2
May, 2026

A News 365Times Venture

2
Saturday
May, 2026

A News 365Times Venture

“அதிமுக – பாஜக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது; திமுக வீட்டுக்கு போவது உறுதி'' – வானதி சீனிவாசன்

Date:

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதல்வர் ஸ்டாலின் அவர் நெருக்கடி காலகட்டத்தில் பட்ட கஷ்டங்களை மறந்து விட்டார் போல. திமுக அரசாங்கத்தை எதிர்த்து யார் சமூக வலைதளங்களில் பதிவிட்டாலும் கைது செய்யப்படுகிறார்கள்.

வானதி சீனிவாசன்

இது தனி நபர் உரிமையை மீறும் செயல். அவர்கள் நெருக்கடி  காலத்தில் அனுபவித்த துன்பங்களை எல்லாம், தற்போது மக்களை அனுபவிக்க வைக்கிறார்கள். சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது.

தமிழக மக்களின் மீது தாங்க முடியாத வரி சுமை ஏற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபரும் இந்த அரசாங்கத்தால் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  நெருக்கடி காலத்தின் ஒரு பகுதியில் தமிழகம் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. திமுக ஆரம்பத்தில் இருந்தே கல்வியில் அரசியல் செய்கிறது.

கல்வி

நாங்கள் ஒருபோதும் கல்வியில் அரசியல் செய்யவில்லை. தேசிய கல்விக் கொள்கை மிகவும் முக்கியமானது. தமிழ்நாடு அரசு இதில் முரணான கருத்துகளை கூறுகிறார்கள். மாநில அரசின் தோல்விக்கு மத்திய அரசின் மீது பழி போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை, சித்தாந்தம் இருக்கிறது. அந்தந்த கட்சிகள் அவரவர் சித்தாந்தத்தில் தெளிவாக இருக்கிறார்கள். அதிமுக – பாஜக கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது. இதை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது. தமிழகத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

பாஜக – அதிமுக கூட்டணி

திமுக மீது விடுதலை சிறுத்தைகள் எத்தனை முரண்பாடுகளை வைத்திருக்கிறார்கள். அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. அதுவே அதிமுக – பாஜக என்றால் உடனே விரிசல் என்பார்கள். 2026 தேர்தலில் எங்கள் கூட்டணி  வெற்றி பெறும். திமுக வீட்டுக்கு போவது உறுதி.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഡി.എം.കെ 180 ലേറെ സീറ്റുകള്‍ നേടും; ടി.വി.കെ പിളര്‍ക്കുക എ.ഐ.എ.ഡി.എം.കെ വോട്ടുകളെന്ന് ഡി.എം.കെ വക്താവ്

ചെന്നൈ: തമിഴ്‌നാട്ടില്‍ 180ലേറെ സീറ്റുകള്‍ നേടി വന്‍ ഭൂരിപക്ഷത്തോടെ ഭരണം നിലനിര്‍ത്തുമെന്ന്...

"இந்தியர்கள் வேண்டாம்..!" – தைவானில் அரசின் முடிவுக்குக் கிளம்பும் எதிர்ப்பும் எதார்த்த நிலையும்!

தைவானில் நிலவும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க, இந்தியாவுடன் தைவான் அரசு...

Tamil Nadu Politics: తమిళనాడులో రాజకీయ సంచలనం.. ‘విజయ్’ కింగ్ మేకర్‌గా మారతారా? మరో షాకింగ్‌ సర్వే!

Tamil Nadu Politics: తమిళనాడు రాజకీయాల్లో భారీ మార్పులకు దారితీసేలా ఒక...

ಮೇ 3 ರಂದು ‘ಕಾಯಕ ಸೇವಾ ಪ್ರಶಸ್ತಿ’ ಪ್ರದಾನ ಸಮಾರಂಭ

ಮೈಸೂರು,ಮೇ,1,2026 (www.justkannada.in): ಅನಿಕೇತನ ಸೇವಾ ಟ್ರಸ್ಟ್ ವತಿಯಿಂದ ಕಾಯಕ ಸೇವಾ...