7
May, 2026

A News 365Times Venture

7
Thursday
May, 2026

A News 365Times Venture

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக – அதிமுக?' – நிலவரம் என்ன?

Date:

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டிருக்கிறது.

விஜய்

தவெகவுக்கு ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இல்லை. அவர்களிடம் 108 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து விஜய் காங்கிரஸின் ஆதரவையும் கோரியிருந்தார். காங்கிரஸூம் தவெகவுக்கு தங்களின் முழு ஆதரவையும் வழங்கியிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மதியம் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார்.

ஆனால், ஆளுநர் தரப்பில் விஜய்யிடம் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்களின் பட்டியலை வழங்குமாறு கேட்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் நேற்று மாலையிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஒரு தகவல் தீயாய் பரவியிருந்தது. அதாவது திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கப் போவதாகவும் அதற்கான வேலைகள் திரைமறைவில் வேகமாக நடப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர்களும் அரசியல் விமர்சகர்களாலும் கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.

விஜய்
விஜய்

இதைத்தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக விஜய்க்கு வழங்கப்பட்ட முதல்வருக்கான கான்வாய் பாதுகாப்பு நள்ளிரவு முதல் விலக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். விஜய் தனது பட்டினப்பாக்கம் அலுவலகத்திலிருந்து நீலாங்கரை வீட்டிற்கு கான்வாய் பாதுகாப்பின்றியே சென்றிருக்கிறார்.

இந்நிலையில், இன்று திமுக – அதிமுக இடையேயான உடன்பாடு பற்றி அடுத்தக்கட்ட நகர்வுகள் தெரியவரும் எனத் தகவல்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

വീണ്ടും പിന്മാറ്റം, ഓപ്പറേഷൻ പ്രോജക്റ്റ് ഫ്രീഡം താത്കാലികമായി നിർത്തി യു,എസ്; സമാധാന ചർച്ചകൾ അവസാനിക്കുംവരെ ഇളവെന്ന് ട്രംപ്

വാഷിങ്ടൺ: ഇറാനുമായി ഉണ്ടാക്കാനൊരുങ്ങുന്ന കരാറിന്റെ പശ്ചാത്തലത്തിൽ ഹോർമുസിലെ സൈനിക നടപടികൾ താത്കാലികമായി...

DMK: కాంగ్రెస్‌ను నమ్మి భారీ మూల్యం చెల్లించుకున్నాము..

DMK: తమిళనాడు రాజకీయాల్లో బిగ్ ట్విస్టులు చోటుచేసుకుంటున్నాయి. ఇప్పటికే విజయ్ టీవీకే...

ഡി.എം.കെ സഖ്യം വിടില്ലെന്ന സൂചനകളുമായി സി.പി.ഐ.എം; സ്റ്റാലിനെ സന്ദർശിച്ച് നേതാക്കൾ

ചെന്നൈ: സർക്കാർ രൂപീകരിക്കുന്നതിന് ടി.വി.കെ നേതാവ് വിജയ് രാഷ്ട്രീയ പാർട്ടികളുടെയൊക്കെ പിന്തുണ...

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! – அமைகிறதா திமுக – அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில்...