18
May, 2026

A News 365Times Venture

18
Monday
May, 2026

A News 365Times Venture

'ஆயிரம் ஆண்டுகளாய் புறக்கணிக்கப்பட்டவர்களை.!' – திருமாவுக்கு முதல்வர் பதவி கேட்கும் சிந்தனைச்செல்வன்

Date:

தவெக தலைவர் ஆட்சி அமைக்கப்போகிறாரா… அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி ஆட்சி அமைக்க கோரப்போகிறாரா என்கிற கேள்வி எழுந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனி ரூட்டைப் பிடித்துள்ளது.

முதல் அறிக்கை

இன்று காலை 8 மணியளவில் விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வெளியிட்டிருந்த அறிக்கையில், “தலைவர் திருமாவை முதல்வராக முன்மொழிந்து அதை நோக்கி நகர்த்துவதுதான் திராவிட கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய சரியான நிலைப்பாடாக இருக்குமென தோன்றுகிறது.

சிந்தனைச் செல்வன் – திருமாவளவன்

மாற்றம் வேண்டுமென தமிழக மக்கள் உண்மையிலேயே விரும்பியிருந்தால் தன் வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்துள்ள அப்பழுக்கற்ற அனுபவம் வாய்ந்த தலைவர் திருமாவை முதல்வர் ஆக்குவதுதான் சரியாக இருக்கும்.

சமூக நீதி மண் இது என்று மார்தட்டிக்கொள்பவர்கள் தமிழ்நாட்டைக் காப்பாற்ற இப்படி ஒரு முடிவெடுப்பது காலத்தின் கட்டாயம்.

இது தமிழகத்தின் மீது படிந்துள்ள அனைத்து கறைகளையும் துடைத்தெறிந்து விடும். இருபெரும் எதிர் துருவ திராவிடக்கட்சிகளின் இடையே இது மட்டும்தான் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் குறைந்தபட்ச செயல்திட்ட ஒப்பந்தமாக இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இரண்டாம் அறிக்கை

இதையடுத்து மீண்டும் காலை 9 மணியளவில் பதிவிட்டுள்ள பதிவில், “மாற்றம் என்பது வேறு. புரட்சி என்பது வேறு.

கட்சியை மாற்றுவது மாற்றம். கட்டமைப்பையே புரட்டுவது புரட்சி.

அதிமுகவிற்குப் பதில் திமுக, திமுகவிற்கு மாறாக தவெக என்பது மாற்றம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அதிகாரமையத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டவர்களை அதிகாரத்தில் அமர்த்துவதுதான் புரட்சி.

புரட்சியை செய்யட்டும் தமிழ்நாடு” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഒ.ബി.സി വിഭാഗങ്ങൾക്കുള്ള സംവരണം നിർത്തലാക്കി ബംഗാളിലെ ബി.ജെ.പി സർക്കാർ

കൊൽക്കത്ത: ഒ.ബി.സി വിഭാഗക്കാർക്കുള്ള സംവരണം നിർത്തലാക്കി ബംഗാളിൽ പുതുതായി അധികാരത്തിലേറിയ സുവേന്ദു...

ராகுல் காந்தி, பினராயி விஜயன் முன்னிலையில் வி.டி.சதீசன் கேரள முதல்வராக பதவியேற்பு Photo Album

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பினராயி விஜயன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்...

Nalgonda: రక్తసంబంధానికే మాయని మచ్చ.. ఆస్తి కోసం ఎంత పని చేశారంటే..!

ఆస్తుల కోసం రక్త సంబంధీకులే పగవాళ్లుగా మారుతున్నారు. సొంత వారిని హత్య...