19
April, 2026

A News 365Times Venture

19
Sunday
April, 2026

A News 365Times Venture

Delimitation: "மதுரை கோடை வெயிலில் வெள்ளைச் சட்டைக்கு மீண்டும் மாறியதில் மகிழ்ச்சி" – PTR

Date:

நேற்று நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்ததையொட்டி, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…

“செவ்வாய்க்கிழமை இந்தியாவிற்கு ஒரு கருப்பு நாளாக அமைந்தது. ஆனால், நான் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வகையில் வெள்ளிக்கிழமை அதற்கான விடிவு காலம் பிறந்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதல் முறையாக அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட ஒரு மசோதா மக்களவையில் நிறைவேறாமல் தோற்றுப் போயுள்ளது. எந்தவித தர்க்கமும் இன்றி, வஞ்சகமான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தொகுதி மறுவரையறை

பொதுவாக தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் கிடைக்கும் குறுகிய கால நன்மைகளை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய கட்சிகள் கூட, அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கை கட்டுப்படுத்துவதற்காக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை நிலைநிறுத்தியுள்ளன.

இந்தியாவில் இன்னும் கொள்கை ரீதியான அரசியல் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கும், ஒரு ஒளிமயமான எதிர்காலம் குறித்த நம்பிக்கை இன்னும் இருக்கிறது என்பதற்குமான அடையாளம் இது.

நாம் எதிர்பார்த்துக் காத்திருந்த திருப்புமுனை இதுதான். தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியபோது, முதலமைச்சர் மாண்புமிகு திரு.ஸ்டாலின் அவர்கள், “தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று கூறினார்.

இன்று, நன்றியுடன் நான் சொல்லிக்கொள்கிறேன்: தமிழ்நாடு போராடியது, தமிழ்நாடு வென்றுவிட்டது. இந்தியா போராடியது, இந்தியா வென்றுவிட்டது.

பி.கு: மதுரையின் ஏப்ரல் மாதக் கோடை வெயில் கருப்புச் சட்டைகளுக்கு ஏற்றதாக இல்லாததால், மீண்டும் வெள்ளைச் சட்டைக்குத் திரும்பியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்”.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

രാജ്യത്തെ സ്ത്രീകളോട് മാപ്പുചോദിക്കുന്നു; പ്രതിപക്ഷത്തിന് തക്കതായ ശിക്ഷ ലഭിക്കും; രാജ്യത്തെ അഭിസംബോധന ചെയ്ത് പ്രധാനമന്ത്രി

ന്യൂദൽഹി: മണ്ഡല പുനർനിർണയ, വനിതാ സംവരണ ബില്ലുകൾ പരാജയപെട്ടതിന് പിന്നാലെ രാജ്യത്തെ...

Yuzvendra Chahal: ‘క్యూట్’ మెసేజ్ వివాదం.. చాహల్ తానియా ఛటర్జీపై పరువు నష్టం దావా వేసిన చాహల్

భారత క్రికెట్ జట్టు లెగ్ స్పిన్నర్ యుజ్వేంద్ర చాహల్ ప్రస్తుతం పంజాబ్...

ಮಹಿಳಾ ಮೀಸಲಾತಿಗೆ ನಮ್ಮ ವಿರೋಧವಿಲ್ಲ: ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಬೆಂಗಳೂರು, ಏಪ್ರಿಲ್ ,18,2026 (www.justkannada.in): ಮಹಿಳಾ ಮೀಸಲಾತಿಗೆ ನಮ್ಮ ವಿರೋಧವಿಲ್ಲ...

തൃണമൂലിനല്ലാതെ മറ്റാർക്ക്നൽകുന്ന വോട്ടും ബി.ജെ.പിക്കുള്ളത്: അഭിഷേക് ബാനർജി

കൊൽക്കത്ത: തൃണമൂൽ കോൺഗ്രസ് അല്ലാത്ത മറ്റേതൊരു പാർട്ടിക്ക് നൽകുന്ന വോട്ടും ബിജെപിക്കുള്ള...