11
March, 2026

A News 365Times Venture

11
Wednesday
March, 2026

A News 365Times Venture

"போர் தொடர்ந்தால் உலகளாவிய எண்ணெய் சந்தைக்கு பேரழிவு ஏற்படும்" – எச்சரிக்கும் சவுதி அராம்கோ CEO

Date:

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதல் நீடித்தால் உலகளாவிய எண்ணெய் சந்தைக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று சவுதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மேற்காசியாவில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பயன்படுத்தப்படும் பெட்ரோலியத்தில் சுமார் 20% இந்த கடல் வழியாகத்தான் செல்கிறது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்த போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அராம்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர்
சவுதி அராம்கோவின் தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர்

இந்த இடையூறு தொடர்ந்தால், உலகளாவிய எண்ணெய் சந்தைக்கு பேரழிவை ஏற்படுத்தும். எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், உலக பொருளாதாரத்திலும் கடுமையானத் தாக்கத்தை இது ஏற்படுத்தும்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಕೃಷಿ ಕ್ಷೇತ್ರದಲ್ಲಿ AI ಬಳಕೆ ಅಗತ್ಯ : ವಿಟಿಯು ಕುಲಪತಿ ಎಸ್. ವಿದ್ಯಾಶಂಕರ್

  ಮೈಸೂರು, ಮಾ.೧೦,೨೦೨೬ : ಕೃಷಿ ಸೇರಿದಂತೆ ವಿವಿಧ ಕ್ಷೇತ್ರಗಳಲ್ಲಿ ಕೃತಕ...

പെന്തക്കോസ്ത് സഭകളെ ക്രൈസ്തവ സഭാ വിഭാഗമായി അംഗീകരിക്കും

തിരുവനന്തപുരം: പെന്തക്കോസ്ത് സഭകളെ ക്രൈസ്തവ സഭാ വിഭാഗമായി അംഗീകരിക്കാന്‍ മന്ത്രിസഭാ യോഗത്തില്‍...

ಡಿಕೆಶಿ ಅತ್ಯಂತ ಯಶಸ್ವಿ ಅಧ್ಯಕ್ಷರು: ಪಕ್ಷ ಅಧಿಕಾರಕ್ಕೆ ತರುವುದೇ ಅವರ ಕನಸಾಗಿತ್ತು- ಸಚಿವೆ ಲಕ್ಷ್ಮೀ ಹೆಬ್ಬಾಳ್ಕರ್

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,10,2026 (www.justkannada.in): ಕೆಪಿಸಿಸಿ ಅಧ್ಯಕ್ಷರಾಗಿ ಡಿಕೆ ಶಿವಕುಮಾರ್ 6 ವರ್ಷ...