிலர் இந்த சமயத்துல  போய் ஒரு கட்சியில சேர்றது நல்லதானு கேட்டாங்க.

எனக்குதான் ஆரம்பத்துல இருந்தே அவர்மீது நம்பிக்கை இருந்ததுனு சொன்னேனே, அதனால எதையும் காதுல வாங்கிக்கலை.

தேர்தல் முடிந்த பிறகும் கூட அவரது வெற்றியை பலரும் சரியா கணிக்காத போது, சரியா 48 மணி நேரத்துக்கு முன்னாடி தனிப்பெரும் கட்சியா வருவார்னு சொல்லி வீடியோ போட்டேன்.

எங்க வீட்டுல என் அப்பாவுக்கு ஆரம்பத்துல அரசியல் ஆசை இருந்தது. எம்.ஜி.ஆர் கிட்ட போயிருக்கார். நல்லா படிச்சிருக்கியே, அரசு வேலை கிடைக்கும் போய் பாருன்னு சொல்லிட்டார். அதே மாதிரி அடுத்த சில தினங்கள்லயே கூட்டுறவுத்துறையில் வேலை கிடைக்க அப்பா ஒதுங்கிட்டார்.

இப்ப அப்பாகிட்ட கேட்டேன். உனக்கு எது சரினு படுதோ செய்னு சொல்லிட்டார். விஜய் சார் கிட்ட வந்து சேர்ந்துட்டேன்.

இந்த நேரத்துல தலைவர்கிட்ட என்னுடைய கூடுதலான ஒரு மகிழ்ச்சியையும் பகிர்ந்துக்க ஆசைப்படுறேன். என்னுடைய சொந்த மாவட்டத்துல இருந்து கீர்த்தனாங்கிற சகோதரியை அமைச்சர் ஆக்கியதற்குதான் அந்த நன்றி” என்கிறார் தினேஷ்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

‘നവകേരള രക്ഷാപ്രവര്‍ത്തനം’: മുന്‍ മുഖ്യമന്ത്രിയുടെ ഗണ്‍മാന്‍ ഉള്‍പ്പെടെയുള്ളവര്‍ക്ക് മുന്‍കൂര്‍ ജാമ്യം

തിരുവനന്തപുരം: നവകേരള യാത്രയ്ക്കിടെ ആലപ്പുഴയില്‍ വെച്ച് യൂത്ത് കോണ്‍ഗ്രസ് പ്രവര്‍ത്തകരെ മര്‍ദിച്ച...

அனல் பறந்த ஆலோசனைக் கூட்டம்: காங்கிரஸை வறுத்தெடுத்த மாநிலக் கட்சிகள்; 'அன்போடு' ராகுல் காந்தி பதில்!

டெல்லியில் ஜூன் 8 (நேற்று) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில்,...

India Rank: ప్రపంచ టాప్-5 సైనిక శక్తుల్లో భారత్.. భారీగా అణ్వాయుధాలు, రక్షణ వ్యయం..

India Rank: ప్రపంచ దేశాలు రక్షణ వ్యయాన్ని భారీగా పెంచినట్లు స్టాక్‌హోమ్...

ಡಿಜಿಟಲ್ ಅರೆಸ್ಟ್ ಹೆಸರಿನಲ್ಲಿ ವಂಚನೆ: ಸರ್ಕಾರಿ ನೌಕರನಿಗೆ 83.82 ಲಕ್ಷ ರೂ. ಪಂಗನಾಮ

ಬಾಗಲಕೋಟೆ, ಜೂ.9,2026 (www.justkannada.in): ‘ಡಿಜಿಟಲ್ ಅರೆಸ್ಟ್ ಹೆಸರಿನಲ್ಲಿ ಸೈಬರ್ ಚೋರರು...