12
March, 2026

A News 365Times Venture

12
Thursday
March, 2026

A News 365Times Venture

'பாஜக கூட்டணி இல்லை என்றனர்; இப்போது மிக்சர் சாப்பிடுகின்றனர்' – அதிமுக குறித்து செந்தில் பாலாஜி

Date:

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை கொடிசியா பகுதியில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நம் முதலமைச்சர் ஆளுமை மிக்க முதலமைச்சராக இருக்கிறார். கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை திமுக உறுப்பினர்களாக இணைக்க உள்ளோம்.

செந்தில் பாலாஜி

புதிய கட்சிகளுக்கு யாரும் செல்லவில்லை

தமிழக இளைஞர்கள் எங்களுடன் தான்  இருக்கிறார்கள். புதிய கட்சிகளுக்கு யாரும் செல்லவில்லை. யார் சென்றாலும் துணை முதலமைச்சர் சந்திப்பார். அந்த வகையில்தான் தவெகவில் இருந்து திமுக வந்த வைஷ்ணவி உள்ளிட்டோரை சந்தித்தார்.

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று அப்போதை முதலமைச்சர் சொன்னார். நம் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகையில் விடுபட்டவர்களுக்காக 10,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. விமான நிலையத்தில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தவர்களை இப்போது காணவில்லை. அதிமுக ஆட்சியில் பறிபோன உரிமைகளை, முதலமைச்சர் ஸ்டாலின் மீட்டுக் கொண்டிருக்கிறார்.

2026 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னவர்கள், இப்போது அதே பாஜகவுடன் அமைதியாக உட்கார்ந்துள்ளனர். டேபிளில் மிக்சர் வைத்திருந்தால் அதை சாப்பிட்டு கொண்டிருந்திருப்பார்கள். கோவையில் சுமார் 1,364 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ரூ .417 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை…

தேர்தல் நேரத்தில் வைத்துள்ள செயல்திட்டங்களை உங்களிடம் எப்படி சொல்ல முடியும். நாங்கள் தேர்தல் களத்தை எப்போதோ தொடங்கி விட்டோம். கோவை மாவட்டம் திமுகவின் கோட்டை. இங்கு  திமுகதான் இங்கு வெற்றி பெறும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಜೋಡಿ ಕೊಲೆ:  ಅರೋಪಿಗೆ ಜೀವಾವಧಿ ಶಿಕ್ಷೆ, ದಂಡ ವಿಧಿಸಿದ ಮೈಸೂರು ಕೋರ್ಟ್

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,11,2026 (www.justkannada.in): ಜಮೀನಿನಲ್ಲಿ ವ್ಯವಸಾಯ ಮಾಡುವ ವಿಚಾರಕ್ಕೆ ಸಂಬಂಧಿಸಿದಂತೆ ತನ್ನ...

അമിത് ഷാ ചര്‍ച്ച ചെയ്യേണ്ടത് സ്പീക്കറുടെ ഭരണഘടനാവിരുദ്ധമായ പെരുമാറ്റം; രാഹുല്‍ ഗാന്ധിയെ കുറിച്ചല്ല: കെ.സി. വേണുഗോപാല്‍

ന്യൂദല്‍ഹി: ആഭ്യന്തരമന്ത്രി അമിത് ഷാക്കെതിരെ രൂക്ഷവിമര്‍ശനവുമായി എ.ഐ.സി.സി ജനറല്‍ സെക്രട്ടറി കെ.സി....

`4 தொகுதிகள்; 3-ல் உதயசூரியன் சின்னம்' – மதிமுக-வை சரிகட்டிய திமுக!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தி.மு.க கூட்டணிக்குள் வேகமெடுக்க...

American Airlines: జస్ట్ 30 సెకన్లు హెడ్‌ఫోన్స్ లేకుండా వీడియో ప్లే.. ఎయిర్‌లైన్స్ రూల్స్ బ్రేక్ చేసిన మహిళకు షాక్

అమెరికన్ ఎయిర్‌లైన్స్ ఫ్లైట్‌లో హెడ్‌ఫోన్స్ లేకుండా వీడియో ప్లే చేసిన మహిళను...