11
March, 2026

A News 365Times Venture

11
Wednesday
March, 2026

A News 365Times Venture

“நான் ஒரு தீவிர இந்து; மதச்சார்பற்றவராக இருக்க முடியாது.." – RSS பாணியில் பேசிய அஸ்ஸாம் முதல்வர்!

Date:

“சோசலிசம்” மற்றும் “மதச்சார்பின்மை” என்ற சொற்களை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கான “பொற்காலம்” இது என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருக்கிறார். ‘தி எமர்ஜென்சி டைரீஸ் – இயர்ஸ் தட் ஃபோர்ஜ் எ லீடர்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை அன்று அஸ்ஸாமில் நடந்தது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “இந்த புத்தகம் அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் அனுபவங்களின் தொகுப்பாகும். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் 42-வது திருத்தத்தின் மூலம் “சோசலிசம்” மற்றும் “மதச்சார்பின்மை” என்ற இரண்டு சொற்களைச் சேர்த்ததன் மூலம் அரசியலமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது.

மோடி

அவசரநிலை அறிவிக்கப்பட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல அறிவுஜீவிகள் அரசியலமைப்பிலிருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற சொற்களை நீக்க இதுவே பொற்காலம் எனக் கூறியுள்ளனர். நாம் ஒரு முதிர்ந்த ஜனநாயகம்.

பிரிட்டிஷ் – அமெரிக்க அரசியலமைப்புகளிலிருந்து மதச்சார்பின்மை என்ற சொற்களை நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. பகவத் கீதையிலிருந்து நமது மதச்சார்பின்மையை எடுத்துக்கொள்வோம்.

நமது அரசியலமைப்பின் பிரிவு 14, ‘நாட்டில் யாருக்கும் எதிராக அரசு வேறுபட்ட முறையில் நடத்தப்படக்கூடாது’ என்று கூறுகிறது, அதுவே நமது மதச்சார்பின்மையின் அடித்தளமாகும். அதுதான் மதச்சார்பின்மையின் மிக உயர்ந்த நிலை.

பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பில் மதச்சார்பின்மை என்ற வார்த்தையை அறிமுகப்படுத்திய பிறகு, அது நீதிமன்றங்களாக இருந்தாலும் சரி, அறிவு சார்ந்து இயகுபவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் மேற்கத்திய பார்வையில் மதச்சார்பின்மையைக் காணத் தொடங்கினர்.

ஏனென்றால் மதச்சார்பின்மை என்ற சொல் இந்திய சூழலில் உருவாகவில்லை. எப்போதும் நாம் நடுநிலை வகித்ததில்லை. ஏனென்றால் நாம் இந்துக்களுடன் இருக்கிறோம், முஸ்லிம்களுடனும் இருக்கிறோம். இங்கே, மதச்சார்பின்மை என்பது ஒரு நேர்மறையான கருத்தாகும். நாம் நடுநிலையாக இருந்தால், சத்திரங்களுக்கு (அஸ்ஸாமில் உள்ள வைணவ மடங்கள்), நம்கர்களுக்கு (சமூக பிரார்த்தனை மண்டபங்கள்), கோயில்களுக்கு வேலை செய்ய முடியாது.

ஹிமந்தா பிஸ்வா சர்மா
ஹிமந்தா பிஸ்வா சர்மா

வேதங்களின் விஷயங்களைப் பற்றி விவாதிக்க முடியாது. கீதை பற்றி விவாதிக்க முடியாது. இப்போது, ​​ஹிமந்த பிஸ்வா சர்மா எப்படி மதச்சார்பற்றவராக இருக்க முடியும்?. நான் ஒரு தீவிர இந்து. நான் மதச்சார்பற்றவராக இருக்க முடியாது. இந்து மதத்தில், வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரு குடும்பம்) என்று எழுதப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு தீவிர இந்துவாக இருந்தால், வசுதைவ குடும்பகம் பற்றி சிந்திக்க வேண்டும்.

அதாவது நமது மதச்சார்பின்மை ஒருபோதும் மேற்கத்திய மதச்சார்பின்மையின் வரையறையால் ஈர்க்கப்படவில்லை. நாம் நடுநிலையானவர்கள் அல்ல. இந்தியா ஒரு ஆன்மீக நாடு என்பதால் நாங்கள் நேர்மறையாக இணைந்திருக்கிறோம். சோசலிசம் ஒருபோதும் இந்திய நாகரிகத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது மகாத்மா காந்தி பேசிய “பொருளாதார இலட்சியங்களான அறங்காவலர்” என்பதன் ஒரு பகுதியாகவோ இருந்ததில்லை. நமது நாகரிகத்தில், எந்தத் தலைவரும் சோசலிசம் பற்றிப் பேசவில்லை.

அது மோதலை அடிப்படையாகக் கொண்ட ஒரு சித்தாந்தம். அதனால்தான், மற்ற நாடுகளுடனான போட்டியில் நாம் பின்தங்கியுள்ளோம். அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட இந்த சோசலிசத்தை பா.ஜ.க அகற்ற வேண்டியதில்லை. பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோருடன் சேர்ந்து காங்கிரஸ் அதை ஏற்கெனவே அழித்து, நமது பொருளாதாரத்தில் தாராளமயமாக்கலைக் கொண்டு வந்துவிட்டது. பிரதமர் மோடியும், அடல் பிஹாரி வாஜ்பாயும் இந்த தாராளமயமாக்கல் தத்துவத்தை மேலும் எடுத்துச் சென்றிருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே
ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே

இதற்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, “அவசரநிலையின் போது காங்கிரஸ் அரசால் முகவுரையில் சேர்க்கப்பட்ட ‘சோசலிஸ்ட்’ மற்றும் ‘மதச்சார்பற்ற’ என்ற சொற்கள் நீடிக்க வேண்டுமா? அதை நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனப் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಜೋಡಿ ಕೊಲೆ:  ಅರೋಪಿಗೆ ಜೀವಾವಧಿ ಶಿಕ್ಷೆ, ದಂಡ ವಿಧಿಸಿದ ಮೈಸೂರು ಕೋರ್ಟ್

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,11,2026 (www.justkannada.in): ಜಮೀನಿನಲ್ಲಿ ವ್ಯವಸಾಯ ಮಾಡುವ ವಿಚಾರಕ್ಕೆ ಸಂಬಂಧಿಸಿದಂತೆ ತನ್ನ...

അമിത് ഷാ ചര്‍ച്ച ചെയ്യേണ്ടത് സ്പീക്കറുടെ ഭരണഘടനാവിരുദ്ധമായ പെരുമാറ്റം; രാഹുല്‍ ഗാന്ധിയെ കുറിച്ചല്ല: കെ.സി. വേണുഗോപാല്‍

ന്യൂദല്‍ഹി: ആഭ്യന്തരമന്ത്രി അമിത് ഷാക്കെതിരെ രൂക്ഷവിമര്‍ശനവുമായി എ.ഐ.സി.സി ജനറല്‍ സെക്രട്ടറി കെ.സി....

`4 தொகுதிகள்; 3-ல் உதயசூரியன் சின்னம்' – மதிமுக-வை சரிகட்டிய திமுக!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தி.மு.க கூட்டணிக்குள் வேகமெடுக்க...

American Airlines: జస్ట్ 30 సెకన్లు హెడ్‌ఫోన్స్ లేకుండా వీడియో ప్లే.. ఎయిర్‌లైన్స్ రూల్స్ బ్రేక్ చేసిన మహిళకు షాక్

అమెరికన్ ఎయిర్‌లైన్స్ ఫ్లైట్‌లో హెడ్‌ఫోన్స్ లేకుండా వీడియో ప్లే చేసిన మహిళను...