24
September, 2026

A News 365Times Venture

24
Thursday
September, 2026

A News 365Times Venture

தேனி: 'மலைகளில் கிரானைட் குவாரி அமைக்க அனுமதி, ஆனால் மாடு மேய்க்க அனுமதி இல்லையா' – சீமான் கேள்வி

Date:

கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி தேனி மாவட்டம் போடியில் உள்ள அடவுப்பாறை வனப்பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்தினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்தப் போராட்டத்திற்காக சுமார் 500 க்கும் மேற்பட்ட மலை மாடுகள் அழைத்து வரப்பட்டன. மாடுகளை மேய்த்துக் கொண்டு சீமான் செல்லும்போது போராட்டத்தை நிறுத்தச் சொல்லி வனத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாடுகள் வனப்பகுதிக்குள் நுழைவதற்குத் தடையாக பேரிகார்டுகளையும் வைத்து வழியை மறைத்தனர்.

மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட மாடுகள்

நாம் தமிழர் கட்சியினர் தடையை அகற்றச் சொல்லி பேரிகார்டுகளை பிடித்து இழுத்ததால் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பேரிகார்டுகளை அகற்றிவிட்டு மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றனர். இதனிடையே பத்திரிகையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “மலைகளில் கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கிறார்கள் மாடு மேய்ப்பதற்கு அனுமதி கொடுப்பதில்லை. இந்த காடு சிங்கம் புலிகளுக்கு மட்டும் தானா ஆடு மாடுகளை எங்கு கொண்டு போய் மேய்ப்பது?.

தேனியில் உள்ள மாடுகளுக்கு பெயரே மலை மாடுகள் தான். இதே மலைகளில் தான் ஆடு மாடுகளை மேய்த்து வந்தார்கள் வனத்துறை இதற்கு தடை விதித்தால் ஒரு லட்சமாக இருந்த மலை மாடுகள் தற்போது ஐந்தாயிரமாக சுருங்கி விட்டன. புதுகோட்டை, சிவகங்கை பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் காணாமல் போகிறது மாடு மேய்க்கும் கீதாரிகளின் நிலை மோசமாக இருக்கிறது.

தடையை மீறி மாடுகளை வனப்பகுதிக்குள் அழைத்து சென்றனர்.

வனப்பகுதிகளில் மாடுகள் மேய்க்க கூடாது எனில் மேய்ப்பதற்கு மாற்று இடம் வழங்கியிருக்க வேண்டும். அதைச் செய்யமால் மாடு மேய்ப்பதை தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மலைகளில் ஆடு மாடுகள் மேய்வதால் மலையில் தீ பற்றினாலும் அது பரவாமல் தடுக்கபடும். ஆடு மாடுகளின் சாணம் மண்ணிற்கு உரமாகும். காடு செழிப்படையும். மலைகளில் ஆடு மாடு மேய்ப்பதைத் தடுத்தால் திரும்பவும் மாடு மேய்க்கும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவோம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

കുടുംബ കലഹങ്ങള്‍ വേണ്ട; എ.ഐ ക്യാമറ നിയമ ലംഘന നോട്ടീസുകളില്‍ ചിത്രങ്ങള്‍ ഒഴിവാക്കാന്‍ എം.വി.ഡി

തിരുവനന്തപുരം: മോട്ടോര്‍ വാഹന വകുപ്പിന്റെ എ.ഐ ക്യാമറകള്‍ വഴിയുള്ള നിയമലംഘനങ്ങള്‍ പരിശോധിക്കുന്നതിനുള്ള...

“நாங்கள் யார் மீதும் போர் தொடுத்ததில்லை; எங்கள் மீது போர் திணிக்கப்பட்டது!” – ஐ.நா-வில் ஈரான் அதிபர்

ஈரான் போர் தொடர்ந்துகொண்டிருக்கும் இதே வேளையில், அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார் ஈரான் அதிபர்...

Japan Captain: వైభవ్ సూర్యవంశీ ఆడతాడని అనుకున్నా.. జపాన్ కెప్టెన్ అసంతృప్తి..

జపాన్‌తో జరిగిన చారిత్రాత్మక తొలి పురుషుల టీ20 మ్యాచ్‌లో భారత్ తరఫున...

ഗര്‍ബ നൃത്തത്തിന് വരുമ്പോള്‍ നിങ്ങളുടെ സഹോദരിമാരെയും പെണ്‍മക്കളെയും കൊണ്ടുവരൂ: മുസ്‌ലിം സ്ത്രീകള്‍ക്കെതിരെ ബലാത്സംഗ ഭീഷണിയുമായി ബി.ജെ.പി എം.എല്‍.എ

ഭോപാല്‍: മുസ്‌ലിം സ്ത്രീകള്‍ക്കെതിരെ ബലാത്സംഗഭീഷണിയുമായി ഭോപ്പാലിലെ ഹുസൂരില്‍ നിന്നുള്ള ബി.ജെ.പി എം.എല്‍.എ...