22
September, 2026

A News 365Times Venture

22
Tuesday
September, 2026

A News 365Times Venture

“கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவில்..'' – காலிஸ்தான் குறித்து கனடா புலனாய்வு அறிக்கை

Date:

பல ஆண்டுகளாக, இந்தியா, கனடா நட்பு நாடுகளாக இருந்து வந்தது. ஆனால், காலிஸ்தான் நிர்வாகி நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியா மீது கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்ட, இந்த உறவில் விரிசல் விழுந்தது.

தற்போது கனடாவின் பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) வரை, கனடாவில் ஜி7 உச்சி மாநாடு நடந்தது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இத்தாலிய பிரதமர் மெலோனி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டிற்கு கனடா சென்ற மோடியை, கனடா பிரதமர் மார்க் கார்னி சந்தித்து பேசினார். இதில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சற்று புதுப்பிக்கப்பட்டது.

மோடி – மார்க் கார்னி | ஜி 7 மாநாடு

இந்த நிலையில், தற்போது, கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு சேவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கம் செயல்படுகிறது. அது கனடாவை தங்களது இயக்கத்தின் வளர்ச்சிக்காக, நிதி உதவி பெறும் இடமாகவும், இந்தியாவில் வன்முறைகளை கிளப்ப திட்டமிடும் இடமாகவும் பயன்படுத்தி வருகிறது. கனடாவில் சிறிய அளவில் தான் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இருக்கின்றனர்.

அமைதியாக காலிஸ்தான் நாட்டிற்காக போராடுவது கனடாவில் பயங்கரவாதிகளாக எடுத்துகொள்ளப்பட மாட்டார்கள்.

மேலும், கனடாவின் தேர்தலில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலையீடு இருந்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு; போலீஸார் பாதுகாப்புடன் நடைபெறும் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6...

TGPSC Syllabus Changes: సిలబస్‌ మార్పులపై TGPSC కీలక ప్రకటన..

TGPSC Syllabus Changes: తెలంగాణ పబ్లిక్ సర్వీస్ కమిషన్ (TGPSC) సిలబస్‌...

റോഡിന് വീതി കൂട്ടല്‍: അനധികൃത നിര്‍മാണമാരോപിച്ച്‌ കെട്ടിടങ്ങള്‍ പൊളിച്ചുനീക്കി ദല്‍ഹി പൊലീസ്

ന്യൂദല്‍ഹി: റോഡിന് വീതി കൂട്ടുന്നതിന്റെ ഭാഗമായി തെക്കന്‍ ദല്‍ഹിയിലെ ഛത്തര്‍പൂര് പ്രദേശത്തെ...

”நம்ம கட்சி திமுக கூடாரமா மாறிட்டு வருது தலைவரே…” – விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற தவெக நிர்வாகி

தூத்துக்குடி மாவட்ட த.வெ.கவில், புறநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் மதன் ராஜாவும்,...