3
May, 2026

A News 365Times Venture

3
Sunday
May, 2026

A News 365Times Venture

புதுவை: "முதல்வர் ரங்கசாமி இறந்தால் அவரை சித்தராக வழிபடுவர்" – அமைச்சர் ஜான்குமார் சர்ச்சை பேச்சு

Date:

புதுச்சேரி முதல்வரான ரங்கசாமி, சேலம் அப்பா பைத்தியம் சாமிகளின் தீவிர பக்தர். கோரிமேட்டில் சேலம் அப்பா பைத்தியம் சாமிகளுக்கு கோயில் கட்டி, தினம்தோறும் பூஜைகளும், அன்னதானமும் செய்து வருகிறார். அதனால் முதல்வர் ரங்கசாமியின் தொண்டர்கள் அவரை வாழும் சித்தர் எனப் பேனர்களில் அடையாளப்படுத்துவார்கள்.

புதுச்சேரி கலைப் பண்பாட்டுத்துறையின் சார்பில் காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று சித்தர்கள் இலக்கிய மாநாட்டு ஆய்வரங்கம் நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், ஜான்குமார் உள்ளிட்டவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஜான்குமார்

அதில் பேசிய அமைச்சர் ஜான்குமார், “புதுச்சேரியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர் முதல்வர் ரங்கசாமி. அவர் எதைச் சொல்கிறாரோ அது நடக்கும். அவரிடம் ஆசி பெறுவதற்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் அப்பா பைத்தியம் சாமிகள் கோயிலுக்கு வந்துவிடுவார்கள்.

எதிர்காலத்தில் அவர் இறந்தபிறகு ஒருகோடி பேருக்கு மேல் அவரை சித்தராக வழிபடுவார்கள் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. அந்த அளவுக்கு அற்புதமான, ஆன்மிக முதல்வரை நாம் பெற்றிருக்கிறோம். அவர் புதுச்சேரியில் இருப்பதால் நிறைய பிரச்னைகள் தீர்வுபெற்று வருகிறது.

அதனால் சித்தர்கள் ஆய்வரங்கில் நம் மாநில முதல்வரையும் சேர்க்க வேண்டும்” என்றார். ஜான்குமாரின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

പശ്ചിമേഷ്യയിൽ അമേരിക്കയ്ക്ക് കനത്ത പ്രഹരം; 16 സൈനിക താവളങ്ങൾ തകർത്തെന്ന് റിപ്പോർട്ട്

ടെഹ്‌റാൻ: പശ്ചിമേഷ്യയിലെ സൈനിക നീക്കങ്ങളിൽ ഇറാനും സഖ്യകക്ഷികളും എട്ട് രാജ്യങ്ങളിലായി ചുരുങ്ങിയത്...

வேளாங்கண்ணி: சர்ச் முன்பு திரண்ட தொண்டர்கள்; ரத்தான விஜய் வருகை; விமர்சனத்துக்கு உள்ளான தவெக கோஷம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை எண்ணப்படுகிறது. எக்ஸிட் போல் கருத்துக்...

AP Govt Employee Promotions: ప్రభుత్వ ఉద్యోగులకు ప్రమోషన్ల అంశంలో గవర్నమెంట్ కీలక నిర్ణయం..

AP Govt Employee Promotions: ఆంధ్రప్రదేశ్ ప్రభుత్వ ఉద్యోగులకు ప్రమోషన్ల ప్రక్రియను...