24
April, 2026

A News 365Times Venture

24
Friday
April, 2026

A News 365Times Venture

“ரத்தம், வியர்வை சிந்தி நான் வளர்த்த கட்சி, இன்று..!"- ஆம் ஆத்மியிலிருந்து ராகவ் சதா விலகல்

Date:

ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி இருக்கின்றனர்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராகவ் சதா, ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால், சந்தீப் பாடக், அசோக் மிட்டல், ராஜேந்தர் குப்தா, விக்ரம் சாஹ்னி ஆகிய 7 எம்.பி-க்கள் ஆம் ஆத்மியில் இருந்து விலகியிருக்கின்றனர்.

ராகவ் சதா

இதில் எம்பி ராகவ் சதா ஆம் ஆத்மியில் இருந்து விலகி , பாஜகவில் இணைந்திருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், ராஜ்ய சபாவில் அக்கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்துவந்தவர் ராகவ் சதா.

ராகவ் சதா, நாடாளுமன்றத்தில் சாமானிய மக்களின் அன்றாடப் பிரச்னைகளை ஆணித்தரமாகப் பேசுவதன் மூலம் சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகி வந்தார்.

இதனிடையே ராகவ் சதாவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில் அவரை மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து அக்கட்சி நீக்கியது.

இந்நிலையில் ஆம் ஆத்மியில் இருந்து விலகியது தொடர்பாக பேசிய ராகவ் சதா, “ரத்தம், வியர்வையை சிந்தி, 15 ஆண்டுகளாக நான் வளர்த்தெடுத்த கட்சி அறநெறிகளில் இருந்து விலகிவிட்டது.

ஆம் ஆத்மி கட்சி நாட்டின் நலனுக்காக செயல்படாமல் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவே செயல்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

தவறான கட்சியில் சிக்கிக் கொண்ட சரியான நபர் என்ற மனநிலை சில ஆண்டுகளாக எனக்குத் தோன்றியது.

ஊழலை ஒழிக்க வந்த கட்சி, இப்போது ஊழல் கட்சியாகிவிட்டதால் விலகுகிறோம். ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரில் பெரும்பான்மையினர் எங்களிடம் உள்ளனர். ” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇറാനുമായുള്ള യുദ്ധം ഇസ്രഈലിന്റെ ആവശ്യപ്രകാരം; ഔദ്യോഗികമായി സ്ഥിരീകരിച്ച് യുഎസ്

വാഷിങ്ടണ്‍: ഇറാനെതിരെ അമേരിക്ക നടത്തിവരുന്ന സൈനിക നടപടികള്‍ (ഓപ്പറേഷന്‍ എപിക് ഫ്യൂറി)...

Telangana High Court: కేసీఆర్, కేటీఆర్, హరీష్‌రావుకు హైకోర్టులో ఊరట

Telangana High Court: బీఆర్ఎస్ అధినేత కల్వకుంట్ల చంద్రశేఖర్ రావు, పార్టీ...

ಚೆಲುವಾಂಬ ಆಸ್ಪತ್ರೆಗೆ ಭೇಟಿ: ಹತ್ತೇ ನಿಮಿಷದಲ್ಲಿ ರೋಗಿಗಳ ಬೇಡಿಕೆ ಪೂರೈಸಿದ ಸಂಸದ ಯದುವೀರ್‌

ಮೈಸೂರು, ಏಪ್ರಿಲ್,24,2026 (www.justkannada.in): ಇತ್ತೀಚಿನ ದಿನಗಳಲ್ಲಿ ಭಾರಿ ಸುದ್ದಿಯಾಗಿದ್ದ ಮೈಸೂರಿನ...